புதிய பதிவுகள்

Tuesday, October 16, 2012

டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி



டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்
டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.

  • ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
  • கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.
  • அதில் 3/4 கப்  பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும்.
    (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)
  • வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும். இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.
  • இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.
இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலின் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும். (அடையனும்..ஹூம்….நமக்கு இவ்வளவு அறிவு இருப்பதை தெரிந்து இதிலிருந்தும் தப்பிக்க ஒருவேளை பாழாய்ப் போன கொசுக்கள் புதிய யுக்தி எதையாவது கடைப் பிடிக்க ஆரம்பித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவ்வளவு தான் இப்போதே சொல்லிப்புட்டேன்.)
நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
  • இதன் பலனை 4×5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
  • 3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.
  • எப்படியோ இந்த வழியிலாவது கொசுக்கள் ஒழிந்தால் சரி தான்.
டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்
‘ஏடிஸ்’ தென் மாவட்ட மக்களை அதிரவைத்த அதிபயங்கர கொசு! தற்போது திருப்பூர், கோவையிலும் தனது கைவரிசையை நீட்டியிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோரை பாரபட்சமில்லாமல் கடித்து டெங்கு காய்ச்சலால் படுக்க வைத்திருக்கும் பயங்கர ‘வியாதி’க்கான காரணகர்த்தாதான் இந்த ஏடிஸ் கொசு!
ஏடிஸ் கொசு எப்படி பிறக்கிறது? இது கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன? வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தடுப்பது எப்படி? என்பது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது. தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.
இந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர்.
ஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.
இந்த நோய் எளிதில் குணப்படுத்த கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம் உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும். இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும்.
அதனால் இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மூலமாகவும் வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில் கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவ தன் மூலமும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல் தடுக்கலாம்.
கோவை, திருப்பூரில் தென் மாவட்டங்களை போல டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கூட இங்கு குறைவுதான். இருந்தாலும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட சுகாதாரத்துறை போத்தனூர் உள்பட மாவட்டம் முழுவதும் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. மாநகர பகுதியிலும் மாநகராட்சி சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. புகை மூலம் கொசுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் சகாதாரமாக, விழிப்புணர்வோடு இருந்தால் டெங்கு கொசுவை ஒழித்து காய்ச்சல் வராமல் தற்காத்து கொள்ளலாம்.
இவ்வாறு  செந்தில்குமார் கூறினார்

