புதிய பதிவுகள்

Friday, November 4, 2011

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி- பத்திரிகை செய்திகள்







ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி 30-10-2011 அன்று நாகர்கோவிலில் வைத்து நடந்தது. INDIAN SCHOOL OF YOGA- CHENNAI இயக்குனர் டாக்டர் A.S.அசோக்குமார் ஆல்ஃபா பயிற்சி அளித்தார்.

பயிற்சியில் பிராணாயாமம், கபாலபதி கிரியை,யோக சக்கரங்கள்-7,ஆழ்நிலை முச்சு பயிற்சி,ஆல்ஃபா தியானம் செய்முறை பயிற்சி அளிக்க பட்டது.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பயிற்சிக்கான ஏற்பாட்டை சோலார் மாற்று மருத்துவ ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் A.P.அருள் குமரேசன் செய்திருந்தார்.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பெற தொடர்பு கொள்க -94436-07174










ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி





ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி 30-10-2011 அன்று நாகர்கோவிலில் வைத்து நடந்தது. INDIAN SCHOOL OF YOGA- CHENNAI இயக்குனர் டாக்டர் A.S.அசோக்குமார் ஆல்ஃபா பயிற்சி அளித்தார்.

பயிற்சியில் பிராணாயாமம், கபாலபதி கிரியை,யோக சக்கரங்கள்-7,ஆழ்நிலை முச்சு பயிற்சி,ஆல்ஃபா தியானம் செய்முறை பயிற்சி அளிக்க பட்டது.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பயிற்சிக்கான ஏற்பாட்டை சோலார் மாற்று மருத்துவ ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் குமரேசன்செய்திருந்தார்.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பெற தொடர்பு கொள்க -94436-07174

Tuesday, November 1, 2011

சர்க்கரையை (நீரிழிவு) கட்டுப்படுத்த




சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:
  1. பரம்பரை ஒரு காரணமாகலாம்
  2. உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை
  3. நகர்புற வாழ்வியல் சூழல்
  4. முறையற்ற உணவு பழக்கம்
  5. மது, புகை, போதை பொருட்களால்
  6. உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்
  7. இன்னும் பிற
சர்க்கரை நோயின் அறிகுறிகள்:
  1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  2. சிறுநீர் கழித்ததும் கை, கால், மூட்டுவலி
  3. அதிக வியர்வை (துர்நாற்றாத்துடன்)
  4. சிறுநீரில் ஈ,எறும்பு மொய்த்தல்
  5. அடிக்கடி தாகம், அதிக பசி
  6. உடலுறவில் அதிக நாட்டம், இந்திரியம் நீர்த்துபோதல் - அதனால் ஆண்மைக்குறைவு
  7. தூக்கமின்மை
  8. காயம்பட்டால் ஆறாதிருத்தல்
சர்க்கரை அதிகரிக்க காரணங்கள்:
  1. அதிக அளவில் இனிப்பு பொருட்களை உண்பது
  2. நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பது
  3. வேகாத உணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்த பொருட்கள் உண்பதால்
  4. அடிக்கடி உடலுறவு கொள்வது அல்லது சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வதாலும்.
சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:
  1. வாழைப்பூ
  2. வாழைப்பிஞ்சு
  3. வாழைத்தண்டு
  4. சாம்பல் பூசணி
  5. முட்டைக்கோஸ்
  6. காலிஃபிளவர்
  7. கத்தரிப்பிஞ்சு
  8. வெண்டைக்காய்
  9. முருங்கைக்காய்
  10. புடலங்காய்
  11. பாகற்காய்
  12. சுண்டைக்காய்
  13. கோவைக்காய்
  14. பீர்க்கம்பிஞ்சு
  15. அவரைப்பஞ்சு
சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:
  1. முருங்கை கீரை
  2. அகத்திக் கீரை
  3. பொன்னாங்கண்ணிக் கீரை
  4. சிறுகீரை
  5. அரைக்கீரை
  6. வல்லாரை கீரை
  7. தூதுவளை கீரை
  8. முசுமுசுக்கைகீரை
  9. துத்தி கீரை
  10. மணத்தக்காளி கீரை
  11. வெந்தயக் கீரை
  12. கொத்தமல்லி கீரை
  13. கறிவேப்பிலை
  14. சிறு குறிஞ்சான் கீரை
  15. புதினா கீரை
சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:
  1. விளாம்பழம் -50கிராம்
  2. அத்திப்பழம்
  3. பேரீத்தம்பழம்-3
  4. நெல்லிக்காய்
  5. நாவல்பழம்
  6. மலைவாழை
  7. அன்னாசி-40கிராம்
  8. மாதுளை-90கிராம்
  9. எலுமிச்சை 1/2
  10. ஆப்பிள் 75கிராம்
  11. பப்பாளி-75கிராம்
  12. கொய்யா-75கிராம்
  13. திராட்சை-100கிராம்
  14. இலந்தைபழம்-50கிராம்
  15. சீத்தாப்பழம்-50கிராம்
சர்க்கரையை கட்டுபடுத்தும் சாறுவகைகள்:
  1. எலுமிச்சை சாறு -100மி.லி
  2. இளநீர் -100மி.லி
  3. வாழைத்தண்டு சாறு -200மி.லி
  4. அருகம்புல் சாறு -100மி.லி
  5. நெல்லிக்காய் சாறு -100மி.லி
  6. கொத்தமல்லி சாறு -100மி.லி
  7. கறிவேப்பிலைச் சாறு -100மி.லி
தவிர்க்க வேண்டியவைகள்:
  1. சர்க்கரை (சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட், ஐஸ்கிரீம்)
  2. உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
  3. மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
  4. அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
  5. வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.
சிகிட்சை தொடர்புக்கு:
டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT,
சோலார் மாற்று மாருத்துவம்,
ராய் காம்ப்ளக்ஸ்,
கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப்,
நகர்கோவில் 629001.
செல்-9443607174,9489620090,9367511133.

