புதிய பதிவுகள்

Monday, August 8, 2011

ஹோமியோபதி




நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானமா! அல்லது வெறும் சர்க்கரை மாத்திரைகளா!!
ஹோமியோபதி பற்றிய தவறான கூற்றுக்களும் விளக்கங்களும்

கூற்று 1 : ஹோமியோபதி நிரூபிக்கப்படாத விஞ்ஞானம். உண்மை : பரிசோதனை அடிப்படையிலான மருந்தியல் மற்றும் கிளினிக்கல் புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமைந்தது ஹோமியோபதி. கடந்த 200 ஆண்டுகளில் பல்வேறு நோய் அறிகுறிகளுக்கு ஹோமியோபதி மருந்துகளின் குணப்படுத்தும் திறன் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் கிளினிக்கல் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. உண்மையில் ஹோமியோபதியைத் தோற்றுவித்தவர்தான் அலோபதி என்ற பெயரை உருவாக்கினார். அவரை பரிசோதனை மருந்தியலின் தந்தை என்று அலோபதி மருத்துவர்கள் கருதுகின்றனர். ஹோமியோபதி நன்கு நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானமாகும்.

கூற்று 2 : ஹோமியோபதி மருந்துகள் வெறும் சர்க்கரை மாத்திரைகள் தான். அவற்றுக்கு மருந்துக்குரிய மதிப்பு எதுவும் கிடையாது. மருந்து போன்ற வெற்று மாத்திரைகளாகவே அவை செயல்படுகின்றன.
 
உண்மை : ஆம். வெள்ளை நிற சர்க்கரை மாத்திரைகளுக்கு மருந்துக்குரிய மதிப்பு எதுவும் இல்லை தான். ஆனால் இவை ஆல்கஹால் அடிப்படையிலான மருந்துகளைக் ' கொண்டு சேர்க்கும் வாகனங்களாகச்'  செயல்படுகின்றன. இன்னொரு வகையில் சொன்னால், ஹோமியோபதி மருந்துகளை நேரடியாகவோ, தண்ணீரில் கலந்தோ எடுத்துக் கொள்ளலாம். ஹோமியோபதி மருந்துகள் உலகமெங்கும் விஞ்ஞான முறைப்படி ஆராயப்பட்டு, பலவகையான நோய்களுக்கு பயன்மிக்க மருந்து என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவை மருந்து போன்ற வெற்று மாத்திரைகள் அல்ல.

கூற்று 3 : ஹோமியோபதி மெதுவாகச் செயல்படக் கூடியது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இருமல், ஜலதோம் போன்ற திடீர் அல்லது உடனடி நோய்களில் இவற்றை பயன்படுத்த முடியாது.
 
உண்மை : இதுபோன்ற நோய்களிலும் ஹோமியோபதி விரைந்து செயல்படுகிறது. தொற்றுநோய், காய்ச்சல், ஜலதோம் போன்றவற்றைத் திறம்படக் குணப்படுத்தக் கூடியது. துரதிடவசமாக குறுகிய கால பிரச்சனை நீண்ட கால நோயாக மாறும்போதுதான் மக்கள் ஹோமியோபதியை நாடுகின்றனர். இத்தகைய நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சைக்கு நீண்டகாலம் ஆகிறது. மேலும், ஹோமியோபதியை நாடி வருவது பெரும்பாலும் முடக்குவாதம், அலர்ஜி, ஆஸ்துமா நோயாளிகளே. இத்தகைய நோய்களைக் குணப்படுத்தும் போது எந்த மருத்துவ முறையானாலும் நீண்ட காலமே ஆகும்.

கூற்று 4 : ஹோமியோபதி சிகிச்சை எடுக்கும் போது கண்டிப்பான பத்திய உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். 
உண்மை : சில நோயாளிகளிடம் வெங்காயம், வெள்ளைப்பூண்டு, காபி, தேனீர், புகையிலை, மது போன்றவற்றைத் தவிர்க்கும்படி கூறப்படுகிறது. ஏனெனில், இவை ஹோமியோபதி மருந்துகளின் செயல்பாட்டில் குறுக்கிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் மது மற்றும் புகையிலைக் கட்டுப்பாடு உடலுக்கு ஆரோக்கியமானதும் ஆகும்.

கூற்று 5 : சர்க்கரை நோய் இருந்தால் ஹோமியோபதி பயன்படுத்த முடியாது.
 
உண்மை : அப்படி அல்ல. சின்னஞ்சிறு சர்க்கரை உருண்டைகளை உட்கொள்வதால் பெரிய விளைவு ஏற்பட்டு விடாது. சில உருண்டைகளில் இருப்பதைவிட அதிக அளவு சர்க்கரையை அன்றாட உணவில் நாம் எடுத்துக் கொள்கிறோம். மிகவும் முற்றிய நிலையில் உள்ள சர்க்கரை நோயாளிகள் தண்ணீரில் ஹோமியோபதி திரவ மருந்தைக் கலந்து சொட்டுகளாக எடுக்கலாம்.

கூற்று 6 : எல்லா வகையான நோய்களுக்கும் அதே வெள்ளை மாத்திரைகள்தான் ஹோமியோபதி டாக்டர் தருகின்றனர். அவை எப்படி பயன்மிக்கதாக இருக்கும்? உண்மை : நோயின் தன்மையைப் பொறுத்து சர்க்கரை உருண்டைகளில் வெவ்வேறு திரவ மருந்துகளை ஹோமியோபதி டாக்டர்கள் கலந்து தருகின்றனர். மருந்தை எடுத்துச் சென்று சேர்க்கும் வாகனங்களாகத்தான் சர்க்கரை உருண்டைகள் பயன்படுகின்றன. 1100க்கும் அதிகமான வெவ்வேறு மருந்துக் கரைசல் ரகங்களில் இருந்து நோயாளியின் நோய் நிலைமைக்கு ஏற்ற மருந்தை டாக்டர் தேர்வு செய்கிறார். மக்களுடைய மனங்களில் ஹோமியோபதி பற்றிய பற்பல சந்தேகங்களும் புதிர்களும் உள்ளன. சில பொதுவான சந்தேகங்களைப் போக்க முயன்றிருக்கிறோம். 

No comments:

Post a Comment