டெங்கு காய்ச்சல் தீர



முதலில் இந்த டெங்கு காய்ச்சல் நமக்கு புதிதல்ல.பழைய ஆனந்த விகடனை எடுத்துப் பார்த்தால் அதில் பல வருடங்களுக்கு முன் வெளியான ( 1967 முதல் 1969 வரை ) சிரிப்புக் கி ( டெங்கு ) என்ற பெயரில் பல சிரிப்புக்களையும் , கார்ட்டூன்களையும் வெளியிட்டுள்ளது. என்னிடம் அந்தப் புத்தகங்கள் உள்ளது .தேடிக் கிடைத்தால் வெளியிடுகிறேன்.
அப்போது இது எதனால் உருவாகிறது ? ஈடிஸ் கொசு கடிப்பதனால் கிருமிகள் பரவி அதன் மூலம் காய்ச்சல் உண்டாகி என்று நீண்டு கொண்டே செல்கிறது அல்லோபதி கதை. இதைவிட இந்தக் கொசுவைக் கொல்ல அடிக்கும் புகைப்பானில் தெளிக்கும் மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் அப்பப்பா சொல்ல முடியவில்லை . இந்தக் கொசுவைக் கொல்வதனால் இந்தக் காய்ச்சலை ஒழிக்க முடியுமா ??? வீட்டில் பத்து பேர் இருந்தால் ஒருவருக்கோ இருவருக்கோ மட்டும் காய்ச்சல் வருகிறது . முதலில் இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் வருகிறது.
ஒரு விளம்பரம் கூறுகிறது . தற்போது கிருமிகள் பலமாக மாறிக் கொண்டே வருகின்றன ( நாம் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை சொல்லாமலே சொல்லி விடுகின்றனர் ). எனவே உங்களுக்குத் தேவை பலமான கிருமி நாசினி என்று !!! இன்னோர் விளம்பரத்தில் ஒரு பையன் எங்க மம்மி சொல்றாங்க ஒரு நிமிடம் நம்ம கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும் ???? என்று அதற்கு ஒரு பெண் கூறுகிறாள் உன் சோப்பென்ன ஸ்லோவா ??? இவர்கள் என்ன சொல்கிறார்கள் . கிருமிகளைக் கொல்லும் அந்த வேதிப் பொருள் நம் கையிலுள்ள நம் உயிரணுக்களை விட்டு வைக்குமா ????? கிருமிகளை உலகத்தை விட்டே அழித்துவிடலாம் என்கிறார்களா என்ன ???
இதை சாதாரண எந்த உயிரி விஞ்ஞானியும் ஒப்புக் கொள்ள மாட்டார் !!! கிருமிகளை உலகத்தை விட்டோ கேவலம் நம் வீட்டை விட்டோ ஒழிக்க முடியாது .அப்படி ஒரு வீட்டை ஆக்கினால் அந்த வீடு நாமும் வாழத் தகுதியற்றதாக ஒரு விஷமித்த வீடாகத்தான் ஆகிவிடும்.
மீதமுள்ள ஆட்களுக்கு இந்த பயத்திலேயே இது தொற்றிவிடுகிறது . பயத்தினால் காய்ச்சல் பரவுமா ??? நிச்சயமாக ??? பயமே வியாதியை அதிகரிக்க உற்ற துணை !!! ஏனெனில் பீனியல் சுரப்பியின் செயல்பாடு பயம் ஏற்படும் போது குன்றி அதனால் நம் நோய் எதிர்ப்பு சக்தி குன்றுகின்றது.
இப்போது என்னதான் சொல்ல வருகிறீர்கள். உங்கள் வீட்டை முதலில் நீங்கள் நல்ல உயிரினங்கள் வாழும் வீடாக மாற்ற முதலில் நாட்டு மருந்துக் கடையில் சிங்கப்பூர் சாம்பிராணி , நில வேம்புக் குடிநீர் என்று குச்சி குச்சிகளாக அட்டைப் பெட்டியில் அடைத்தது IMPCOPS  தயாரிப்பு கிடைக்கும்.இவற்றை வாங்கி கலந்து கொண்டு முடிந்தால் அத்துடன் குப்பை மேனிப் பொடியும் ,வேப்பிலைப் பொடியும் கலந்து புகை போடுங்கள்.
வீட்டை நல்ல காற்றோட்டமாக திறந்து வையுங்கள் .ஒரு கொசுவும் உங்கள் வீட்டிற்குள் நுழையாது. நீங்கள் ஆவாரை இலைப் பொடி , வேப்பிலைப் பொடி , குப்பை மேனிப் பொடி கலந்து குளிக்கும் போது மேலுக்குத் தேய்த்துக் குளியுங்கள் . ஒரு கொசுவும் உங்களை அண்டாது . கசப்பு உங்களுக்குப் பிடிக்காதது போல எந்தக் கிருமிக்கும் பிடிக்காது. ஒரு கிருமியும் அண்டாது. சோப்பு போட்டு குளிக்கக் கூடாது . பிறகேது காய்ச்சல் .
இது சொல்லி முடித்தவுடன் சோப்பு எப்போது போடலாம் என்று கேட்பது புரிகிறது . சோப்பு போட்டால் உங்கள் உடலில் தோலில் உள்ள அனைத்து    எண்ணைச் சுரப்பிகளும் வறண்டுவிடும் .தோல் வறண்டு விட்டால் உடலின் மீது ஓடும் உயிரோட்டமான `CHI ‘ ஓடாது . இந்த உயிரோட்டத்தில் ஏற்படும் மின் சுற்றுப் பூர்த்தி ஆகாததை சரி செய்வதே அக்கு பஞ்சர் . ஊசி மூலம் அந்தச் மின் சுற்றை ஏற்பட செய்வார்கள் . ஒரு இடத்தில் உயிரோட்டம் அற்றால் பூர்த்தி செய்யலாம் உடலெல்லாம் பல இடங்களில் மின் சுற்று அற்றால் , அதாவது உடலின் ஒட்டு மொத்த உயிரோட்டத்தையே சோப்புக்கள் குன்ற வைத்துவிடும் , எனில் இது தேவையா ??? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் !!!!
இருக்கும் இடத்தைச் சரி செய்தாயிற்று. அதற்குப் பிறகு உடலை விஷமிக்காமல் அதாவது அலோபதி மருந்துகளை உட்கொள்ளாமல் இருங்கள் . வீட்டில் அறைக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு புகை வராது என்று கூறப்பட்ட விஷக் ( அல்லெத்ரின் என்ற விஷத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது ) கொசு வர்த்திகளை ஏற்றி வைத்துக் கொண்டு தூங்காதீர்கள் . காற்றோட்டமான இடத்தில் தூங்குங்கள்.
ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.சாறுள்ள பழங்களை காலையிலும் மாலையிலும் உண்ணுங்கள் . பழச் சாறாக்கி பிழிந்து எடுத்து சாப்பிடாதீர்கள் . இளநீர் அடிக்கடி சாப்பிடுங்கள். மதியம் ஒரு நேரம் மட்டுமே அரிசி உணவை எடுத்துக் கொள்ளுங்கள் .அதுவும் கஞ்சி வடிகட்டின சோறாக இருப்பது நலம் .குக்கர் அரிசிச் சோற்றை தவிருங்கள் .
இதெல்லாம் போக காய்ச்சல் வந்தால் கீழுள்ள மருந்தை உபயோகியுங்கள் .
( 1 ) விஷ்ணு கிராந்திப் பொடி
( 2 ) பற்பாடகப் பொடி
( 3 ) குப்பை மேனிப் பொடி
( 4 ) நில வேம்புப் பொடி
( 5 ) ஆகாச கருடன் கிழங்குப் பொடி
( 6 ) வாய் விளங்கம்
( 7 ) சங்கங் குப்பி
( 8 )  நத்தைச் சூரி விதை
( 9 ) மாவிலங்கப்பட்டை
( 10 ) கடுகு ரோகணி
( 11 ) அக்கரகாரம்
( 12 ) கோஷ்டம்
( 14 ) செப்பு நெருஞ்சில்
( 15 ) விராலியிலை
( 16 ) நொச்சிப் பட்டை
( 17 ) வேப்பம் பட்டை
( 18 ) மஞ்சள்
இவை கலந்து அரை குறையாக இடித்து வைத்துக் கொண்டு மூன்று   நாட்கள் மூன்று வேளை அருந்த காய்ச்சல் பறந்தோடும் . நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . மேற்கண்ட மருந்துகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் . இவை கலந்த மருந்துகள் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடமும் கிடைக்கும் . வேண்டியவர்கள் பயன் பெறலாம்.
மேற்கண்ட மருந்துகள் சுரஹரகாரிகள் , வியதாபேதகாரிகளும் கூட எனவே அவற்றில் ஒன்றிரண்டு கிடைக்காவிட்டாலும் கூட கீழே இருக்கும் இரண்டும் அவசியம் சேர்த்து சாப்பிட்டாலே நலம் பயக்கும்.
விடாத காய்ச்சலுக்கு விஷ்ணு கிராந்தி
 படாத பாடு படுத்தும் காய்ச்சலுக்கு பற்பாடகம்
விராலியிலை
விராலியைப் பற்றி எழுதும் போது அதைப்பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லாமல் போக முடியாது.ஏனென்றால் அவ்வளவு முக்கியமான மூலிகை. இந்த மூலிகை அதிகமாக வளர்ந்துள்ளதால் முருகன் குடி கொண்டு இருக்கும் மலைக்கு விராலி மலை என்று பெயர் .இந்த மலையில் அருணகிரி நாதருக்கு வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி அளித்தார்.
மேலும் இந்த விராலிக் கட்டைகளை உள்ளே வைத்துத்தான் அதன் மீது களிமண்ணை அப்பி அக்காலத்தில் குடிசை வீடுகளுக்கு மண்ணால் சுவர் வைத்துக் கட்டுவார்கள். அந்தச் சுவர்கள் எந்த மழையிலும் நனைந்தாலும் நமது உடலில் எலும்புச் சட்டம் இருப்பது போல மண்ணுக்குள் இருந்து மண் கரைந்து போகாமல் காக்கும் . அவ்வளவு வல்லமையுள்ளது இந்த மூலிகை .இதே போல இது எலும்பையும் , எலும்பு மஞ்சையையும் , அதன் மூலம் இரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்தியையும் காக்க வல்லது.எலும்பு முறிவிற்கும் , எலும்பு தேய்மானத்திற்கும் இதன் இலையை அரைத்து மேற்புறமாக பற்றிடலாம்.
ஏனென்றால் டெங்கு காய்ச்சலில் மரணம் நிகழ்வது இரத்தச் சிவப்பணுக்கள் டெங்கு கிருமிகளால் குறைபடுவதால்தான் .மேற்கண்ட இரு மருந்துகள் மட்டுமே காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதும் என்றால் இது இரத்தச் சிவப்பணுக்களை காப்பாற்ற இது அவசியம்.எனவே இதை அவசியம் சேர்த்தால் இரத்த சிவப்பணுக்களைக் காப்பாற்றி உயிரையும் காப்பாற்றும்.
இத்துடன் IMPCOPS  தயாரிப்பான ( 1 ) பிரம்மானந்த பைரவம் அல்லது (2) ஆனந்த பைரவமும் மூன்று வேளையும் ஒரு மாத்திரை வீதம் வெந்நீரில் சாப்பிட்டு வரலாம். இது அனைத்துக் காய்ச்சலுக்கும் குணம் செய்யும் . மலையப்பசாமி வைத்திய சாலை பழனி அவர்கள் தயாரிக்கும் சுர மாத்திரையையும் வாங்கியும் உபயோகிக்கலாம் .

