புதிய பதிவுகள்

Wednesday, October 5, 2011

முதல் உதவி -- மின்சார அதிர்ச்சி ( தாக்குதல் ) & தண்ணீரில் மூழ்குதல்



மின்சாதனங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் ஒருவர் சுயநினைவின்றி கிடப்பதைக் கொண்டு அவர் விபத்துக்குள்ளானவர் என்பதை மிக சுலபமாகக் கண்டறியலாம்.
சிகிச்சை
  • விபத்துக்குள்ளானவரைத் தொடும் முன் மின் இணைப்புகளைத் துண்டித்துவிடுங்கள்
  • விபத்துக்குள்ளானவரால் சுவாசிக்க முடிந்தால் உடனே அவரை விபத்திலிருந்து மீளும் நிலையில் வையுங்கள். அதாவது அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக ஒருபக்கமாக சாய்த்து படுக்கவையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள்.
  • விபத்துக்குள்ளானவரின் இதயம் மற்றும் மூச்சு நின்று போயிருந்தால்,கிஸ் ஆஃப் லைஃப் (வாய் மீது வாய் வைத்து மூச்சு அளிக்கும் முறை)என்ற முறையினையும் மற்றும் மார்பு பகுதியில் கைகளால் அழுத்தமான இயக்கம் கொடுத்து மசாஜ் செய்தலையும் உடனடியாக ஆரம்பிக்கவும்.
  • மருத்துவரை அல்லது ஆம்புலன்ஸை அழைக்க ஆள் அனுப்புங்கள்.

தண்ணீரில் மூழ்குதல்
சிகிச்சை
  • காற்றோட்டத்திற்கு வழி வகை செய்து விபத்துக்குள்ளானவர் சுவாசிக்கிறாரா? இதயம் சரியாக இயங்குகிறதா? என்பதனைக் கண்டு தீர்மானிக்கவும்.
  • விபத்துக்குள்ளானவரின் இதயம் மற்றும் மூச்சு நின்று போயிருந்தால்,கிஸ் ஆஃப் லைஃப் (வாய் மீது வாய் வைத்து மூச்சு அளிக்கும் முறை) என்ற முறையினையும் மற்றும் மார்பு பகுதியில் கைகளால் அழுத்தமான இயக்கம் கொடுத்து மசாஜ் செய்தலையும் உடனடியாக ஆரம்பிக்கவும்.
  • விபத்துக்குள்ளானவர் அப்போதுதான் சுயநினைவை இழந்தவராகக் காணப்பட்டால், தண்ணீரிலிருந்து எடுத்தவுடன் அவரை விபத்திலிருந்து மீளும் நிலையில் வையுங்கள். இங்கு மீளுயிர்ப்பு நிலை என்பது குடித்த திரவம் வெளியேறும் வண்ணம் தலையைத் தாழ்த்தி உடலை ஒரளவு உயர்த்தி ஆளைப் பிரட்டி வைப்பதாகும்.
  • மருத்துவரை அல்லது ஆம்புலன்ஸை அழைக்க உடனடியாக ஆள் அனுப்புங்கள்

No comments:

Post a Comment