புதிய பதிவுகள்

Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Saturday, October 5, 2024

மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி ORIGAMI PSYCHOTHERAPY TRAINING

மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி


ORIGAMI PSYCHOTHERAPY TRAINING


ஒரிகாமி தெரபி மூலமாக மன அழுத்தம்(Stress),மனகோபம் (Anger),மனசோர்வு (Depression) ,மனபதட்டம் (Anxiety) ,மனக்குற்றம் (Guilt),மனஅவமானம் (Shame),மனஅதிர்ச்சி (Trauma),மனசிதைவு (Schizophrenia) போன்ற மனபாதிப்பிலிருந்து வெளிவர இந்த தெரபி உதவும். 


👉 *Promote relaxation* 

👉 *ease anxiety* 

👉 *increase focus* 

👉 *Reduce stress* 


 Fold paper, unfold your mind (Mindful Origami)


ஒரிகாமி என்பது காகிதத்தில் உருவங்களை உருவாக்கும் கலை.ஒரு சதுரமான காகிதத்தை கத்தரிக்கோல் கொண்டு வெட்டாமல்,பசை கொண்டு ஒட்டாமல்,கயிறு கொண்டு கட்டாமல் பல ஆயிரம் வடிவங்களை உருவாக்குவதே ஒரிகாமியின் தனி சிறப்பு.அதனால் தான் இதை காகித மடிப்பு கலை என்று அழைக்கிறோம்.


மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி    ORIGAMI PSYCHOTHERAPY TRAINING
மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி    ORIGAMI PSYCHOTHERAPY TRAINING



இது ஓர் ஜப்பானிய கலையாக திகழ்ந்தாலும் இன்று அனைத்து துறைகளிலும் இக்கலை வளர்ந்து வருகிறது.


 *ஒரிகாமி தெரபி கற்பதால் ஏற்படும் நன்மைகள்* 


*THERAPEUTIC ADVANTAGES OF ORIGAMI* 


📰அனைத்து விதமான உணர்ச்சி மற்றும் மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபட முடிகிறது.


📰மன அழுத்தத்தில் இருந்து எளிமையான முறையில் விடுபட முடியும்.


 📰 மாணவர்களின் கல்வித் தரமும், நினைவாற்றலும், கற்பனைத் திறனும் மேம்பட உதவுகிறது.


📰 கல்வி உளவியலில் முக்கியமான பங்கு வகிக்கிறது.


 📰 ஆற்றுப்படுத்துதல் உளவியல், மனோதத்துவ சிகிச்சைக்கு இக்கலை திறம்பட உதவி செய்கிறது.


இன்னும் ஏராளமான நன்மைகள.


 *பயிற்சி வகுப்பில் கற்றுக்கொள்பவை:* 


🦜 ஒரிகாமி / ஒரிகாமி தெரபி வேறுபாடுகள்


🦜 மனநலத்தை மேம்படுத்தும் ஒரிகாமி தெரபி வழங்கும் முறை


🦜 "சைக்கோதெரபி" ஓர் அறிமுகம்


🦜 ஒரிகாமி பேசிக் Folds & Base


🦜 ஒரிகாமி பேப்பரில் விலங்குகள் (Animals) செய்யும் முறைகள்


🦜 ஒரிகாமி பேப்பரில் பூக்கள் (Flowers)  செய்யும் முறைகள்


🦜 ஒரிகாமி பேப்பரில் கலைநயமானப் பொருட்கள் (Decorations)  செய்யும் முறைகள்.


🦜 இன்னும் ஏராளமான தெரபி வழிமுறைகள் கற்றுத்தரப்படும்


மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி    ORIGAMI PSYCHOTHERAPY TRAINING
மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி    ORIGAMI PSYCHOTHERAPY TRAINING




*யார் யார் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்* .


⛺️ மனநலம் மேம்பாடு பெற விரும்புகிறவர்கள்


✳️ உளவியல் / ஆற்றுப்படுத்தல் வழங்குபவர்கள்.


✳️ மனநலம் விரும்புகிறவர்கள்


✳️ ஆசிரியர்கள்,B.ED,TTC மாணவர்கள்,


✳️ சமூகப் பணியாளர்கள் மற்றும் இக்கலையை தெரிந்து கொள்ள விரும்பும் யாவரும் பங்கு பெறலாம்.


*பயிற்சி நாள்* :13.10.2024 ஞாயிறு காலை 10.00 முதல் மாலை 5.00 வரை.


*பயிற்சி இடம்* :சோலார் அகாடமி,

7,பெரியராசிங்கன் தெரு,

வடசேரி,

நாகர்கோவில் -1.


*கட்டணம்* :  ரூ.2,500/-

 (ஒரிகாமி தெரபி வழிகாட்டி புத்தகம்,ஒரிகாமி பேப்பர் உபகரணங்கள்,நேட்+பேனா,மதிய உணவு,பங்கேற்பு சான்றிதழ் உட்பட)


 பெயர் பதிவிற்கு,


*SOLAR ACADEMY* ,

 *SOLAR MIND CARE* 

  NAGERCOIL.


 9443607174

 9489620090

Thursday, August 5, 2021

உடல் வலிகள் (BODY PAIN) நிவாரண மூலிகை சிகிச்சை

  உடல் வலிகள் (BODY PAIN) நிவாரண மூலிகை சிகிச்சை 



கொரியரில் பெறலாம்,ஆன்லைன் ஆலோசனை.



அனைத்து விதமான மூட்டு வலிகளுக்கு சவால்விட்டு தரும் மாற்றுமருத்துவ சிகிச்சை.


 வலி நோய்கள்: 


🌿 அனைத்து விதமான மூட்டு வலிகள்.


🌿 மூட்டு தேய்மானம்.


🌿 கழுத்துவலி


🌿 தோள்பட்டை வலி


🌿 முதுகு வலி


🌿 இடுப்பு வலி 


🌿தண்டுவட வலி 


🌿குதிகால் வலி 


🌿தசைப்பிடிப்பு வலிகள்.


🌿 பணிகள் காரணமாக ஏற்படும் உடல் வலிகள்,உடல் அலுப்புகள்.



 போன்ற அனைத்து விதமான தசை நரம்பு மூட்டு வலிகளுக்கு பக்க விளைவு இல்லாத மாற்று மருத்துவ கூட்டு சிகிச்சை. 


🩺 நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட 

இம்மருந்துகளை நோயாளிகளுக்கு சவால்விட்டு மருந்து தரலாம்.


🌿 முதல்நாளிலேயே உங்களுக்கு பலன் தெரியும். 


🏥 ஒரு மாதத்திற்கான மூலிகை மருந்துவ கூட்டு மருந்துகளின்

விலை.₹.2,500/- Courier Charge ₹.200/-

(காலை இரவு மூலிகை மாத்திரை,காலை - இரவு வலி சூரணம்,வலியுள்ள இடத்தில் பயன்படுத்தும் ஆயில் உட்பட)


🏚️மாற்றுமருத்துவ (மூலிகை)  கூட்டு மருந்துகள் பெற நேரில் / தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.

 

சோலார் மாற்று மருத்துவ (மூலிகை) சிகிச்சை மையம், 

1A, திருவள்ளுவர் தெரு, வெட்டூர்ணிமடம் சந்திப்பு,

நாகர்கோவில்.


நேரில் ஆலோசனை பெற வர முடியாதவர்கள் தொலைபேசியில் ஆலோசனை பெற்று மருந்துகளை கொரியரில் பெற்றுக்கொள்ளலாம்.


 தொடர்புக்கு 


 Dr A P ARUL KUMARESAN,

SOLAR HERBAL CARE,

NAGERCOIL 629001.


 9443607174 ,

 9367511133 .

Monday, August 8, 2011

இயற்கை வழங்கும் அதி உன்னத உணவு


கட்டுரை ஆசிரியர்: Dr.S.வெங்கடாசலம்


            மனித உயிரையும் உடல் ஆரோக்கியத் தையும் காப்பதே உணவின் பிரதான நோக்கம். ருசியும் மணமும் இரண்டாம் தேவைகளே. ஆனால் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் வாழ்க்கையின் அர்த்தங்களும், உணவுகளின் நோக்கமும் மாறிவிட்டன. வறுமைப் பசியாலும், கடன் தொல்லையாலும் ஏற்படும் மரணங்களை விட அளவுமீறிய ஒழுங்கற்ற ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படும் மரணங்களே அதிகம்.

          நமது உணவுகளில் பெரும்பகுதி கார்போ ஹைட்ரேட், இனிப்பு, அடர்கொழுப்பு (Saturated Fats) போன்ற சத்துக்களே அடங்கியிருப்பதால் எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகிறோம். கொலஸ்டிரால் இருதய-ரத்தநாள நோய்கள், உடல்பருமன், நீரிழிவு, மலட்டுத்தன்மை,புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் முற்றுகையிடுகின்றன. இதற்குத் தீர்வு... மருத்து வமா? இல்லை... வாழ்க்கைமுறை மாற்றங்களும் சிறந்த உணவுகளும் தான் உண்மையான தீர்வு களை வழங்க முடியும்.           


 ஸ்பைரூலினா ...எனும் அரிய, எளிய உணவு

       ஸ்பைரூலினா  பற்றி பலரும் கேள்விப்பட்டி ருக்கக்கூடும். ஆனால் அதன் முழுமையான ஆற்றலையும், பயன்களையும் அறிந்திருந்தால் அனைவருமே மிகப்பெரும் நன்மை அடைந்திருக்க முடியும்.

   ஸ்பைரூலினா.. ஒரு செல் புரத பாசி வகையைச் சேர்ந்தது. (Single Celled Algae) அடர் பச்சை நிறமுள்ள இந்தச் சுருள்பாசியில் மிக அதிகளவில் பச்சையம் அமைந்திருப்பதாலேயே அந்நிறத்தில் உள்ளது. உலகின் வெப்பமான நீர்நிலைப் பகுதிகளில் விளையக்கூடியது. மத்திய ஆப்ரிக்கா, வட ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் கடல்களில், ஏரி களில் காணப்படுகிறது.

 உலகிலுள்ள வேறு எந்த தாவர உணவுப் பொருட்களையும், இறைச்சி உணவுப் பொருட் களையும் விட அதிகளவு புரதம் (Protein) இச்சுருள்பாசியில் செறிந்துள்ளது. இது போன்ற சத்து ஆதாரமிக்க நீர்ப்பாசிகளை உணவாக உண்பதால்தான் மீன்களில் அதிகப் புரதம் அமைகிறது. விண்வெளி வீரர்களின் முக்கிய உணவாக  ஸ்பைரூலினா  பயன்படுகிறது. ஏனென் றால் நாம் இதை உண்ணும் அளவோ மிகக் குறைவு.. கிடைக்கும் ஆற்றலோ அளப்பரியது!  Yes...Micro Food ! Macro Blessing ! 

 

இயற்கை அன்னையின் ஆற்றல்மிக்க  உன்னத உணவு

     இயற்கையை நோக்கி நீ இரண்டடி போனால், இயற்கை உன்னை நோக்கி நான்கடி நெருங்கி வரும் என்பது உண்மையே. சோவியத் ருஷ்யாவில் செர்னோபிள் அணுஉலை விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றிலுமுள்ள விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன. விளைச்சல் நஞ்சாய் அமைந்தன. எண்ணற்ற குழந்தைகளுக்கு நச்சு உணவுகளால் ஏராளமான தோல் அலர்ஜி நோய்களும், உடல்நலச் சிக்கல்களும் ஏற்பட்டன. புழக்கத்திலிருந்த மருந்துகள் மூலம் குழந்தை களைக் காப்பாற்ற இயலாத நிலையில் இறுதியில்  ஸ்பைரூலினா பரிந்துரைக்கப்பட்டது. தினமும் குழந்தைகளுக்கு இந்தக் கடற்பாசி உணவு மிகச் சிறிதளவு தொடர்ந்து வழங்கப்பட்டது. இயற்கையின் ஆச்சரியமாய் ஆறுமுதல் எட்டு வாரங்களில் குழந்தைகளின் தோல் அலர்ஜி நோய்கள் தீர்ந்தன. பெரும்பாலான நோய்களி லிருந்து அவர்கள் மீள முடிந்தது. எனவே ரஷ்யர்கள் ஸ்பைரூலினாவை மருந்துணவு (Medicine Food) என்கின்றனர்.

 ஸ்பைரூலினாவில் அடங்கியுள்ள சத்துக்கள் 

   மிகமுக்கியமாக இறைச்சியை விட 5 மடங்கு அதிகம் புரோட்டின் (உயர்தரமான தாவரவகைப் புரதம்) அடங்கியுள்ளது. காரட்டை விட 10 மடங்கு அதிகம் பீடாகரோடின் சத்து அடங்கியுள்ளது. தாய்ப்பாலில் மட்டுமே காணப்படும் காமாலி னோனிக் அமிலம் (Gamma Linoleic Acid)  இதில் அடங்கியுள்ளது. அமினோ அமிலங்கள் 22ல் 18 வகை இதில் உள்ளன. 10 வகை வைட்டமின்கள் குறிப்பாக VitA,E,B12 போன்றவை உள்ளன. 8 வகை தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

 ஸ்பைரூலினா  அள்ளி வழங்கும் ஆரோக்கியம்

    நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கிய மும் வழங்குவதில் முதலிடம் வகிக்கும் உன்னத உணவாக ஸ்பைரூலினாவை இயற்கை படைத்துள் ளது. நமது உணவுகளில் கார்போஹைட்ரேட், எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. உணவுக்கு 1மணி நேரம் முன்பு ஸ்பைரூலினா உண்பதால் பசி சீரடையும், எடை குறையும்.

   மேலும் புரதம், வைட்டமின்கள் அபரிமித மாக உள்ளதால் நோய் எதிர்பாற்றல் பெருகும். நோய் தொற்றுக்கள் நெருங்காது. இதிலுள்ள காமா லினோலிக் அமிலச் சத்து கொலஸ்டிரால் உற்பத்தியைத் தடுக்கும். கெட்ட கொலஸ்டிரால் (HDL) அளவைக் குறைக்கும் நல்ல கொலஸ்டிரால் (LDL) அளவை அதிகரிக்கும். உடல் பருமனைக் குறைக்க சிறந்தது. இருதய நோய்களைத் தடுக்கும், ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தும். மேலும் காமா லினோலிக் அமிலச் சத்து சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்புப் (Powerful Anti Inflammatory) பணியும்  ஆற்றுவதால் மூட்டு அழற்சி வலியால் துயரப்படு வோருக்கு பெரும் நிவாரணியாக அமைந்துள்ளது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

 சர்க்கரை நோயாளிகளுக்கு இனிய தீர்வுகள்

  ஸ்பைரூலினா... மனித உடலில் நிகழ்த்தும் அதிசயங்கள் ஒன்று இரண்டல்ல! ஏராளம்! ஏராளம்! சர்க்கரை நோயாளிகளுக்கு இது வரப்பிரசாதம். வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவை (Blood Sugar level in Fasting) 6 முதல் 8 வாரங்களில் மிகச் சரியான அளவுக்குக் கொண்டு வருவதோடு, அடிக்கடி பசி ஏற்படுதல், அடிக்கடி உண்ண வேண்டிய நிர்பந்தம், நீரழிவு மிகுதியால் தோல் பாதிப்புகள், பாத எரிச்சல் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் சுகமான,சுலபமான, நம்பகமான தீர்வு ஏற்படுகிறது.