டெங்கு காய்ச்சல் குணமாக



டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை
ஒரு தடிக் குச்சியினால் ஓங்கி ஓங்கி அடிக்கப்படுவது போன்ற அளவிற்குத் தீவிரமான வலி எலும்புகளிலும், கீல்களிலும் திடீரென்று ஏற்பட்டு வரும் காய்ச்சல் டெங்கு. சிலருக்கு காய்ச்சல் வாயு தோஷத்தினால் குளிர் நடுக்கத்துடன் தொடங்கும். அதனுடன் பித்த தோஷமும் சேர்ந்தால் சிறிது பிதற்றல் புலம்பலுடன் இருக்கும். ரத்தத்தின் கொதிப்பு அதிகமானால் காய்ச்சல் தொடங்கிய இரண்டு அல்லது மூன்று நாட்களில் உடல் பூராவும் சிறு கடுகு போன்ற சிவந்த தடிப்புகள் அம்மை போல் கண்டு அதற்கு அடுத்த இரண்டு நாள்களில் மறைந்து போகும். ரத்தம் மற்றும் பித்தத்தில் விசேஷக் கெடுதல் ஏற்படாத மனிதர்களுக்கு இந்த அம்மை போன்ற சிவப்புத் தடிப்பு உண்டாவதில்லை. சிலருக்கு வயிற்றில் பித்தம் கெடுதலைச் செய்து உமட்டல், வாந்தியை உண்டாக்குகிறது.

