புதிய பதிவுகள்

Tuesday, November 3, 2015

SEXUAL THERAPY மூலிகை சக்தி பயிற்சி.

ஆண்மைசக்தி,மணவாழ்வு,தாம்பத்ய உறவு,குழந்தை பாக்யம்,பாலியல் கல்விக்கான தெரபி,மூலிகை பயிற்சி.


நாள் – 28,29 நவம்பர் 2015.சனி,ஞாயிறு
நேரம் – காலை 9.30 முதல் 4.30 வரை.
கட்டணம் – ரூ.3,000/-  (பயிற்சி புத்தகம்,தேனீர்,உணவு,ரூ.1000 க்கான மூலிகை மருந்து உட்பட)
* திருமணமாகபோகும் (pre-marrage) - திருமணமான ஆண்கள் அனைவரும் கலந்துக்கொள்ளலாம்.


பயிற்சி இடம்,தொடர்புக்கு


சோலார் மணவாழ்வியல் ஆலோசனை மையம்,
பவ்டா திருமண மண்டபம் எதிரில்,
வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில் 629003,
செல் – 94436 07174.

www.sexpowerxtra.blogspot.com

Friday, February 15, 2013

முதல் உதவி நேரடி பயிற்சி FIRST AID (ALTERNATIVE MEDICINE) TRAINING

விபத்து,திடீரென நோய்வாய்படுதல்,விசக்கடி பாதிப்பு,அதிர்ச்சி,மயக்கம்,சுவாசம் நின்றுபோதல்,மாரடைப்பு,மூளைத் தாக்குதல்,போன்றவற்றிற்கு இயற்கை மூலிகை,சித்தா,ஆயுர்வேதிக், ஹோமியோபதி,லண்டன் மலர் மருத்துவம்,அக்குப்பிரசர்,யோக முத்திரைகள்,நவீன மருத்துவம் (அலோபதி)  மருத்துவங்கள் மூலம் முதலுதவி  பயிற்சி அளிக்கப்படும்.

நாள்   - 03-03-2013 ஞாயிறு காலை 10-4

இடம்  - வருவாய்துறை அலுவலர் சங்க கட்டிடம்,
               கலெக்டர் ஆபீஸ் அருகில்,
               நாகர்கோவில் – 629001
கட்டணம்  - ரூ 1500- (முதலுதவி கிட் (ரூ 1000- மதிப்பு),புத்தகம்,மதிய உணவு,அரசு அங்கீகார சான்றிதல் உட்பட)·  முதலுதவி பயிற்சியை தெரிந்து கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.

         பெயர் பதிவுக்கு

DR A.P.ARUL KUMARESAN , Msc,MS,Ph D.,

Solar ,
NAGERCOIL 629001
CELL -  94436 07174, 94896 20090.


நற்பணி மன்றங்கள்,ஆலயங்கள்,பள்ளிகள்,சுய உதவி குழுக்களுக்கு நேரடியாக வந்து பயிற்சி அளிக்கப்படும்.தொடர்பு கொளக.

Saturday, November 3, 2012

செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS
செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி      SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS

பயிற்சியின் நோக்கம்

♀♥♂   பாலுணர்வு, குழந்தைபேறு சம்மந்தமான உடற்கூறு, உயிரியல் கல்வி, உடலுறவு, பாலியல் உணர்வுகள், தாய்மை, மகப்பேறு தடுப்பு முறை இவற்றை அறிவியல் ரீதியாகக் புரிந்துகொள்ள செய்தல்.

 ♀♥♂ பாலியல் அறியாமை, அதைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம், பாலியல் பற்றிய தவறான அறிவு, பாலியல் குற்றங்களை களைய செய்யும் வழிவகைகள்.

♀♥♂ இல்லற இன்பம் மகிழ்ச்சியாக மாற, வாழ்நாள் முழுவதும் கணவன்-மனைவி காதலுடன் வாழ, திருமணமாகப் போகும் ஆணும், பெண்ணும் தெரிந்து கெள்ளவேண்டிய வாழ்க்கை ரகசியங்கள். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் நரகத்தில் விழாமல் தடுக்க...  இனிய தாம்பத்யம் பெற செக்ஸ் ஆலோசனைகள்.

