புதிய பதிவுகள்

Monday, August 8, 2011

பாட்ச் மலர் மருந்துகள் - மருத்துவத்துறையில் மாபெரும் புரட்சிகட்டுரை ஆசிரியர்: Dr.V.ஆவுடேஸ்வரி,


பல்வேறு சமுதாய, பொருளாதார, அரசியல் காரணங்களாலும், பாரம்பரியம் மற்றும் வாழ்நிலை, சூழ்நிலைக் காரணங்களாலும் தனிமனித உளவியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. செல்வவளம் நிறைந்த அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட மனச் சோர்வு, குழப்பம், பதட்டம், மனநோய்கள் பெருகி வருகின்றன. காதல் சுதந்திரம் என்ற பெயரில் முதற்காதல், இரண்டாம் காதல், மூன்றாம் காதல்....... என்று தறிகெட்ட நிலை நிலவுகிறது. இருமனங்களின் சங்கம்மாய் காதல் அமையாததால், காதல் திருமணங்கள் அளவிற்கு விவாகரத்துகளும் சாதாரண நிகழ்வுகளாய் அங்கே காணப்படுகின்றன. மனஇயல் நிபுணர்கள் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே செல்கிறது.

சமுதாய அமைப்பும், கலாச்சாரமும் ஆரோக்கியமாக இருந்தால், சுற்றுச் சூழலும், உணவுகளும் ஆரோக்கியமாக இருந்தால் மக்கள் நலமும் சிறப்புற அமையும் மக்களின் நோய் எதிர்ப்பாற்றல் மேம்படும் என்பது உண்மை.ஆரோக்கியம் என்பது பிறப்புரிமை (Birth Right)மனித குலத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்பதற்கும், ஆரோக்கியம் அளிப்பதற்கும் எண்ணற்ற மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் செய்து பலவழிமுறைகளை உருவாக்கியுள்ளனர். அவர்களில் ஹோமியோபதியைக் கண்டுபிடித்த டாக்டர்.ஹானிமன் அவர்களும் மலர்மருத்துவத்தைக் கண்டுபிடித்த டாக்டர்.எட்வர்டு பாட்ச் அவர்களும் முற்றிலும் வித்தியாசமானவர்கள். மனிதனைப் பல உறுப்புகளின் சேர்க்கையாகப் பார்க்கும் ஆங்கில மருத்துவத்தின் எந்திரவியல் அணுகுமுறையிலிருந்து அவர்கள் மாறுபட்டனர். உடலும் மனமும் இணைந்த முழுமையாய் மனிதனை அணுகும் பார்வையை மருத்துவ உலகுக்கு வழங்கினர். 'மனமும் உடலும் ஒன்றையொன்று சார்ந்து சமநிலையில் இருந்தால் ஆரோக்கியம் ஏற்படும். சமநிலையில் பாதிப்பு ஏற்பட்டால் ஆரோக்கியம் கெடும் நோய் ஏற்படும்' என்ற புதிய பார்வையும், பரிணாம வளர்ச்சியும் ஹோமியோபதி & மலர் மருத்துவம் மூலம் மருத்துவ உலகத்திற்குக் கிடைத்தது

லண்டனைச் சேர்ந்த டாக்டர்.எட்வர்டு பாட்ச் M.B.B.S., M.R.C.S., F.R.C.P., D.P.H.,  அவர்களின் நீண்டகால ஆராய்ச்சிகளின் பயனாக உலகத்திற்கு அறிமுகமான அதிநவீனமான, புரட்சிகரமான இயற்கை முறை மனநல மருத்துவமே 'மலர் மருத்துவம்' டாக்டர். பாட்ச் அவர்கள் சீர் குலைந்த மனங்களைச் சீர்படுத்த 38 வித மலர் மருந்துகளை மானிட சமுதாயத்திற்கு வரப்பிரசாதமாக வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment