1) யார் யார் மலர் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்? யார் யார் எடுத்துக் கொள்ளக் கூடாது? பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினரும் அவரவரிடம் அமைந்துள்ள எதிர்மறை இயல்புகளுக்கேற்ப மலர்மருந்துகளை எடுதடதுக் கொள்ளலாம். இதில் எந்தவிதமான தடைகளும் கட்டுப்பாடுகளும் யாருக்கும் கிடையாது. 2) மலர் மருந்துகள் சாப்பிடும் போது காபி, புகை, மது குடித்தல் எதிர்மறையான மோசமான விளைவுகள் ஏற்படுமா? மலர் மருந்துகளுக்கு எதிர்மறை இயல்புகளை மாற்றும் ஆற்றல்தான் உண்டே தவிர எந்தச் சூழ்நிலையிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாது. மலர் மருந்தில் எந்த விதமான நச்சுத் தன்மையோ, கேடான தன்டையோ கிடையாது. 3) மலர் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் அதனையே சார்ந்து கிடக்கும் நிலை/பழக்க அடிமைத்தனம் (Habit Forming)ஏற்பட்டு விடுமா? மலர் மருந்துகளில் பௌதீக வடிவிலான மருந்துப்பொருள் (Physical Substance) எதுவும் இல்லை. மனச்சமநிலையை ஏற்படுத்தவே மலர் மருந்து உண்கிறோம். அத்தகைய மனச்சமநிலை (மன ஆரோக்கியம்) கிடைத்த பின்னர் மலர் மருந்துகளுக்கு வேலை ஏதுமில்லை. அதன் காரணமாக மருந்து சாப்பிடும் தேவையும் இருக்காது ஆர்வமும் குறைந்து.. மறைந்து போகும். மலர் மருந்தை இயல்பாகவே மறந்துவிட நேரிடும். எனவே மனோரீதியில் மலர்மருந்துகளுக்கு அடிமையாகி அதனை விட்டு விலக முடியாதநிலை ஏற்பட சாத்தியமே இல்லை. 4) உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மனநிலைகளும் 38 மலர் மருந்துகளுக்குள் அடங்கி விடுமா? நிறங்களுக்கு ஓர் உலகம் உண்டு. அதனோடு இந்தக் கேள்விக்கான பதிலை ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம். சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய மூன்று வண்ணங்கள் மட்டுமே அடிப்படை நிறங்கள். ஆனாலும் இவை ஒன்றோடொன்று இணையும் போது எண்ணற்ற நிறங்கள் பிறக்கின்றன. அதே போல மனித குலத்தில் 38 விதமான அடிப்படை மனநிலைகள் காணப்படுகின்றன. அவை ஒன்றோடென்று கலக்கும் போது கணக்கில் அடங்காத மனநிலைகள் உருவாகின்றன. 5) மலர்மருந்துகளை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன? கடந்த காலத்திலோ, கடந்த ஆண்டோ, கடந்த மாதமோ, கடந்த வாரமோ, நேற்றோ ஒரு நபரின் மனநிலை, உணர்வு நிலை எப்படி இருந்தது என்பதைவிட இப்பொழுது அவருடைய மனநிலை, உணர்வு நிலை எப்படி உள்ளது என்று கேட்டு விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். அந்த நபர் மலர்மருத்துவ மனவகைகளில் எந்த வகையை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் அதற்கு பொருத்தமான மருந்துகளை தேர்ந்தெடுப்பது எளிது. 6) இருட்டில், இரவு நேரங்களில் எனக்கு பயங்கள் ஏற்படுகின்றன. மிமுலஸ் சரியான மருந்தா? ஆஸ்பென் சரியான மருந்தா? இரவு அல்லது இருட்டு குறித்த பயத்திற்கு (Known Fear) மிமுலஸ் தான் மருந்து. ஆனால் இருட்டுக்குள் ஏதோ ஒன்று இருப்பதாக எண்ணி பயப்படுவது அல்லது கற்பனை உருவங்கள், நிகழ்வுகளை எண்ணிப் பயப்படுவது போன்றவற்றிற்கு உரிய மருந்து ஆஸ்பென். இந்த இருவித பயங்களும் இருக்குமானால் இரண்டு மருந்துகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். 7) கர்ப்பிணிப் பெண்கள் மலர் மருந்துகள் சாப்பிடலாமா? சாப்பிடலாம். மலர்மருந்துகளால் எந்தத் தீங்கும் ஏற்படாது. மேலும் ஆரோக்கியமான, நேர்மறையான உணர்வுகளும், மனநிலைகளும் அமையப்பெற்ற கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகள் சிறந்த நோய் எதிர்ப்பாற்றலும், அறிவாற்றலும், பண்புகளும் உள்ளவர்களாக இருப்பார்கள் 8) ரெஸ்கியூ ரெமடி மிக விரைவாக, உடனுக்குடன் பலனளிக்கும் என்று கூறுகிறார்களே? உண்மையா? ஆம், ஜெட் வேகத்தில் நிவாரணம் தரும் மலர் மருந்து இது. ஆழமான மனப்பிரச்சனைகளுக்கு அல்லாமல் அவசரமான நெருக்கடியான சூழ்நிலைகளில் தான் பெரும்பாலும் ரெஸ்கியூ ரெமடி பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஆர்.ஆர்.