♀♥♂  திருமண முன் தயாரிப்பு ஆலோசனைகள் வழிமுறைகள் (Pri-Marrital Counselling)

                    பாடத்திட்டம்

۞ பாலியல் மருத்துவ வரலாறு ۞ ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் - செயல்பாடுகள் ۞ சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி பாலியல் மருந்துகள்பாலியல் குறைபாடு - நலம் ۞ செக்ஸ் யோகா & எக்ஸஸைஸ் ۞ மாஸ்டர்ஸ் & ஜாண்சன் செக்ஸ்  மேனுவல் ۞  மருந்து மாத்திரையில்லாமல்
செக்ஸ் சக்தி பெறும் வழிகள் ۞ பாலியல் கலைகள் ۞ மனநலம் - வரலாறு ۞ பாலியல் பிரச்சனைகக்கான ஆலோசனை வழங்கும் வழிமுறைகள் ۞   தம்பதிகளின் மனோதத்துவம் ۞ மனநல சிகிச்சை முறைகள் ۞ திருமணம் மற்றும் குடும்ப ஆற்றுப்படுத்துதல்.


பாலியல் ஆலோசகர் பயிற்சி - இப்படிப்பின் பயன்கள்

♀♥♂  பாலியல் ஆலோசகர் (Sex Therapy) பயிற்சி முடித்தவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளது.

♀♥♂ குடும்ப நல ஆலோசனை மையம் தொடங்கி நடத்த உங்களை உயர்த்திக் கொள்ளலாம்.

♀♥♂ திருமண தம்பதியர்களில் பலர் தங்களது இல்லற பிரச்சனைகளை வெளியே சொல்ல இயலாமையால் பல பிரச்சனைகள் உண்டாகிறது. இதன் பலனாக அவர்கள் விவாகரத்து தேடி நீதி மன்றம் செல்கின்றனர். இவர்களுக்கு தகுந்த ஆலோசனை கொடுக்க ஆட்கள் தேவை. இந்த ஆலோசகர் தகுந்த கல்வி தகுதி உள்ளவராக இருக்க வேண்டும். அதற்கு இந்த பயிற்சி வழிவகுக்கும்.

♀♥♂ உங்களது ஆளுமையை அதிகரிக்கலாம், பாலியல் விழிப்புணர்வை தனக்கு தாமே பெற்றுக்கொள்ளலாம்.

♀♥♂  வாழ்வில் ஆரோக்கிய செக்ஸ் ஹெல்த் பெறவும், வாழ்வில் மேன்மையடையும் வாய்ப்புகள் மிகுதியாகும்.

♀♥♂ இப்படிப்பை முடித்தவர்கள் தங்களது நடப்பு பணிகளைச் சிறப்பாகச் செய்வதுடன், சுற்றத்தவர், நண்பர்கள், வாடிக்கையாளாளர் மற்றும் பிறரை இன்னும் திறம்படக் கையாள முடியும்.

♀♥♂ பயிற்சி முடித்தவர்களுக்கு மேல்படிப்புக்கும், குடும்பநல ஆலோசனை மையம் தொடங்கி நடத்த ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

படிப்புக் காலம் (Course Duration)

ஆறு மாதங்கள், விரைவான முறை 4 மாதங்கள்

யார் சேரலாம் - (Who can join )

♀♥♂ பாலியல் கல்வியை புரிந்துகொள்ள, விரும்பும் யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம்.

♀♥♂ குறிப்பாக கல்லூரி மாணவ - மாணவியர்கள், திருமணத்திற்கு தயாராகும் நபர்கள், இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் ஆர்வம் உள்ள ஆர்வலர்கள் யாவரும் சேரலாம்.

♀♥♂  பாலியல் குறைபாட்டிற்கு மருத்துவம் செய்பவர்கள், பிற துறையில் ஆலோசனை வழங்குபவர்களும் இதில் சேர்ந்து சிறப்பு தகுதி பெறலாம்.

எப்பொழுது சேரலாம்,

எப்பொழுது வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் இன்றே சேருவது நன்று, சேர்ந்த நாளிலிருந்து பயிற்சி காலம் தொடங்கும்.
இந்த பிரிவுக்கான கடைசி தேதி …………………………………………...
பயிற்சி பாட புத்தகங்கள்

படிப்புக் கட்டணம் செலுத்தியதும் அறிஞர் குழு தயாரித்த நான்கு பிரிவு பாடதொகுப்புகள் வழங்கப்படும், பாடங்கள் அனைத்தும் பாலியல் மருத்துவர்களால் தயாரிக்கப்பட்ட பாட தொகுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும்.

பயிற்சி பாடங்களை முழுமையாக படித்தப் பிறகு நாங்கள் தபால் வழியாக கேட்கும் வினாகளுக்கு பதில் எழுதி அனுப்ப வேண்டும். இதற்கு மதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.