ஐசோட்டின் ஆயுர்வேத கண் சொட்டு மருந்து



“உலக மருத்துவ சரித்திரத்தில் ஆயுர்வேத கண் மருத்துவ புரட்சி” குணப்படுத்த முடியாத கண்நோய்களை குணப்படுத்தும் “சவால்” மூக்கு கண்ணாடி, கண் ஆபரேசன் தேவையற்ற வலியில்லா நிவாரணம்.

எத்தனையோ அதி நவீன கண் மருந்துகள் மார்க்கெட்டில் உள்ளன. அதில் ஐசோட்டின் கண் மருந்தின் தனித்தன்மை என்ன?

மற்ற மருந்துகள் நோயின் தன்மையை கட்டுப்படுத்தலாம். குணப்படுத்த முடியும் என்றாலும் எத்தனை காலம் வரை என்பதை உறுதிசெய்ய இயலாது. மேலும் பக்க விளைவுகள் உண்டு. ஆனால் ஐசோட்டின் கண்ணில் ஏற்படும் 96 வகை கண்நோய்களுக்கு முழுமையான ஆயுட்கால உத்திரவாதத்துடன் குணமளிக்கிறது. பிறந்த குழந்தை முதல் வயதான பெரியவரும் உபயோகிக்கலாம். பக்க விளைவு கிடையாது.

இந்த காலத்தில் சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிகிறார்கள் ஏன்? இவர்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணாடி அணிய வேண்டுமா?

உலகம் பல புதியவற்றை கண்டுபிடித்து நன்மை யாகும்போது நம் அன்றாடம் உண்ணும் உணவில் இரசாயன உரம் என்கிற விஷம், வாகன தொழிற் சாலை புகையால் பாதிப்பு, சுத்தமற்ற, நீர், ஓசோன் படலத்தின் ஓட்டை, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளாமை, மேலும் TV, Computer, சினிமா கூடுதல் கவனம். இவைதான் கண்ணாடி அணிய காரணம், ஐசோட்டின் உபயோகித்து கண்ணாடியை கழற்றி பயிற்சி செய்தால், இனி ஆயுட்காலம் முழுதும் கண்ணாடி தேவையில்லை.

Cataract கண்புரை என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? அதற்கு கண் ஆபரேசன், லேசர் சிகிச்சை இல்லாமல் தீர்வு உண்டா?