 Best Stomach Tonic !

            ஸ்பைரூலினா... இரைப்பை மற்றும் குடல் களின் செயல்திறனை அதிகரிக்கிறது.E.coil,Candida போன்ற தீய பாக்டீரியாக்களை முறியடிக்க உதவுகிறது. ஹார்மோன் இயக்கத்தைச் சமநிலைப் படுத்துகிறது.

                    

முதுமையும் தளர்ச்சியும் தூரப் போகும்

  மனிதனை முடக்கி மரணத்தை நோக்கி விரைவாய் நகர்த்தும் சிதைவு நோய்களை (Degenerative Diseases) தடுக்கும் ஆற்றல் ஸ்பைரூலினாவில் அமைந்துள்ளது. இது உடலின் நச்சுக்களை அகற்றும் Anti Oxidant/Antiviralagent ஆகப் பணியாற்றுகிறது. Vit.B.12அடங்கியுள்ளதால் உடல், மன அழுத்தங்கள் இறுக்கங்கள் குறைந்து சுதந்திர உணர்வு ஏற்படும். தோல் வறட்சி, தோலில் சுருக்கம், இதரதோல் நோய்களையும் முறிய டிக்கும். எப்போதும் சோர்வும் பலவீனமும் உள்ளவர்களுக்கு, (Chornic Fatique Syndrome-CFS)  நீண்டகால களைப்பு நோய்க்கு மிகச் சிறந்த சிகிச்சையாக இது அமைகிறது. இதன் மூலம் புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் பெருகும். தளர்ச்சி மறையும், முதுமையைத் தள்ளிப்போடும் (Antiaging) ஆற்றல் ஸ்பைரூலினாவுக்கு உள்ளது. புற்று நோயைத் தடுக்கும் சக்தியும் (Cancer Fighting Ingredients) இதிலுள்ளன என ஏராளமான ஆய்வுகள் மூலம் அறியமுடிகிறது.

   சேதமடைந்த செல் டிஎன்ஏ வின் விளைவே புற்று. இது கட்டுக்கடங்காமல பல்கிப் பெருகும். இந்நிலையில்   Endonucleus என்ற சிறப்பு என்சைம்கள் சேதமடைந்த செல்  டிஎன்ஏ நிலை பெற்று செல்லைப் பாதுகாத்து வாழ்வளிக்கும். இந்த என்சைம்கள் செயல்படாத நிலையில்  டிஎன்ஏ சரிசெய்யப்படாமலேயே போய்விடும். புற்று வளரும். ஸ்பைரூலினா... செல்லின் நியூக்ளியஸ் என்சைம் செயலைத் தூண்டும்; அதிகப்படுத்தும். இதுகுறித்து தொடர் ஆய்வுகளி லிருந்து நம்பிக்கையளிக்கும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

          

 ஸ்பைரூலினா பெயரில் நடைபெறும் MLM-நிறுவனக் கொள்ளையை முறியடிப்போம்

    மனிதகுலம் எத்தனையோ போர்களை இயற்கை சீற்றங்களைச் சந்தித்து மீண்டுள்ளது. மனித சமூகமும் பூண்டோடு அழிந்துவிடப் போகிறது என ஆரூடம் கணித்த எத்தனையோ பேர்கள் மாண்டுவிட்டனர். ஆனால் மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தனக்கு எதிரான சூழல்களிலிருந்தும், நோய்மையிலிருந்தும் மீள மனிதகுலம் இடையறாது போராடிப் போராடி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

   உயிரினங்களில் புரட்சிகரமானது மனித உயிர். உணவுகளில் புரட்சிகரமானது ஸ்பைரூ லினா. மருந்துகளால் அல்ல மிகச்சிறந்த (இயற்கை) உணவுகளால் மட்டுமே மனித நலம் பாதுகாக்கப் படும். இயற்கையை வணங்குவது அல்ல. இயற்கை யோடு இணைந்த வாழ்வதே முக்கியம். ஸ்பைரூ லினா ஒவ்வொரு குடும்பத்திலும் அடிப்படை உணவு போல அமைய வேண்டும். இந்த எளிய உணவுப் பொருளை MLM நிறுவனங்கள் தங்கத்தின் விலைக்கு விற்பனை செய்து கொள்ளையடிக்கும் மோசடியில் வீழ்ந்துவிடாமல், எல்லோருக்கும் ஏற்றவிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் படும்  ஸ்பைரூலினா வையே அனைவரும் பயன் படுத்த வேண்டும்.

  எதிர்காலத்தில் அதிகமான பேருக்குக் குறைந்த செலவிலான உணவு ஆதாரமாக இது திகழும்  என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அழகே உன் முகவரி என்ன?



