இருமும் பொழுது எப்போதாவது ஒருமுறையாவது கையளவு அல்லது அதற்குமேல் இரத்தமும் சேர்ந்து வந்தாலும் கூட அது நோயாளிக்கும் அவரது உற்றாருக்கும் அதிர்ச்சி தரக்கூடியது. இது நுரையீரலில் ஏற்படும் நோய்களான நுரையீரல் புற்றுநோய், தீவிர நிலையிலுள்ள காசநோய் அல்லது நுரையீரலில் துளைகளை உருவாக்கும் இதர நோய்களினால் ஏற்படுகிறது.
நோயாளியை கவனித்துக் கொள்ளும்முறை
- தலை மற்றும் தோள்ப்பட்டையை சற்று உயர்வாக பாதிக்கப்பட்ட பக்கம் சாய்த்து நோயாளியைப் படுக்க வையுங்கள்.

- வாய் வழியாக எந்த உணவையோ நீரையோ கொடுக்கவேண்டாம்
மார்பில் ஏற்பட்ட காயத்தினால் நுரையீரலில் இரத்தக்கசிவு இருக்குமானால் சிறிதளவு பாலித்தீன் கொண்டுள்ள நாடா மூலம் காயத்தை இறுக்கமாகக் கட்டுங்கள். இது நெஞ்சுக் கூட்டுக்குள்ளும் காயத்திலும் காற்று புகாமல் தடுக்கும் இன்ன பிற பாதிப்புகளை ஏற்படுத்தாது.
உடனே டாக்டரை வரச்செய்யுங்கள் அல்லது மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸை அழையுங்கள்.
No comments:
Post a Comment