புதிய பதிவுகள்

Monday, August 8, 2011

மாற்று மருத்துவம் - தெரிந்து கொள்ளுங்கள்




மனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் உள்ள நோய்களை முறியடிப்பதிலும், நோயற்ற உலகம் அமைப்பதிலும் உலகம் முழுவதும் சுமார் 150 மாற்று மருத்துவங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. இவற்றில் ஜெர்மன் ஹோமியோபதி, சீன அக்குப்பஞ்சர், லண்டன் மலர் மருத்துவம், இந்திய ஆயுர்வேதம், சித்தமருத்துவம், அரபு யுனானி மற்றும் இயற்கை, யோகா, மூலிகை மருத்துவங்கள் போன்றவை மிக முக்கியமானவை. மாற்று மருத்துவங்களின் அடிப்படைத் தத்துவங்களும், சிகிச்சை முறைகளும் ஆங்கில மருத்துவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. திட்டவட்டமான அனுபவச் சோதனைகளால் நிறுவப்பட்டவை. உலக நல நிறுவனத்தால் (W.H.O.)  அங்கீகரிக்கப்பட்டவை. மனித உடலிலுள்ள இயற்கையான உயிர்ச்சக்தி (VITAL FORCE) ஓட்டத்தில் உள்ள குறைபாடுகள், தடைகள் காரணமாக நோய்கள் உருவாகின்றன என்பது மாற்று மருத்துவ நோயியல் தத்துவம். நோயுற்ற மனிதனின் உடலை மட்டுமின்றி பசி, தாகம், கோபம், சந்தேகம், விருப்பு வெறுப்புகள், கனவுகள் போன்றவற்றையும், ஒவ்வொரு மனிதரிடமிருந்து பிரித்துக்காட்டும் தனித்தன்மைகளையும், உணர்வு நிலைகள், மனநிலைகள், குடும்பச் சூழ்நிலைகள் போன்றவற்றையும் தீர விசாரித்து முழுமையாக ஆய்வு செய்து (HOLISTIC APPROACH) மாற்று மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுவாக நோய் குணமாகும்போது மூன்றுவித நிகழ்வுகள் ஏற்படுகின்றன. 1.நோய்கள் உள்ளமுக்கப்படுதல் (SUPPRESSION) 2.தற்காலிக நிவாரணம் பெறுதல் (PALLIATION)  3.முழு நலம் அடைதல் (CURE). மாற்று மருத்துவங்களின் நோக்கம் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து நிவாரணம் மட்டுமின்றி முழுநலத்தையும் அடைதல் என்பதை மையமாகக் கொண்டது.

 ஹோமியோபதி, அக்குப்பஞ்சர், மலர் மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் போன்ற மாற்று மருத்துவங்களில் சிறப்புத்தன்மைகளும் நன்மைகளும் ஏராளம். பக்கவிளைவுகள், பின்விளைவுகள் இல்லை. மாற்று மருத்தவ சிகிச்சையில் உள்ளவர்களை எளிதில் தொற்று நோய்கள் நெருங்காது. சயரோகம் (T.B.) புற்றுநோய் (CANCER) போன்ற பெருநோய்கள் ஏற்படாது. டெங்குசுரம், சிக்குன்குனியா போன்ற சவாலான நோய்களை ஹோமியோ, சித்தா, அக்குப்பஞ்சர் சிகிச்சைகள் மூலம் முழுமையாக நலப்படுத்தியதை நாடு அறியும். ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்தவே இயலாது என்று கூறும் பலவித தோல்நோய்கள், மனநோய்கள், ஆட்கொல்லி நோய்களை மாற்று மருத்துவங்கள் மூலம் பெருமளவு முன்னேற்றம் காணமுடியும். பெரும்பாலான அறுவைச் சிகிச்சைகளை தவிர்க்க முடியும். அனைத்திற்கும் மேலாக ஒப்பீட்டு ரீதியில் ஹோமியோ, அக்குப்பஞ்சர் போன்ற சிகிச்சைகளில் பணச்செலவு மிகக்குறைவு. 

No comments:

Post a Comment