கட்டுரை ஆசிரியர்: Dr.S.வெங்கடாசலம்,


குழந்தை அம்மாவிடம் கேட்கிறாள்வானத்தில் ஏனம்மா இத்தனை நட்சத்திரங்கள்?அம்மா சற்று யோசித்து விட்டு இருட்டாய் இருந்தால் அழகாய் இருக்காது. அதனால் தான் இவ்வளவு நட்சத்திரங்கள் வெளிச்சமாய் மின்னுகின்றன என்றாள். இல்லையம்மா? இரவையும் இருட்டையும் அழகாய் இல்லை என்று ஏன் சொல்கிறாய்? இருட்டில் நடக்கும், கொலை, கொள்ளை, தவறுகள் தானே அசிங்கமானவை? அதைக் கவனிப்பதற்காகத் தான்...... இரவு நேரங்களில் யார் யாரெல்லாம் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்று இறைவன் இத்தனை கண்களால் வானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்னாள் குழந்தை. எதிர்பாராத அருமையான இந்தப் பதிலைக் கேட்டு அன்னையின் மனதில் ஆயிரமாயிரமாய் மகிழ்ச்சிப் பூக்கள் பூத்தன.

குழந்தைகள் விளக்கம் யாரோ சொல்லி நெஞ்சில் பதிந்த கருத்தாக இருக்கலாம். அதைப் பிஞ்சு உதடுகள் மென்மையான சங்கீதக் குரலில் உச்சரிக்கும் போது வசீகரம் அதிகரிக்கிறது. எல்லாக் குழந்தைகளுமே அழகானவர்கள்தான். குழந்தைகள் உதிர்க்கும் மழலைச் சொற்கள் எல்லாமே மொழி இலக்கணம் மீறிய அழகுகள் தான். ஒவ்வொரு தாய்க்கும் தான் சுமந்து பெற்ற பிள்ளையே அழகான பிள்ளை. ஒவ்வொரு பிள்ளைக்கும்.
 
தெருவுக்குத் தெரு காளான்கள் போல் அழகுநிலையங்கள் தோன்றி வருகின்றன. அங்கே எதை அழகுபடுத்துகிறீர்கள்? அழகு விலைக்குக் கிடைக்குமா? எது அழகு? சிவந்த மேனியா? வட்ட முகமா? பவுடர், கிரீம், லிப்ஸ்டிக் பூச்சுக்களா? சுருள் முடியா? வாட்டசாட்டமான உருவமா?
சுட்டெரிக்கும் சூரிய வெயிலை முதுகில் சுமந்தபடி உழைக்கும் பலகோடி ஆண், பெண் உழைப்பாளிகளின் நிறம் கருப்பு. அவர்களின் அன்றாட ஆடைகளில் படிந்துள்ள வியர்வைக் கறையும், அழுக்கும், தூசியும்..... உழைப்பின் அடையாளங்கள். கருப்பு நிறமும் கறைபடிந்த ஆடைகளும் அவலட்சணங்களா?
மகாத்மா காந்தியின் பொக்கைவாய்ச் சிரிப்புப் படம் இந்தியர்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இல்லத்திலும் வீற்றிருப்பதற்கு என்ன காரணம்? அவர் அழகானவர் என்பதாலா? மிகச் சிறந்த மனிதர்கள் நெல்சன் மண்டேலா முதல் காமராஜர் வரை நிறம் கடந்து நேசிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? அழகு என்பது நிறத்தோடும் புறத்தோற்றத்தோடும் மட்டும் சம்பந்தபட்டது என்று எண்ணி மருகுவது பேதைமையல்லவா? 
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சிறிதும் பெரிதுமாய் எண்ணற்ற அழகுகள் நிறைந்திருக்கிள்றன. அன்பு, அறிவு, உழைப்பு, நேர்மை, மனிதநேயம் இவைதானே மிகச்சிறந்த அழகுகள். அழகு குறித்த போதைத்தனமான, பேதைத்தனமான பிரமைகளால் தடுமாறுவோர் அழகு நிலையங்களும், அழகு சாதனங்களுக்கும் பணம் செலவிடுவது போல, மனதை அழகுபடுத்தும், ஆரோக்கியப்படுத்தும் நூல்களுக்கு செலவிடுவதில்லை.

புற அழகில் அதிக நாட்டமுள்ளவர்களில் ஒருபகுதியினர் தங்களைத் தாங்களே அருவருத்து, வெறுத்துக் கொள்ளும் மனநிலை ஏற்படுகிறது. முகத்தில் வெடித்துள்ள இரண்டு பருக்களும், காதோரத்து மருவும், முன்கையில் உள்ள சிறுமச்சமும், நகத்திலுள்ள வெண்புள்ளியும் வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்சனைகளாக மாறிவிடுகின்றன. மற்றொரு பகுதியினருக்கு நோயாளிகளைக் கண்டால் மருத்துவமனைகளைக் கண்டால் மனதிற்கு அலர்ஜி. அருகில் நெருங்கமாட்டார்கள். சுத்தத்திற்கு பிறகுதான் அன்பு, நட்பு, உறவு எல்லாம்! சுத்தப்படுத்துகிறோம் என்று பலமுறை கைகளை,கால்களைக் கழுவும் இவர்களின் மனம் எவ்வளவு அழுக்காக இருந்தாலம் கவலைப்படமாட்டார்கள்.கிருமிகளுக்கும், நோய்களுக்கும் மிகவம் பயப்படுவார்கள். இத்தகையவர்களின் மட்டுமீறிய அருவருப்பு மற்றும் வெறுப்பு உணர்ச்சிகளை மாற்றி மனங்களைச் சுத்தப்படுத்த உதவும் மலர் மருந்து கிராப் ஆப்பிள் (CRAB APPLE) . 