பணிப்பயிலரங்கம் - Workshop (Practical Counselling Class)

கேள்வி - பதில் எழுதி அனுப்பியவர்களுக்கு ஒரு நாள் நேரடி பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இதில் பாலியல் ஆலோசகர்களுக்கான புதிய அணுகுமுறைகள், செக்ஸ் கல்வி, பாலியல் மனநல ஆலோசனையை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சிகள் நேரடியாக நடத்தப்படும். பயிற்சி வகுப்பினை பாலியல் வல்லுணர்கள் மூலம் நடத்துவார்கள். பயிற்சி வகுப்பானது காலை 10.00 முதல் மாலை 4.00 மணி வரை நடக்கும்.

படிப்புக்கட்டணம் (Course Fees)

மொத்த பயிற்சி கட்டணம் ரூ 4,000/- மட்டும்

தவணை முறையில் பணம் செலுத்த விரும்பினால் 2200 + 2200 என இரு தவணைகளில் செலுத்தலாம்.

பணிப்பயிலரங்க கட்டணம்

 ரூ.750/- (காலை, மாலை தேனீர், மதிய உணவு, பயிற்சி குறிப்பேடு உட்பட) கட்டணத்தை DD ஆக ”SOLAR CHARITABLE TRUST” எனும் பெயரில் NAGERCOIL-ல் மாற்ற தக்க வகையில் எடுத்து அனுப்ப வேண்டும். அல்லது SBI வங்கியில் செலுத்தலாம்.

 Name:A.P. Arul Kumaresan - A/C No - 10843391057


மதிப்பீடும் முடிவும் Evaluation & Result

சமர்ப்பிக்கப்படும் விடைத்தாள்கள் மற்றும் சுய பயிற்சி நோட்டு, நேரடி பணிப்பயிலரங்கில் பங்கேற்பு மற்றும் செயற்பாடு ஆகிய அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு அமையும் வெற்றி பெற்றவர்கள் படிப்பின் இறுதியில் சான்றிதழ் (CSTCS) பெறுவர்கள்.

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டியவை

♀♥♂ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதோடு சமீபத்திய புகைப்படத்தை ஓட்டி, விண்ணப்பத்துடன் இரண்டு தனி புகைப்படங்களை இணைத்து அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

♀♥♂ தங்களது கல்வி தகுதிக்கான சான்றிதழ்களின் நகல் இணைக்கவும்.

♀♥♂ கேட்பு வரைவோலை DD,Cheque வங்கி ரசீது இணைத்து அனுப்பி வைக்கவும்.

♀♥♂ அனுப்ப வேண்டிய முகவரி

 THE DIRECTOR,
 SOLAR SSE,
 Roy Complex,Krishnancoil,
 NAGERCOIL - 629 001.
 KANYAKUMARI DIST.
 CELL- 3967511133,9443607174.

                                   DR A.P.ARUL KUMARESAN, MS (Coun & psy),MSC(Psy),
                                                                                              DPFR,CAMSH,Ph.D.,
                                                        DIRECTOR - SOLAR

Tuesday, October 16, 2012

பரவும் டெங்கு காய்ச்சல்: தடுக்கும் வழிமுறைகள்


image image
டெங்கு பாதிக்கப்பட்டோருக்கு, உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன் கூடிய தொடர் காய்ச்சல், இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கும். இரண்டு மாத இடைவேளைக்கு பின், இரண்டு வாரங்களாக, தமிழகத்தில், மீண்டும், டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சென்னை, வேலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த ஒன்பது மாதங்களில், 4,500க்கும் மேற்பட்டோர், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், சிறுவர், சிறுமியர் உட்பட 50க்கும் அதிகமானோர், இதுவரை இறந்துள்ளனர். இருப்பினும், "டெங்கு காய்ச்சல் குறித்து, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை' என, மாநில சுகாதார துறை அதிகாரிகள் மூலம், மத்திய சுகாதார அமைச்சர் வரை, திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர்.
ஆனால், டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் இக்காய்ச்சலால் இறப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தங்கள் பிள்ளைகள், உறவினர்களுக்கு, காய்ச்சல் வந்தாலே, அது டெங்குவாக இருக்குமோ என அச்சப்படும் அளவிற்கு, பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த பீதியில் இருந்து விடுபடவும், டெங்கு வராமல் தடுக்க, பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நிலைய மருத்துவ அதிகாரி(ஆர்.எம்.ஓ.,) பொன்னுராஜேஸ்வரி, பேட்டி:
டெங்கு காய்ச்சல் எதனால் வருகிறது? எந்த பருவத்தில், இக்காய்ச்சல் அதிகம் பரவுகிறது?: பகல் நேரத்தில் மட்டும் மனிதர்களை கடிக்கும், "ஈடிஸ்' வகை கொசுக்கள் மூலம், டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு வைரஸ் இக்காய்ச்சலை உண்டாக்குகிறது. ஆண்டு முழுவதும் இக்காய்ச்சல் வந்தாலும், பருவமழை காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
டெங்குவின் அறிகுறிகள் என்ன?: டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.
இந்த அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?: நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.
டெங்கு அறிகுறியுடன் வருவோருக்கு, என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன?டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, முதலில், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில், அவரவர் வயதிற்கேற்ப, 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை, தட்டணுக்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தால், அவர்களுக்கு டெங்கு இருக்க, அதிக வாய்ப்பு உள்ளது. அதை உறுதி செய்யவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு, கூடவே, தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சிகிச்சையும் தரப்படும்.
டெங்குவில் எத்தனை நிலைகள் உள்ளன?: மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு, டெங்கு வைரஸ் பாதிப்பதால், மூன்று முதல் ஏழு நாட்கள் வரை, காய்ச்சல் இருக்கும். மற்றப்படி பெரிய பாதிப்புகள் இருக்காது.
இக்காய்ச்சல் வந்துபோன சில நாட்கள் இடைவெளியில், மீண்டும் டெங்கு வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோர், காய்ச்சலின் இரண்டாம் நிலையில் உள்ளவர்களாக கருதப்படுவர். இவர்களுக்கு, ரத்தம் உறைவதற்கு தேவையான தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, வாய், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தபோக்கு ஏற்படும். இந்நிலை முற்றியவர்கள், டெங்குவின் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு, ரத்தபோக்கின் காரணமாக, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்து, மயக்க நிலையை அடைவர். தோலில் ஆங்காங்கே சிகப்பு புள்ளிகள் உண்டாகும்.
டெங்கு தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு தான் உயிரிழக்கும் அபாயம் அதிகம்.
ஆனால், தற்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், 90 சதவீதம் பேருக்கு, டெங்குவின் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை.

டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழிடெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்
டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.

 • ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
 • கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.
 • அதில் 3/4 கப்  பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும்.
  (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)
 • வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும். இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.
 • இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.
இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலின் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும். (அடையனும்..ஹூம்….நமக்கு இவ்வளவு அறிவு இருப்பதை தெரிந்து இதிலிருந்தும் தப்பிக்க ஒருவேளை பாழாய்ப் போன கொசுக்கள் புதிய யுக்தி எதையாவது கடைப் பிடிக்க ஆரம்பித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவ்வளவு தான் இப்போதே சொல்லிப்புட்டேன்.)
நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
 • இதன் பலனை 4×5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
 • 3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.
 • எப்படியோ இந்த வழியிலாவது கொசுக்கள் ஒழிந்தால் சரி தான்.
டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்
‘ஏடிஸ்’ தென் மாவட்ட மக்களை அதிரவைத்த அதிபயங்கர கொசு! தற்போது திருப்பூர், கோவையிலும் தனது கைவரிசையை நீட்டியிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோரை பாரபட்சமில்லாமல் கடித்து டெங்கு காய்ச்சலால் படுக்க வைத்திருக்கும் பயங்கர ‘வியாதி’க்கான காரணகர்த்தாதான் இந்த ஏடிஸ் கொசு!
ஏடிஸ் கொசு எப்படி பிறக்கிறது? இது கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன? வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தடுப்பது எப்படி? என்பது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது. தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.
இந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர்.
ஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.
இந்த நோய் எளிதில் குணப்படுத்த கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம் உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும். இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும்.
அதனால் இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மூலமாகவும் வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில் கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவ தன் மூலமும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல் தடுக்கலாம்.
கோவை, திருப்பூரில் தென் மாவட்டங்களை போல டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கூட இங்கு குறைவுதான். இருந்தாலும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட சுகாதாரத்துறை போத்தனூர் உள்பட மாவட்டம் முழுவதும் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. மாநகர பகுதியிலும் மாநகராட்சி சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. புகை மூலம் கொசுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் சகாதாரமாக, விழிப்புணர்வோடு இருந்தால் டெங்கு கொசுவை ஒழித்து காய்ச்சல் வராமல் தற்காத்து கொள்ளலாம்.
இவ்வாறு  செந்தில்குமார் கூறினார்