புதிய பதிவுகள்

Monday, July 13, 2009

மாற்று மருத்துவம்

மக்கள் மருத்துவம்
இன்றைய நாளில் உலகம் முழுவதும் சுமார் 150 க்கும் மேற்பட்ட மாற்று மருத்துவங்கள் நடைமுறையில் உள்ளன. இவை உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டவைகள். முழுநலம், (Holistic) என்கிற கருத்து தற்சமயம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த முழுநல கோட்பாட்டில் ஆரோக்கியத்தை இரண்டாகப் பிரித்து தனித்தனியான அணுகுமுறையை கையாளுகிறார்கள். ஒன்று மனநலம் (மனோவியல் முறை, மூச்சுமுறை, தியான முறை, ஆதார முறை, மனக்கட்டளை முறை), மற்றொன்று உடல்நலம் (சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபஞ்சர், மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், யுனானி, யோகா முறை) இது போல் இன்னும் பல... ஒருவரது உடல்நலம் கெடும் போதும், நோய்கள் வரும்போதும் மனிதனின் உடம்பிற்கு மட்டும் சிகிட்சை அளிப்பது போதாது. அவனது மனம், உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள், அவன் வாழ்கின்ற சூழ்நிலை என்று அவனது ஆளுமையை பாதிக்கக் கூடிய அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகின்றது ‘முழுநலம்’. இன்று நவீன மருத்துவமான அலோபதி தவிர்த்து மாற்று மருத்துவங்களை மக்கள் நாடத் துவங்கியுள்ளனர். உலகம் முழுவதும் மாற்றுமருத்துவ முறைகளை மக்கள் நாடி செல்கின்றனர். தற்போது மாற்று மருத்துவத்திற்கு வசந்த காலம் உருவாகியுள்ளது. மேற்படி மாற்று மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ‘மக்கள் மருத்துவம்’ இதழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்விதழின் மற்றொரு பரிணாமமே இவ்வலைப்பூ உருவாக்கமாகும். இதில் மாற்று மருத்துவம் தொடர்பான கட்டுரைகள், மருந்துவக் குறிப்புகள், கேள்வி பதில்கள், மாற்று மருத்துவ சிந்தனைகள் இன்னும் பல இடம்பெறும்.
CONTACT CELL-94436 07174