 கிராப் ஆப்பிள் மருந்திற்குரியவர்கள் உடம்பில் எங்கேனும் ஓரிடத்தில் அசுத்தமோ, அழுக்கோ, நிறமாற்றமோ, புண்ணோ, வலியோ.... எது காணப்பட்டாலும் அந்த பாகத்தையே வெட்டி எறிந்து விட வேண்டும் என்கிற மனநிலை கொண்டவர்களாக உள்ளனர். சுவரில் தொங்கும் போட்டோ அல்லது காலண்டர் சற்று சாய்ந்திருந்தாலும் அவர்களின் மன அமைதி குலைந்து விடும். அந்த நிலைமையில் அவர்கள் வேறெந்தச் செயலிலும் மனதைச் செலுத்த முடியாது.

தீவிரமான சுத்தவாதிகளாய் திகழும் கிராப் ஆப்பிள் நபர்கள் அடித்தட்டு மக்களைப் பார்த்து அருவருப்பு அடைவதுண்டு. ஏழை, எளிய பாட்டாளி மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், வசிப்பிடம் எல்லாமே அருவருப்பு ஏற்படுத்தும். கிராப் ஆப்பிள் பேர்வழிகள் தங்கள் அழகையும், அந்தஸ்தையும் பராமரிக்கும் வழிமுறைகள் எல்லாம் ஆடம்பரமானவையாகவே இருக்கும். இத்தகைய மனநிலை உள்ளவர்கள் ஆடம்பரமான நட்சத்திர விடுதிகள், ஆடம்பரமான உணவகங்கள், ஆடம்பரமான ஜவுளிக்கடைகள், ஆடம்பரமான காலணிக் கடைகள் போன்றவற்றையே விரும்பி நாடுவார்கள். இவர்களின் மனநிலையைச் சுத்திகரிக்க கிராப் ஆப்பிள் தேவை.

கலெக்டர் அலுவலகத்தில பணியாற்றும் ஒரு பெண்மணி அடிக்கடி வாந்தி, குமட்டல் ஏற்பட்டு அவஸ்தைப்பட்டார். பலவித சிகிச்சைகளும் நிவாரணமளிக்கவில்லை. அவரை முழுமையாக விசாரித்தோம். அவர் பணியாற்றும் அலுவலக அறையில் மராமத்து வேலைகள் நடப்பதால் வேறொரு அறைக்கு அலுவலகத்தை மாற்றியுள்ளார்கள். அங்குள்ள கழிவறை மற்றம் ஜன்னல் கதவுகளின் அசுத்தங்களால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டது. மதிய உணவு உண்டால் வாந்தி வருகிறது. தண்ணீர் அருந்தினால் குமட்டுகிறது. எப்போதெல்லாம் அருவருப்பு மேலோங்கி குமட்டலும் வாந்தியும் ஏற்பட்டுவிடுகிறது. அப்பெண்மணிக்கு தினசரி மூன்று வேளை கிராப் ஆப்பிள் சாப்பிடுமாறு கொடுத்தனுப்பினோம். இரண்டு நாட்களிலேயே வாந்தி நின்றுவிட்டது. தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்ட பின் கடுமையான அருவருப்பு உணர்ச்சி குறைந்து, மறைந்தது.

பள்ளி மாணவி ஒருவர் சிறு பூச்சிகளைக் கண்டால், கரப்பான், பல்லி போன்றவற்றைக் கண்டால் அருவருத்து, உடல் புல்லரித்துப் போவார். அவரது சகோதரர் தற்செயலாக இது பற்றிக் கூறியதை கேட்ட நாங்கள் ஒரு மாத காலத்திற்கு கிராப் ஆப்பிள் மலர் மாத்திரை சாப்பிடுவதற்கு கொடுத்தனுப்பினோம். மாணவியின் சகோதரர் மறுமுறை சந்தித்த போது ஆச்சரியத்துடன் பாராட்ழனார். 'நீங்க கொடுத்த மருந்து அருமையான மருந்து சார்! ஒருமுறை மழைநாளில் விட்டுக்குள் ஒவ்வாமை போல் தடித்து தடிப்பாய் வந்து மிகவும் சிரமப்பட்டாள். ஆனால் நேற்று மழை பெய்ததைத் தொடர்ந்து தெரு விளக்கைச் சுற்றி மொய்த்த அம்மா எல்லோருமே சந்தோசப்பட்டார்கள்! ரொம்ப நன்றி டாக்டர்!' இது போன்ற எண்ணற்ற சிகிச்சை அனுபவங்களில் பாட்ச் மலர் மருந்துகள் வியக்கத்தக்க வகையில் குணமளிக்கின்றன.