கபதோஷத்தின் சீற்றத்தால் தொண்டைப்புண், கண்களில் வலி, இருமல், மூக்குச் சளி, தலைகனம் இவையும் பூட்டுகளில் உடல் பூராவும் விட்டுவிட்டு வலியும் வீக்கமும் சிலருக்குக் காணும். இரண்டு மூன்று நான்கு நாள்கள் வரையில் காய்ச்சல் அடித்துவிட்டு காய்ச்சல் மட்டும் திடீரென்று தணியும். தணியும் போது சிலருக்கு வியர்வை அதிகம் ஏற்படும். பேதியும் 3-4 தரம் சிலருக்கு ஏற்படும். காய்ச்சல் தணிந்தாலும் தடியடி போன்ற உடல் கை, கால் பகுதிகளில் வலி மட்டும் குறைவதில்லை. திரும்பவும் காய்ச்சல் தீவிரமாகவும் அதிக வலியுடனும் ஏற்படும். ஆனால் மொத்தம் 8 நாள்களுக்கு மேல் பொதுவாக இந்தக் காய்ச்சல் நீடிப்பதில்லை. காய்ச்சல் விட்டாலும் கை, கால் விரல் ஸந்தி முதல் பெரிய எலும்புகள் அதன் பூட்டுகளில் எல்லாம் வலி மட்டும் சிலருக்கு நாள் கணக்காய், வாரம் அல்லது மாசக்கணக்காய் கூட நீடிக்கும்.

தடி போட்டு அடிப்பது போல் எலும்புகளில் வலி இருப்பதால் டெங்கு காய்ச்சலுக்கு ‘தண்டக காய்ச்சல்‘ என்று ஆயுர்வேதத்தில் பெயரிடப்பட்டுள்ளது.

பழைய கால ஆயுர்வேதப் புத்தகங்களில் டெங்கு காய்ச்சல் பற்றி விவரிக்கப்படவில்லை. அதனால் ஆயுர்வேத மருத்துவர்களால் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கூற முடியாது என்று ஒருபோதும் நினைக்க வேண்டியதில்லை. புதிது புதிதாக வரும் எந்தவிதமான நோய்க்கும் ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை சிறந்த முறையில் தாராளமாய் செய்ய முடியும். சூரியனின் பிரகாசம் போல் என்றும் மாற முடியாத வாயு பித்தம் கபம் ஆகிய திரிதோஷ தத்துவங்களை வைத்துக்கொண்டு புதிய நோய்களைச் சிரமமின்றிக் குணம் செய்யலாம்.

வாதமும் கபமும் சீற்றமடைந்து ஏற்படுத்தும் டெங்கு காய்ச்சலில் கண்டங்கத்திரி வேர், சீந்தில் கொடி, சுக்கு, வெண்கோஷ்டம் இவற்றைக் கொண்டு கஷாயம் முறைப்படி செய்து தினம் 3-4 வேளை சாப்பிடலாம். மருந்துகள் வகைக்கு 5 கிராம், 160 மிலி. தண்ணீர் விட்டு, 50 மிலி. குறுக்கிச் சாப்பிட விரைவில் காய்ச்சல், உடல் வலி நீங்கும்.
தேவதாரு, பர்ப்பாடகம், சிறுதேக்கு, கோரைக் கிழங்கு, வசம்பு, கொத்தமல்லி விதை, கடுக்காய், சுக்கு, ஓமம், திப்பிலி இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயமும் சாப்பிடலாம்.

ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்கப்படும் தசமூல கஷாயம் சாப்பிட மிகவும் நல்லது.

பித்த தோஷத்தின் சேர்க்கையினால் அம்மைபோல் சிவப்பு தடிப்பு முதலியன இருந்தால் நிலவேம்பு, நன்னாரி, சீந்தில், திராட்சை, நெல்லி வற்றல், அதிகமதுரம், விலாமிச்சம் வேர் கஷாயம் நல்ல குணம் தரும்.

கபத்தின் தொந்தரவால் இருமல், நெஞ்சுக்கட்டு, ஜலதோஷம் இருந்தால் மகாதான்வந்திரம் அல்லது வாயு குளிகை ஒன்றை தேன் குழைத்து கஷாயத்துடன் சாப்பிட விரைவில் காய்ச்சல், வலி குறையும். காய்ச்சல் விட்ட பிறகு உடனேயே புஷ்டி பலம், ரத்த அணுக்கள் வளர அசுவகந்தாதி சூரணம், தசமூலாரிஷ்டம், அசுவகந்தாரிஷ்டம் போன்ற மருந்துகளைச் சாப்பிடுவது நன்மையாகும்.

