இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு இருக்கவேண்டிய குறிப்பிட்ட அளவைவிட அதிகமாகும் பொழுது ஏற்படும் நோய்தான் டையாபிடஸ் எனப்படும் நீரிழிவு நோய் ஆகும். இத்தருணத்தில் ஒரு நபர் தன் சுயநினைவை இழக்கக்கூடும். சுயநினைவை இழப்பது என்பது இரத்த சர்க்கரையின் அளவு குறிப்பிட்ட அளவுக்கும் கீழ் குறையும் போதும் ஏற்படும். மனிதர்களின் சுயநினைவு நிலை என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பொருத்துள்ளது. நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படாதபட்சத்தில், ஒரு குறிப்பிட்ட காலங்களுக்குப் பிறகு (சில நாட்கள் அல்லது வாரங்கள் ) இரத்தத்தில் சர்க்கரை அளவு இருக்கவேண்டிய அளவை விட அதிகமாகிறது. இதன் விளைவாக அந்நபர் சுயநினைவை இழக்கிறார்.
டையாபிடஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதற்காக இன்சுலின் ஊசிகள் போடப்படுகின்றன. இதன் மூலமும் ஒருவகையான சுயநினைவு இழத்தல் மற்றும் கோமா நிலை ஏற்படலாம். இன்சுலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வெகுவாகக் குறைக்கும் வேலையினை செய்கிறது. இப்படி இன்சுலின் சர்க்கரையின் அளவை மிக விரைவாகக் குறைப்பதாலும் அல்லது அதிகளவில் குறைப்பதாலும் உடனடியாக அந்நபர் சுயநினைவை இழக்கிறார். பொதுவாக இது சர்க்கரையின் அளவு குறைந்த சில நிமிடங்கள் அல்லது சில நொடிகளில் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் மற்றவர்களின் காதுகளுக்குக் கேட்காதபடியும்,புரியாதபடியும்,முணகியபடியும் நோயாளி பேசுவது இயல்பு. விபத்துக்குள்ளானவரிடம் ஏதேனும் மருத்துவ அடையாள அட்டை அல்லது மருத்துவம் சார்ந்த அதிநவீன பொருட்கள் உள்ளதா என ஆராய்ந்து அதன் மூலம் நோயாளிக்கு டையாபிடஸ் இருக்கிறதா என்பதை உறுதி செய்யலாம். டையாபிடஸ் உள்ள ஒரு நபருக்கு ஒரு முறை சுயநினைவு இழப்பு ஏற்பட்டால், மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் அந்நபர் கோமா என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்.
No comments:
Post a Comment