கட்டுரை ஆசிரியர்:Dr.V.வெங்கடாசலம்
சிறுநீர்கற்களை உருவாக்கும் முக்கிய மூலப்பொருட்கள் கால்சியம், ஆக்சலேட், யூரிக்அமிலம், பொதுவாக இவை சிறுநீரில் கரைந்து கழிவுகளாக வெளியேறும். ஆனால் சிலரின் சிறுநீரில் இவை அதிகமிருப்பதால் முழுவதுமாக சிறுநீரில் கரையாமல் படிகங்களாகத் தங்கி, ஒன்றாகிக் கற்களாகின்றன. மக்களில் 12% பேர்கள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். கற்களைக் கரைக்கவோ, மீண்டும் வராமல் தடுக்கவோ வழியற்ற ஆங்கில மருத்துவத்தில் ஆபரேஷன் மூலம் கற்களை உடைக்க ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை செலவாகிறது. முன்பு 40, 45 வயதுக்கும் மேல் தோன்றிய இந்நோய் இப்போது 20, 30 வயதினருக்கும் வந்துவிட்டது. உடல் பருமனும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்களும், அதிகளவு உப்பு, கார உணவுகளும், கால்சியம் மாத்திரைகளும் முக்கியக் காரணங்கள். எனினும் ஹோமியோபதி பார்வையில் சில கேள்விகள் எழுகின்றன. 12% பேர்களுக்கு மட்டும் ஏன் சிறுநீர்கல் ஏற்படுகிறது? ஒரே குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது? ஒரே வகை உணவுப்பழக்கம், குடிநீர், சுற்றுச்சூழலில் வாழ்பவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் ஏன் கற்கள் உருவாகின்றன? இந்த வினாக்கள் ஹோமியோபதியில் மிக அடிப்படையானவை. சிக்குன்குனியாவானாலும், சிறுநீர்கல்லானாலும் எந்த நோய்களும் எல்லோரையும் தாக்குவதில்லை. உயிராற்றல் பலமிழந்த மனிதர்களையே நோய்கள் முற்றுகையிடுகின்றன. நோயுற்ற மனிதரின் உயிராற்றலை சீர் செய்தால் மட்டுமே நோய்களுக்கு முழு குணம் கிடைக்கும. ஹோமியோ & மூலிகை மருந்துகள் சிறுநீரகப் செயல்திறனையும், இயற்கையான எதிர்ப்புத்திறனையும் மேம்படுத்துகிறது. இதனால் சிறுநீர்கற்கள் துகள்களாக உடைந்து, வெளியேறுவதோடு, மீண்டும் கற்கள் உருவாகும் நிலை பெருமளவு குறைகிறது. மேலும் ஆண், பெண் சிறுநீர் தொற்றுநோய்களுக்கும் விடுதலை கிடைக்கிறது. ஹோமியோபதி மருந்துகள் பிறந்த குழந்தை, கர்ப்பிணி, முதியோர் உட்பட யாவரும் உண்ணலாம். பக்கவிளைவு இல்லை. பாதுகாப்பானது. மனித உடல் போர்க்களம் அல்ல! கத்தியும் ஆபரேசனும் வேண்டாம்!. |
No comments:
Post a Comment