மிகத்துரிதமாகப் பணியாற்றி அதியற்புதமாக தன் ஆற்றலை வெளிப்படுத்தி நிவாரணம் வழங்குகிறது. மலர்மருந்துகள் மனிதநேயமும், எல்லையில்லா கருனைணயும் கொண்டவை என்பதற்கு இம்மருந்து சிறந்த எடுத்துக்காட்டு. 9) சைனஸ், ஆஸ்துமா, மூட்டுவலி, அல்சர், ஒற்றைத் தலைவலி போன்ற நோய்களுக்கு என்ன மலர் மருந்துகள் உள்ளன? மலர்மருந்துகளை உடல் நோய்களுக்கு நேரடியாகப் பயன்படுத்த முடியாது. ஒரு நோயாளி ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ள போது அவரது நோய்க்குக் காரணமான அல்லது நோயை மோசமாக்கக் கூடிய அவரது எதிர்மறையான எண்ணங்களை, உணர்வுநிலைகளை அகற்ற மலர்மருந்துகள் உதவும். எனவே, உடல் வியாதிக் குறிகளை ஒதுக்கிவிட்டு, எந்த நோய்நிலையிலும் நோயாளியின் மனநிலை, உணர்வு நிலைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதே மலர்மருத்துவம். ஆரம்பப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணி புரிந்து 25 வயதுப் பெண்ணுக்கு உணவுக்குழாய், இரைப்பை முழுதும் எரிச்சல் வலி ஏற்பட்டிருந்தது. ஒருவார காலம் ஹோமியோபதி மருந்து அளிக்கப்பட்டது. அமிலச் சுரப்பு (Acidity) குறைந்து எரிச்சல் வலியில் நிவாரணம் கிடைத்தது. இருப்பினும் நீண்ட நாளாக இப்பிரச்சனையால் அவதிப்பட்டதாலும், இன்னும் முழுகுணம் கிடைக்காததாலும் அப்பெண்ணிடம் ஒருவித பயமும் பதட்டமும் காணப்பட்டது. அவர், டாக்டர் இந்த நெஞ்சு எரிச்சல் வந்துவிட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது. எந்த நேரத்தில் அது வருமோ என்ற பயம் இருந்துகொண்டே இருக்கிறது. மேலும் அல்சர் மாதிரி நோய் ரொம்பநாள் இருந்தால் கேன்சராகிவிடும் என்கிறார்கள். அந்த பயமும் உள்ளது. வயிற்றுக்குள் வேறு எதும் உள்ளதா என்று அடிக்கடி பயப்படுவேன். எப்படியாவது சீக்கிரமாகக் குணப்படுத்துங்கள என்றார். இப்படிக் கூறியதைத் தொடர்ந்து மிமுலஸ், ஆஸ்பென் மலர் மருந்துக் கலவை 15 நாட்கள் கொடுக்கப்பட்டது. அவருடைய பயங்களும் எல்லா நோய்க்குறிகளும் மறைந்து முழுநலம் அடைந்தார். 10) அதிகம் உணர்ச்சிவசப்படுவதால் அடிக்கடி இரத்தக் கொதிப்பு அதிகரிக்கும் நபர்களுக்கு என்ன மலர் மருந்துகள் பயன்படும்? ரெஸ்கியூ ரெமடி சில மாத காலம் தினமும் 3, 4 வேளை தரலாம். அல்லது செர்ரிப்பழம் இம்ப்பேஷன்ஸ் கலவையை பயன்னடுத்தலாம். மணம் அமைதி அடையும். இரத்தக்கொதிப்பு அடங்கும்.நன்றி: althope.com |
புதிய பதிவுகள்
Monday, August 8, 2011
மலர் மருத்துவ கேள்வி பதில்
Labels:
மலர் மருத்துவம் flower remedies
Subscribe to:
Post Comments (Atom)
-
"சித்த மருத்துவம்" 2500 புத்தகம் வழங்கல் + மருத்துவ நூல்களில் சொல்லப்பட்ட "நோய் அறிதல் முறைகள் (DIAGNOSTIC METHODS)" -...
-
📚 சித்த மருத்துவ நூல்கள் உலகின் மற்ற மருத்துவ நூல்களை விட முற்றிலும் மாறுபட்டதும் நூதனமானவையுமாகும். இந்த நூல்கள் விரிவான ஆதாரங்களையும் ...
-
🌿 " வர்ம மருத்துவம் + நாடி அறிதல்" 750 மருத்துவ நூல்கள் ( PDF), வர்ம மசாஜ் வீடியோ ,MP3 வழங்கல் மற்றும் ஆய்வரங்கு 🌿 ...
-
கட்டுரை ஆசிரியர்:டாக்டர்.எஸ்.வெங்கடாசலம்.சாத்தூர். உலகில் மனப்பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் யார்? பிறப்பு முதல் இறப்பு...
-
“உலக மருத்துவ சரித்திரத்தில் ஆயுர்வேத கண் மருத்துவ புரட்சி” குணப்படுத்த முடியாத கண்நோய்களை குணப்படுத்தும் “சவால்” மூக்கு கண்ணாடி, கண் ஆ...
-
முழு சக்தி படைத்த ஆண் மகனாக மாற விரும்பும் ஒவ்வொருவரும் இந்த " இன்பக்கலை பயிற்சிகள் ...
-
செக்ஸ் குறித்த முழுமையான மருத்துவ தகவல்கள் அடங்கிய மூன்று புத்தகம்+மூன்று டிவிடி
-
இசை மருத்துவம்" (MUSIC THERAPY) நேரடி பயிற்சி. இசை மருத்துவம்" (MUSIC THERAPY) நோய்களை தீர்க்கும் இசைகள். (SOUNDS HEALING)...
-
டாக்டர் குமரி ஆ.குமரேசன், MSC (PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT. சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்...
-
இயற்கைக்கு எதிராய் இன்றைய வாழ்கை. தூங்கும் நேரத்தில் வேலை, வேலை(பகல்) நேரத்தில் தூக்கம், அமர்ந்த இடத்திலேயே பணி, போக்குவரவிற்கு சொகுசு வா...
No comments:
Post a Comment