Thursday, July 19, 2012

ஆல்ஃபா ஆழ்மன சக்தி தியான பயிற்சி


             


    * பயிற்சியின் நன்மைகள் *

·  குடும்பத்தில் மகிழ்ச்சி,அமைதி கிடைக்கும்
·  உடல் நோய்களை தீர்க்கலாம்
·  மாணவர்களின் ஞாபக சக்தி வளரும்
·  நீங்கள் நினைப்பதை அடைய முடியும்
பயிற்சி நாள் – 05-08-2012 ஞாயிறு காலை 9.30-1.00 வரை
கட்டணம் –  ரூ.999- (பயிற்சி குறிப்பேடு,தேனீர்,நோட்,
                         பேனா     உட்பட)


          சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
           யோகாசனம்-கண் பயிற்சிகள்

·  சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம்,மாரடைப்பு,குறட்டை,தைராய்டு,மூட்டு வலிகள்,ஆண்மைக்குறைவு,குடலிறக்கம்,போன்றவற்றை போக்கும் எளிய யோகாசனங்கள்
·  ஆப்ரேசன் இல்லாமல் கண் குறைபாடுகளை போக்கவும்,கிட்டப்பார்வை,தூரப்பார்வை சரிசெய்து கண்ணாடி இன்றி சிறந்த கண் பார்வை பெற இயற்கை முறை கண் பயிற்சிகள்

பயிற்சி நாள் – 05-08-2012 ஞாயிறு மாலை 2.00-4.30 வரை
கட்டணம் – ரூ.999- (பயிற்சி குறிப்பேடு,தேனீர்,நோட்,
                           பேனா    உட்பட)


இரண்டு பயிற்சியும் நடக்கும் இடம்;
                மும்பை தமிழ் சங்கம்,
                   சைன்(கிழக்கு),மும்பை -22

பயிற்சியாளர் ; DR A.S.அசோக்குமார் PhD (yoga),சென்னை.
நிகழ்ச்சி ஏற்பாடு- சோலார் மாற்றுமருத்துவ ஆய்வு        மையம்,நாகர்கோவில்,கன்னியாகுமரி மாவட்டம்.

பெயர் பதிவு,தொடர்புக்கு

8291936858,094896-20090

Tuesday, April 10, 2012

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் இன்ப்ளூயென்ஸா)


பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது என்ன?
பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது  'ஏ' இன்ப்ளூயென்ஸா வகைக் வைரஸ் கிருமியினால்  பன்றிகளுக்கு வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு ஸ்வைன் ப்ளூ பொதுவாக வராது என்றாலும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை. ஆனால் கடந்த காலங்களில் இத்தகைய ஸ்வைன் ப்ளூ வைரஸின்  பரவல் குறிப்பிட்ட அளவு வரையே. அதிக பட்சம் மூன்று மனிதர்களைத் தாக்கியிருந்தது.
2009-ம் ஆண்டின் மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத ஆரம்ப கால கட்டத்தில், தெற்கு கலிபோர்னியா மற்றும் டெக்ஸாஸ்க்கு அருகில் உள்ள சேன் ஆன்டோனியோ ஆகிய இடங்களில் ‘A’ ஸ்வைன் இன்ப்ளூயன்ஸா  (H1N1) வைரஸ்கள் மனிதர்களுக்கு தொற்றி தாக்கத்தை அளிப்பது முதன்முதலில் அறியப்பட்டது.அமெரிக்காவின் இதர பகுதிகளிலும் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுவது கண்டறியப்பட்டது. பின்னர் உலக அளவிலும் இது கண்டறியப்பட்டது.
மனிதனிடம் பன்றி காய்ச்சல் உள்ளதைக் காட்டும் அறிகுறிகள் என்ன?
மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய ப்ளூ காய்ச்சலுக்குரிய அறிகுறிகளுடன்தான் ஸ்வைன் ப்ளூ நோயும் வரும். வைரஸ் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல், தொண்டைவலி, சோர்வு, உடல் வலி, குளிர் போன்றவையும் வரும். சிலருக்கு வாந்தி மற்றும்  வயிற்று போக்கும் ஏற்படக்கூடும்.
கடந்த காலங்களில் இந்நோய்வாய்ப்பட்டவர்களிடம் கடுமையான அளவில் உடல்நிலை பாதிப்பும் (நிமோனியா மற்றும் சுவாச உறுப்புகள் செயல் இழப்பு) உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கின்றன. ப்ளூ காய்ச்சலைப் போலவே,  ஏற்கனவே இருக்கும் நோய்களையும் வலிகளையும் இந்நோயும் தீவிரப்படுத்தும்..
இத்தகைய ப்ளூ வைரஸ்கள் தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியவை. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களைத் தொட்டுவிட்டு பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளைத் தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.
நோய் தாக்கியவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது எப்படி பரவும்?
இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இந்நோய்க்கான அறிகுறிகள் தெரிவதற்கு முந்தைய ஒரு நாள் முதல் நோய்வாய்ப்பட்ட 7ம் நாளுக்குள் மற்றொருவருக்கு இந்நோய் தொற்றக்கூடும். அதாவது ஒருவருக்கு இந்த ஸ்வைன் நோய் இருப்பது தெரிவதற்கு முன்பாகவும், நோயில் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொழுதும் இந்நோய் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு பரவிவிடும்.
நோய் எனக்கு தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
முதல் மற்றும் முக்கிய செயல்: உங்களின் கைகளைக் கழுவுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சிக்கவும். நன்றாக தூங்கவும். சுறுசுறுப்பாக இருக்கவும். மன அழுத்தம் மற்றும் அதிக வேலைப்பளுவை முறையாகக் கையாளுங்கள். அதிக அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து உள்ள உணவை உண்ணுங்கள். ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களையும் பகுதிகளையும் தொடாதீர்கள். இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்.
ஸ்வைன் நோய் எனக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ஸ்வைன் நோய் வராமல் தடுக்க தற்போது எந்த தடுப்பூசியும் இல்லை. இன்ப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்களை உருவாக்கக்கூடிய கிருமிகள் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாளும் சில செயல்முறைகளைக் கடைபிடித்தல் அவசியம்.
ஸ்வைன் நோய் வராமல் தடுத்து  ஆரோக்கிய வாழ்வு வாழ.....
  • இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் அல்லது கைக்குட்டை வைத்து மூடிக்கொள்ளவும்.
  • தும்மல் மற்றும் இருமலுக்கு பின் சோப் & தண்ணீர் கொண்டு கைகளை நன்கு கழுவவும்.ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளை சுத்தப்படுத்துதலும் நல்லது.
  • கண்கள், வாய், மூக்கு பகுதிகளைத் தொடுவதைத் தவிர்க்கவும். கிருமிகள் இதன் மூலம் எளிதில் பரவும்.
  • இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்
  • உங்களுக்கு இன்ப்ளூயன்ஸா நோய் இருந்தால், தயவு செய்து வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும்.
இருமல் மற்றும் தும்மல் மூலம் இந்த வைரஸ் பரவாமல் இருக்க சிறந்த வழி என்ன?
உங்களுக்கு இந்நோய்  இருந்தால், முடிந்த அளவிற்கு பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும் . வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் வைத்து மூடிக்கொள்ளவும்.
இது உங்களைச் சுற்றி உள்ளவருக்கு இந்நோய் தாக்காமல் இருக்க உதவும்.பயன்படுத்திய திசுத்தாளை குப்பைக்கூடையில் போடவும். திசுத்தாள் இல்லை என்றால், இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் கைக்குட்டை அல்லது கைகளை வைத்து மூடிக்கொள்ளவும். பிறகு, கைகளை நன்கு கழுவவும். ஒவ்வொருமுறையும் இருமல் மற்றும் தும்மலுக்கு பிறகு கைகளைக் கழுவவும்.
நோய் வராமல் தடுக்க கைகளைக் கழுவி சுத்தப்படுத்த சிறந்த முறை என்ன?
அடிக்கடி கை கழுவுதல் கிருமிகளிடம் இருந்து உங்களைக் காக்கும். சோப் & தண்ணீர்  அல்லது ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளைக் கழுவவும். சோப் & சுடு தண்ணீர் கொண்டு கழுவும்பொழுது 15 முதல் 20 நொடிகளுக்கு கழுவவும். சோப் & தண்ணீர்  இல்லாத பொழுது, ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஸ்போசபல் கையுறைகள் (ஒரு முறை மட்டும் பயன்படுத்திக்கொண்டு எறிந்து விட வேண்டும்) அல்லது ஜெல் வகை அழுக்கு நீக்கிகளைப் பயன்படுத்தலாம். இவைகள் மருந்து கடைகள் மற்றும் சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும். ஜெல்லைப் பயன்படுத்தினால் ஜெல் முற்றிலும்  காய்ந்து கைகள் ஈரமின்றி இருக்கும்படி கைகளை நன்றாக உரசித்தேய்க்கவும்.ஜெல்லைப் பயன்படுத்திடும் பொழுது தண்ணீர் தேவையே இல்லை. ஜெல்லில் உள்ள மருந்து பொருட்களே கைகளில் உள்ள கிருமிகளைக் கொன்றுவிடும்.
உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமலும் பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் இருப்பதாகவும் உணர்ந்தால், உடனடி மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவும்.
குழந்தைகளாக இருப்பின்....
  • வேகமாக சுவாசித்தல் (இளைப்பு )அல்லது சுவாசிக்க சிரமப்படுதல்.
  • தோல்களில் நீல நிறம் கலந்த தோற்றம்.
  • அதிக நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்
  • பிறரிடம் கலந்து பேசாமல் பழகாமல் இருத்தல் அல்லது படுத்தபடியே சோர்வாக இருத்தல்.
  • குழந்தைகளைத் தூக்கும் பொழுதும் கட்டி அணைக்கும் பொழுதும் அசெளகரியத்தையும் எரிச்சலையும் காட்டுவார்கள்.
  • ப்ளூ வருவதற்கான அறிகுறிகள் அதிகரிக்கும் ஆனால் காய்ச்சல் மற்றும் மோசமான சளி, இருமலுடன் நின்றுவிடும்.
  • தோலில் சிவப்பு நிற புள்ளிகளுடன் கூடிய காய்ச்சல்
பெரியவர்களுக்கு.........
  • சுவாசிக்க சிரமப்படுதல் அல்லது மூச்சுத்திணறல்
  • மார்பு அல்லது வயிறு பகுதிகளில் வலி அல்லது அழுத்தமான உணர்வு
  • தீடீர் மயக்கம்.
  • தடுமாற்றம்.
  • கடுமையான அல்லது தொடர்ந்த வாந்தி