சின்னஞ்சிறிய - அற்பமான பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தம் நபர்கள், அகத்தூய்மை பற்றிய அக்கறை இல்லாமல் புறத்தூய்மை குறித்து வருந்துவோர், சாதாரண மக்களின் தோற்றம் கண்டு மனக்கஷ்டத்திற்கு ஆளாகி, அதனால் அவர்களின் அழைப்பையும் அவர்களையும் மதிக்காத மனிதர்கள், அளவுக்கு அதிகமாக சுத்தம் கடைபிடிப்பவர்கள்....... இவர்கள் அனைவருக்குமே கிராப் ஆப்பிள் பயன்படும். கிராப் ஆப்பிள் மூலம் மற்றவர்களை மதிக்கக் கூடிய மனப்பான்மை, மனிதநேய அணுகுமுறை, தன் குறிகளைத் திருத்திக் கொள்ளும் மனநிலை போன்றவைகளைப் பெறமுடியும். தேவையற்ற அருவருப்பும், இரக்கமற்ற தன்மை, அனாவசிய ஆடம்பரங்களும் விலகி ஓடும். ஏனென்றால் மலர் மருந்துகள் முழு மனிதனையும் சுத்திகரிப்பவை. 

Friday, June 24, 2011

பெண்கள் பிரசவம்


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 78 ஆயிரம் பெண்கள் பிரசவ காலத்திலோ அல்லது குழந்தை பிறந்த 42 நாட்களுக்குள்ளோ இறந்துபோகிறார்கள்’ என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது’சாம்பிள் ரெஜிஸ்ட்டிரேசன் சிஸ்டம்` எனப் படும் மத்திய அரசு நிறுவனம். இந்த தாய்மார்கள் 15 முதல் 49 வயதுக்குள்ளான வர்கள். மகப்பேறு கால மரணவிகிதம் அதிகமாவதற்கான காரணங்கள்…
பால்ய விவாகம்:
பெண்கள் வயதுக்கு வருவதற்கு முன்பே அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் வழக்கம் இப்போதும் இருக்கிறது. பூப்பெய்தி விட்டாலும் மகப்பேறுக்கு தகுதியான உடல்வளர்ச்சியை அவர்கள் பெறுவதற்கு முன்பும் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. இத்தகைய திருமணங்கள் மகப்பேறு கால மரணத்துக்கு வழிவகுத்து விடுகிறது.
ஊட்டச்சத்து இல்லாமை:
கர்ப்பிணிப் பெண்களில் பெரும்பாலோர் ஏழைகளாக இருப்பதால் அவர்களுக்கு தேவை யான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் ரத்தசோகை எனப்படும் அனீமியா நோய்க்கு ஆளாகி பிரசவ காலத்தில் உயிரிழப்புக்கு உள்ளாகிறார்கள்.
பாதுகாப்பற்ற முறையில் செய்யும் கருக்கலைப்பு:
பெண்களில் பலரிடம் கருக்கலைப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை. தகுதியற்றவர்களிடம் அவர்கள் கருக்கலைப்பு செய்துகொள்வது, மரணத்தில் கொண்டு விட்டுவிடுகிறது!
மேம்படுத்தப்படாத பிரவச இடம்:
கிராமப்புற பெண்களில் பெரும்பாலோர் நவீனப்படுத்தப்பட்ட மருத்துவ மனைகளுக்கு பிரசவத்திற்குச் செல்வதில்லை. வீடுகளில் தாய்-சேய் நலம்பேணும் உபகரணங்கள் ஏதுமின்றி பாதுகாப்பற்ற முறையில் பிரசவம் செய்து மரணத்தை எதிர்கொள்கிறார்கள்.
கிராம ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படாமை:
பெரும்பாலான கிராமப்புற மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பின்பு தாய்மார்களின் நலம்காக்கும் வசதிகள் இல்லை. அதனால் சுகப்பிரசவத்திற்கு பின்பு தாய்மார்கள் இறந்து போகும் சூழல் ஏற்படுகிறது.
மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை அசாம் மாநிலத்தில் தான் மிக அதிகம். அங்கு திஸ்பூரில் உள்ள லல்மாட்டி கிராமத்தில் வசிக்கும் பிரான்ஜிட் தேகா என்பவர் தனது 18 வயதான மனைவி கல்பனா தேகாவை முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்த போது, மனைவி வயிற்றில் முழு வளர்ச்சியுடன் இருந்த குழந்தை இறந்து பிறந்தது. இரண்டாவது பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்தபோது குழந்தையுடன் தாயும் இறந்து போனாள். “மருத்துவமனையில் என்ன தப்பு நடந்தது என்று தெரியவில்லை. எங்கள் பகுதியில் பல பெண்கள் பிரசவகாலத்தில் இறந்திருக்கிறார்கள்” – என்று அதிர்ச்சியுடன் கூறுகிறார், கல்பனாவின் கணவர்.
லான்செட் என்கிற மருத்துவப் பத்திரிகை உலக அளவில் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி 2008-ல் நிகழ்ந்துள்ள மகப்பேறுகால மரணங்களில் பாதியளவு இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, காங்கோ குடியரசு ஆகிய ஆறு நாடுகளில்தான் நிகழ்ந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது.
ராஜஸ்தானில் மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை 388 என்று பதிவாகியுள்ளது! அங்குள்ள கிராமங்களில் பெரும்பாலான பிரசவங்கள் வீடுகளிலேயே பார்க்கப்படுகின்றன. நகரத்து பெண்கள் பிரசவத்திற்கு நவீன வசதிகள் நிறைந்த `மல்டி ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனைகளைத் தேடும்போது, கிராமத்து கர்ப்பிணிகள் எந்த வசதியுமற்ற ஆஸ்பத்திரிகளைத்தான் தேடிச் செல்கிறார்கள்.
பொருளாதார வசதிமிகுந்த மராட்டியம், குஜராத் மாநிலங்களில் மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை முறையே 130 மற்றும் 160 எனப்பதிவாகியுள்ளது. போதிய நிதிவசதி இருந்தும் அரசின் கவனக்குறைவால் கிராம மருத்துவமனைகளில் மகப்பேறு காலத்தில் தாயின் நலம்பேணும் வசதிகள் மிகக்குறைவாகவே உள்ளன! அங்குள்ள டாக்டர்களில் நூற்றிலொருவர் தான் மகப்பேறு சிகிச்சைக்கான பயிற்சி பெற்றுள்ளனர். மகப்பேறு சிகிச்சை பயிற்சிபெற்ற டாக்டர்களிலும் 2 சதவீதம் பேர் தான் சிசேரியன் ஆபரேஷன் செய்யும் பயிற்சி பெற்றுள்ளனர். இம்மாதிரியான குறைகள் நிவர்த்தி செய்யப்படாதவரை யிலும் மகப்பேறுகால மரணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.
சமீபத்தில் அரசின் சுகாதாரத்துறை எடுத்துள்ள கணக்கீட்டின்படி 1 லட்சத்து ஐம்பது ஆயிரம் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மையங்களில் டாக்டர்களே இல்லை என்கிறது. ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கீட்டின்படி 74000 சுகாதார வல்லுனர்கள் தேவை என்று கணக்கிட்டுள்ளது!
உலக சுகாதார நிறுவனம், பொதுமக்கள் சுகாதார நலனிற்காக செலவிடும் நாடுகளின் வரிசைப் பட்டியலில் இந்தியா 71-ம் இடத்திலுள்ளது என்கிறது.
கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பி. எக்பால். “கேரளாவில் கர்ப்பமாகும் பெண்களில் 33 சதவீதம் பேருக்கு ரத்தசோகை நோய் உள்ளது. கேரளாவில்தான் இந்தியாவிலேயே மிகஅதிகமான அளவில், 35 சதவீத கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் செய்யப்படுகிறது!” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அமெரிக்க ஹார்வர்டு பொதுநல சுகாதார மருத்துவநல நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் 2015-ல் இந்தியாவின் மகப்பேறு கால மரணவிகிதம் 254-லிருந்து 100 ஆகக்குறைந்து விடும் என்று நம்புகிறார்கள்.

