கட்டுரை ஆசிரியர்: Dr.S.வெங்கடாசலம்,
"செக்ஸ் என்பது தனி நபரின் பிரச்சினை மட்டுமல்ல, சமூகப் பிரச்சினையும் கூட" என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது நூலொன்றில் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை. வகுப்பறைக்குள் மாணவிகளை பலாத்காரம் செய்யும் ஆசிரியர்களைப் பற்றியும், காவல் நிலையத்திலே கணவர் முன்பே பெண்ணை சிதைத்த போலீஸ் மிருகங்களைப் பற்றியும், தெய்வீகம், தியானம் என்ற போர்வையில் காமக்களியாட்டங்களும், கொலைகளும் நடத்திய ஹைடெக் சாமியார்கள் பற்றியும், தேவாலய வளாகத்திலேயே பெண்களை சூறையாடும் பாதிரியார்களைப் பற்றியும், சாலையில் சென்ற இளம் பெண்ணை வம்பு செய்து ஆடையைப் பிடித்து இழுத்து அலைக்கழித்து உயிரையே பறித்த, இளைஞர்களைப் பற்றியும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பாலியல் குற்றங்கள் எல்லா இடங்களிலும் எல்லா மட்டங்களிலும் பரவி வருகின்றன. பாலியல் பிழைகளின் பின்புலமாய் தகவல் தொடர்பு சாதனங்கள்: மனித உரிமைகளுக்காக, சமூக நியாயங்களுக்காக, மனித மேன்மை-களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பத்திரிகைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் பாலியல் வேட்கையை கிளறி விடுகின்றன. வக்கிர உணர்வுகளுக்கான விதைகளைத் தூவுகின்றன. வன்முறை உணர்வைத் தூண்டுகின்றன. இவைகளால் உந்தித் தள்ளப்படும் குழந்தைகளும், மாணவ, மாணவியரும், இளைஞர்களும் தவறான (பாலியல்) பாதைகளில் பயணம் செய்து வருகின்றனர். ஒரு பக்கம் தகவல் தொடர்புச் சாதனங்கள் பாலியல் தொடர்பான வியங்களை மதவாத கருத்துக்களுக்கு உரமூட்டும் வகையிலும், விஞ்ஞானத்துக்கு புறம்பான வகையிலும் பரப்புகின்றன. மறுபக்கம் மேலைநாட்டு கலாச்சாரமும் தங்குதடையின்றி இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலை- நாடுகளில் சாதாரணமானவர்களிலிருந்து ஜனாதிபதி வரை பாலியல் குற்றங்களில் கற்பு பற்றியும் உரக்க கூச்சலிடும் இங்கே மேலைநாட்டு (அ) நாகரீகங்களின் நச்சு நிழல் படிவதால் பாலியல் தவறுகள் பெருக்கெடுக்கின்றன. மனித உறவுகளில் மாசு படிகிறது. சமூக மாண்புகள் அழிகின்றன. செக்ஸ் புதிரா? புனிதமா? செக்ஸ் என்பது புதிரானதா? செக்ஸ் என்பது புனிதமானதா? செக்ஸ் என்பது விற்பனைச் சரக்கா? செக்ஸ் என்பது பாவச் செயலா? என்ற வினாக்கள் எழுந்துள்ள காலம் இது. செக்ஸ் குறித்து கடந்த காலச் சிந்தனைகளுக்குள்ளே சமுதாயம் மூழ்கி கிடப்பதால் பாலியல் ஞானம் பெறத் திறந்த, விரிவான விவாதம் இன்னும் அமையவில்லை. பெண்ணைப் பற்றிய கருத்துக்களின் அளவுதான் பாலியல் ஞானத்தின் அளவாகவும் உள்ளது. பெண் போகப் பொருளாக, பிள்ளை பெறும் எந்திரமாக மட்டுமே கருதப்படுவதால், சமூகத்தின் பாலியல் அறிவு பலவீனமாகவே உள்ளது. பெண் புரியாத புதிர் என்றும், பெண் புனிதமானவள் என்றும் பேசப்படுவதால் செக்ஸ் புதிராகவோ, புனிதமாகவோ கருதப்படுகிற அவலம் உள்ளது. பசியைப் போல, தாகத்தைப் போல, சுவாசத்தைப் போல இயற்கையான ஒன்றாய் யதார்த்தமான ஒன்றாய், உடலியக்கச் செயல்பாடுகளில் ஒன்றாய் இருக்கக்கூடிய செக்ஸ் 'புதிர்' என்றும் 'புனிதம்' என்றும் பேசப்படுகிறது. அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் வயாக்ரா: மேலை நாடுகளின் பாலியல் பாதை விபரீத விளைவுகளை ஏற்படுத்தம் என்பதற்கு "வயாக்ரா" சரியான சான்றாகும். பாலுணர்வு கலந்த அன்பின் வெளிப்பாடான காமத்தை,மலரினும் மெல்லிய காமத்தை, மிருக வெறியாக மாற்றும் மாத்திரைதான் வயாக்ரா. வயாக்ரா என்பது உடலுறவுக்குப் பின்னரும், விரைப்புத் தன்மையை நீடிக்கச் செய்து துன்பத்தை ஏற்படுத்துகின்றது. இரத்த அழுத்தத்தைத் குறைக்கின்றது. புராஸ்டேட் சுரப்பி வீங்குகிறது. புராஸ்டேட் சுரப்பியிலும் முதுகுத்தண்டிலும் புற்றுநோய் ஏற்படுத்துகிறது. சிறுநீரகம் செயலிழக்கின்றது. ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகின்றது. விழிகளின் மிக மெல்லிய இரத்த நாளங்களை விரிவடையச் செய்து பார்வையை பறிக்கிறது. கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் கண்மூடித்தனமான கலாச்சாரத்தை பெருமை பாராட்டுகின்றனர். ஹோமியோபதி மனிதனை மனிதனாக நோக்குகிறது. அவனது உடல், மன இயக்கச் சீர்குலைவைச் சரிசெய்து நலத்தை மீட்கிறது. ஆற்றல் ஊட்டுகிறது. பல்வேறு அக, புற நோய்களுக்கும் ஆட்பட்ட மனிதனுக்கு ஹோமியோபதியால் பேருதவி புரிய முடிகிறது. வயிற்றுப்பசி மற்றும் ஜீரணத்தை மையப்படுத்தி (பசியின்மை, அகோரப்பசி, பசித்தும் சாப்பிட இயலாமை, சாப்பிட்டால் வாந்தி, சாப்பிட்டவுடன் வயிற்று வலி என்ற) விதவிதமான நோய்குறிகள் கிளைப்பதைப் போலவே பாலுணர்வை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு குறிகள் வெளிப்படுகின்றன. அவற்றுக்கான முக்கியமான சில ஹோமியோபதி மருந்துகள் பின்வருமாறு 1. அக்னஸ் காஸ்டஸ்: அதிக உடலுறவு அல்லது சுய இன்ப பெண்கள் சக்தியிழப்பு (குறிப்பாக ஆண்கள்). 2. ஓனோஸ் மோடியம்: உடலுறவில் வெறுப்பு, இச்சையின்மை (குறிப்பாக பெண்கள்) 3. செலினியம்: விருப்பம் அதிகம், செயல்திறன் குறைவு, விந்து நீர்த்திருத்தல், விரைவில் விந்து வெளிப்பாடு. 4. கோனியம்: பெண் எதிரே நின்றாலே காமவேட்கை, குறி எழுச்சி, விந்து வெளிப்படுதல் மற்றும் காம இச்சையை அடக்கியதால் ஏற்பட்ட பின்விளைவுகள். 5. புபோ / யுஸ்டிலகோ: சுய இன்ப தாகம் அடக்க முடியாமல் தனியே சென்று விட விரும்புதல், தனியறையில் (கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில்) சுய இன்பத்தில் 6. லைகோபோடியம்: ஆண்மைக்குறைவு, சிறு வயதிலேயே சுய இன்பப் பழக்கத்தால் ஆண்குறி சிறுத்தல், தளர்தல், வயதானவர்களின் ஆண்மைக்குறைவு. 7. ஸ்டாபிசாக்ரியா: அளவு மீறிய சுய இன்பத்தால், பாலுறவால் ஆண்மையின்மை. 8. பாஸ் ஆசிட்: மிதமிஞ்சிய உடலுறவால், சுய இன்பப் பழக்கத்தால் பலவீனம், கடுமையான நரம்புத்தளர்ச்சி. 9. காந்தாரிஸ்/ பிக்ரிட் ஆசிட்: அதிகமான காம உணர்ச்சியுடன், வலியுடன் உறுப்பு பயங்கரமாக விறைப்படைதல். 10. டயாஸ்கோரியா: பெண்களுடன் உடலுறவு கொள்வது போல் கனவில் விந்து வெளியேறுதல், காலையில் உடல் முழுவதும் வலி. 11. ஆசிட் புளோர்: ஒரே பெண்ணிடம் திருப்தியடையாமல் பல பெண்களை விரும்பும் அதிக காமம். 12. கலாடியம்: உடலுறவில் ஆர்வம் அதிகம், குறி விரைப்பின்மை, விந்து வெளிவராமை. 13. நேட்ரம் மூர்: தனக்கு மணமாகியிருந்தும் வேறு ஆண் அல்லது பெண்ணை விரும்புதல். 14. ஓரிகானம் / கிரரியோலா / மூரக்ஸ்: பெண்களின் பிறப்புறுப்பில் வேதனையான, உணர்ச்சியுடன் கூடிய சுய இன்பம் செய்ய தீராத ஆவல். 15. இக்னியா: காதல் தோல்வி, உணர்ச்சிகளை மனத்தினுள் புதைத்துக் கொள்ளுதல். இன்னும் இவை போல ஏராளமான ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. இவை மனிதனைச் சமநிலைக்கு ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வருகின்றன. செக்ஸ் என்ற ஆற்றல் மிக்க உடலியல் மற்றும் உளவியல் திறனைச் செம்மைப்படுத்துகின்றன. மனிதன் இயற்கையின் சீமந்த புத்திரன். இயற்கையன்னைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்த செல்லப்பிள்ளை. மனிதனுக்குள் ஆரோக்கியத்தை, ஆற்றல்களை இயற்கை புதைத்து வைத்திருக்கிறது. அவற்றை மிக நேர்த்தியாகப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், ஹோமியோபதி பெருந்துணை புரிகிறது. (குறிப்பு: கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை அனுபவமும், தகுதியும் உள்ள ஹோமியோ மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரையின் அடிப்படையில்தான் உட்கொள்ள வேண்டாம். |
No comments:
Post a Comment