Sunday, January 8, 2012

மூல நோய் வராமல் தடுப்பதற்கான இலவச மருத்துவ கருத்தரங்கு


மூல நோய் வராமல் தடுப்பதற்கான இலவச மருத்துவ கருத்தரங்கு நாகர்கோவிலில் 08.01.2012 அன்று தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்,சோலார் மாற்று மருத்துவ ஆய்வு மையம்,டிரீம்ஸ் இந்தியா ஆகியவை இணைந்து நடத்தியது.
                     
                       இதில் கல்வி தந்தை டாக்டர் சதாசிவம் தலைமை தாங்கினார்.டாக்டர் லிங்கேஸ்வரன் வரவேற்றார்.டாக்டர் அருள் குமரேசன் முன்னிலை வகித்தார். டாக்டர் சிதம்பர நடராஜன்,டாக்டர் ஜெனிபர்,டாக்டர் வர்கீஸ் ஆகியோர் பேசினர்.முடிவில் ஞானசிகாமணி நன்றி கூறினார்.





















Tuesday, November 8, 2011

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள்



நவம்பர் 14 - உலக சர்க்கரை நோய் தினம்


சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது
உடல் நன்றாக இயங்க தேவையான
சக்திக்கு உடலில் உள்ள செல்களுக்கு
சர்க்கரை(குளுக்கோஸ்) தேவை. நாம்
உண்ணும் உணவுதான் செரித்து
குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ்
ரத்தத்தில் கலந்து நம் உடலில் உள்ள
அனைத்து செல்களுக்கும் செல்கிறது.
கணையத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன்
”இன்சுலின்”  தான் செல்களுக்குள் குளுக்கோஸ்
செல்ல அத்தியாவசியமாகும்.  தேவையான
இன்சுலின் கணைத்தில் இருந்து சுரக்காத
 போது, குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல
முடியாமல் ரத்த ஓட்டத்தில் அதிகளவு சேர்ந்து
விடும் போது ஏற்படும் விளைவு தான் சர்க்கரை நோய் ஆகும்.


சர்க்கரை உடலில் கூடினால் மட்டுமல்ல, குறைந்தாலும் 
பாதிப்பு ஏற்படும். மரபு ரீதியாகவும் சர்க்கரை நோய் 
ஏற்படுகிறது. உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸ்
செரித்து ரத்தத்தில் சேருமாதலால், சாப்பிட்ட பின்னர் 
இரண்டு மணி நேரம் கழித்தே சர்ககரை நோய் பரிசோதனை 
மேற்கொள்ள வேண்டும்.  ரத்தத்தில் சர்க்கரை அளவு 
சாதாரண நபருக்கு 110 mg/dl அளவிலிருந்து 
140 mg/dl வரை இருக்கலாம். சர்க்கரை 
நோயாளிகளுக்கு இது 126 mg/dl விட அதிக 
அளவிலிருந்து 200 mg/dl விட அதிகளவில் இருக்கும். 
சர்க்கரை அளவு ரத்தத்தில் 90 mg/dl விட குறைந்தால் 
அது தாழ்நிலை சர்க்கரை நோயாகும்.


சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள்
    கடுமையான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல்,
அதிக பசி, ஆறாத புண், தொடர்ந்த களைப்பு, அதிகமான ப
சி, மங்கலான பார்வை, கால் மறத்து போதல், தலை சுற்றி
மயக்கம் வருதல்.

சர்க்கரை நோயால் என்ன விளைவுகள் ஏற்படும்
சர்க்கரை நோய் வந்தால் செல்கள், ரத்தம் என இரண்டும்
பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் தனியாக வருவதில்லை.
சரியாக கவனிக்க படவில்லை என்றால் உடல் உறுப்புகள்
மற்றும் அதன் செயல்பாடுகள் என அனைத்தையும் பாதிக்கும்.
இதனால் ரத்த அழுத்தம், பார்வை மங்குதல் அல்லது
இழப்பு, மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, சிறிய காயம் கூட புண்
ஆவது, பாதங்கள் மறத்து போதல் அல்லது புண் ஏற்படுவது,
களைப்பு போன்றவை ஏற்படலாம்.