Tuesday, June 21, 2011

தங்கத்தை பூசினால் அழகு


“பளிச்” என்று ஜொலிக்கும் முகம் பார்ப்பவர்களை உடனே கவர்ந்துவிடுகிறது.
இயல்பான அழகை மாற்ற முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், செயற்கையாக எப்படி அழகுபடுத்துவது என்ற முயற்சிகளும் மறுபுறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த முயற்சியின் விளைவாக புதிதாக அறிமுகமாகி இருப்பதுதான் `தங்க பேஷியல்’.
லண்டனைச் சேர்ந்த `பெரா’ என்ற பெண்மணிதான் தங்க பேஷியலின் நாயகி. 30 ஆண்டு முயற்சியின் பலனாக `தங்க பேஷியலில்’ வெற்றி கண்டிருக்கிறார். அழகு ஆபரணமான தங்கத்தை `ஆலிகோ செல்லுலார் கோல்டு’ என்னும் திரவத் தங்கமாக மாற்றி, நவீன தொழில்நுட்ப முறையில் பேஷியல் சிகிச்சை அளிக்கிறார்.
முதலில் ஆவிக்குளியல் மூலம் ஓரளவுக்கு வியர்வை துளைகளை சுத்தம் செய்துவிட்டு திரவத்தங்கத்தை முகத் தில் பூசி, ஒருவிதமான அழுத்தம் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் தங்கம் சருமத்தை ஊடுருவிச் சென்று வியர்வைத்துளைகளை முழுதும் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதனால் மேனி பளபளப்பை பெறுகிறது.
“மற்ற பேஷியல் முறைகளைப்போல சில மணி நேரங்களில் முடிந்துவிடாது இந்த தங்க பேஷியல். சில வாரங்களுக்கு படிப்படியான சிகிச்சைக்குப் பிறகு நிச்சயம் பொலிவான முகஅழகைப் பெறலாம்” என்று நம்பிக்கையூட்டுகிறார் பெரா.