சர்க்கரை நோயை எவ்வாறு சமாளிப்பது
சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. ஆனால்
அதை கட்டுப்பாட்டில் வைக்கலாம். திடீரென்று ஏற்படும்
தாழ்நிலை சர்க்கரை நோய்க்கு இனிப்பான பதர்த்தம்(சாக்லெட்)
சாப்பிடலாம். பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம். உயர்நிலை சர்க்கரை
நோய்க்கு இன்சுலின் ஊசி போட்ட பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம்.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, சரியான நேரத்தில் நல்ல
உணவுமுறை பழக்கம், சர்க்கரையின் அளவை தவறாமல்
கண்காணித்தல், உடற்பயிற்சி, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள்,
பாதங்களை பராமரித்தல், தேவையான இன்சுலின் எடுத்து
போன்றவைகளை செய்தால் சர்க்கரை நோயை பற்றி கவலைபட
தேவையில்லை.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவு வகைகள்

கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த கோதுமை, அரிசி, கேழ்வரகு
போன்ற உணவுகளை உண்ணலாம்.

1) பாகற்காய், தக்காளி, முள்ளங்கி, புடலங்காய், இஞ்சி, காலிபிளவர்,
சுரைக்காய், சௌசௌ, வெள்ளரிக்காய், கத்திரிக்காய், பீரக்கங்காய்,
வாழைப்பூ, புதினா, வெங்காயம், பீன்ஸ், முட்டைக்கோஸ்,
அவரை, கொத்தமல்லி, வெண்டைக்காய், வாழைத்தண்டு, கருவேப்பிலை,
அனைத்துக் கீரை வகைகள் போன்ற பச்சை காய்கறிகளை தாராளமாக எடுத்து
கொள்ளலாம்.


2) பானங்களில் சோடா, நீர்மோர், பால்குறைவான சர்க்கரை போடாத காபி,
டீ, சூப், சர்க்கரை போடாத தக்காளி மற்றும எலுமிச்சை பழ ஜுஸ்.

3) பழங்களில் ஒருநாளில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும்
சாப்பிடலாம்: வாழைப்பழம் (சிறியது)-1, வாழைப்பழம்(பெரியது)
அல்லது மலைவாழை - பாதி, ஆரஞ்ச் - 2, ஆப்பிள் - 2, கொய்யா
(சிறியது)-2, தர்பூசணி அல்லது கிர்ணிப்பழம் - 200 கிராம்,
பப்பாளி - 150 கிராம், பேரிக்காய் (சிறியது) - 2,
அன்னாசிப்பழம் - கால்பாகம், சாத்துக்குடி - 1, திராட்சை - 25,
தக்காளி - 6.

4) எண்ணெய் வகைகளில் நல்லெண்ணெய்,
சூரியகாந்தி எண்ணெய், ரீபைண்ட் எண்ணெய்

5) அசைவ உணவுகளில் ஒருநாளில் இவற்றில் ஏ
தேனும் ஒன்றை மட்டும் சாப்பிடலாம்: முட்டையின் வெள்ளைக்கரு மட்டும்,
மீன் - 2 துண்டுகள், கோழிக்கறி - 100 கிராம், ஆட்டுக்கறி - 100 கிராம்.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

 வாழைக்காய், அனைத்து 
கிழங்கு வகைகள், இனிப்பு 
பதார்த்தம், சர்க்கரை, 
வெல்லம், கல்கண்டு, தேன், 
குளுக்கோஸ், கருப்பட்டி, கேக், 
, ஐஸ்க்ரீம், ஜாம், இனிப்பு 
நிறைந்த பிஸ்கெட், 
பால்கோவா,  ஜெல்லி, 
பூஸ்ட், ஹார்லிக்ஸ், 
போன்விட்டா, பாட்டில்களில் 
வைத்து விற்கப்படும் 
பழச்சாறு மற்றும் 
குளிர்பானங்கள், 
வெண்ணெய், நெய், டால்டா, 
தேங்காய் எண்ணெய், 
பாமாயில், எண்ணெய் அதிகளவில் 
சேர்க்கப்பட்ட ஊறுகாய், வறுத்த மற்றும் பொரித்த உணவு வகைகள், 
முந்திரி, பாதாம், பிஸ்தா, மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம் போன்ற 
அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.



மது, சிகரெட், புகையிலை, பொடி போடுதல்
ஆகியவற்றையும் நிறுத்த வேண்டும். உடற்பயிற்சியும், 20 நிமிட
நடைபயிற்சியும் செய்யலாம். ஆனால் காலி வயிற்றிலோ,
உணவு உண்டவுடனேவோ உடற்பயிற்சி செய்யக் கூடாது.