கண்புரை (Cataract) கண்ணின் லென்ஸ் பகுதியை மறைத்து வளரும் சதை போன்றதாகும். 40 வயதுக்கு மேற்பட்டோர், புகை, குடி மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் அதிக பாதிப்படையும். ஐசோட்டின் உபயோகிக்கும் போது புரையை கரைத்து லென்ஸ் சுத்தமாகிறது. எனவே கண் ஆபரேசன், லேசர் சிகிச்சை தேவையில்லை.

நவீன யுகத்தில் கட்டாய தேவையான கம்யூட்டர், TV அதிகம் உபயோகித்தால் கண்ணில் Computer Eye Syndrome நோய் வருகிறது. குணமாகவோ, பரவாமல் தடுக்கவோ மருந்து உண்டா?

கம்ப்யூட்டர் உபயோகிக்கும் அனைவருக்கும் Computer Eye Syndrome நோய் தவிர்க்க முடியாததாகும். ஐசோட்டின் உபயோகித்து இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். தடுக்க முடியும். மேலும் வாழ்நாள் முழுவதும் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும். ஆகவே Computer உபயோகிக்கின்ற அனைவரும் ஐசோட்டின் உபயோகிப்பது மிக்க பயன் தரும்.

க்ளாக்கோமா என்றால் என்ன? அதற்கு நிரந்தர தீர்வு உண்டா?

க்ளாக்கோமா என்பது கண்ணீரழுத்த நோய் ஆகும். கண்ணீர் வரும் பாதை அடைபட்டு நீர் தேங்குவதால், கண்ணீர் குழாய்களில் சுழற்சி அடையாது. இதனால் கண்ணின் உட்பகுதி அழுகும் வாய்ப்புள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு ஐசோட்டின் மட்டுமே. Tension பரிசோதனை செய்த பிறகு அதற்கு ஏற்றாற்போல் ஐசோட்டின் உபயோகித்து முழுமையான நிவாரணம் பெறலாம்.

நிறக்குருடு (Colour Blindness) என்றால் என்ன? யாருக்கு இந்நோய் அதிகம் வரும் ? குணம் அடைய வழிகள் உண்டா?

நிறக்குருடு என்பது கண்கள் நாம் பார்க்கும் வண்ணங்களை பிரித்து காண்பிக்கும். நிறமிகள் (Colour Blindness) செயலிழக்கச் செய்வதால் ஏற்படுவது. இது டிரைவர்கள், அதிக ஒளியில் வேலை செய்பவர்கள், நைட்ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு வரும் நோயாகும். ஐசோட்டின் உபயோகித்து முழுமையாக குணமடையலாம். முன்கூட்டியே நோய் வராமல் தடுப்பதற்கும் ஐசோட்டின் பயன்படுத்தலாம்.

மாலைக்கண் நோய் (Retinitis Pigmentoss) தீர்வு உண்டா?

மாலைக் கண் நோய் வந்தவர்களுக்கு மாலை நேரங்களில் பார்வை தெரியாது. இது பெரும்பாலும் உடலில் ஊட்டச்சத்து குறைவால் ஏற்படுவதாகும். ஐசோட்டின் உபயோகிப்பதால் கண்ணின் அனைத்து பகுதிகளுக்கு ஊட்டச்சத்து பெற்று பார்வை திறனை மாலையிலும் பெற முடியும்.

மாறுகண் நோய் குணமாக வாய்ப்புள்ளதா?

மாறுகண் நோய் பார்வை நரம்புகளின் தளர்ச்சியால் ஏற்படுவது ஐசோட்டின் மற்றும் சிறிய பயிற்சியின் மூலம் நேர்ப்படுத்திவிடலாம்.

கண் ஆபரேசன், லேசர் செய்தும் பார்வையிழந்தோர், கண் நரம்பு செயலிழந்தவர் இனி பார்வையே வராது என கைவிடப்பட்டவர். இவர்களுக்கு ஐசோட்டின் மூலம் பார்வை திரும்ப கிடைக்குமா?

இயற்கைக்கு மாறாக செய்து கொள்ளும் அறுவை சிகிச்சையால் இழந்த, இறந்த பார்வை நரம்புகள், உள்ளுறுப்புகள், விழி லென்ஸ், போன்றவற்றிற்கு இயற்கையான ஐசோட்டின் மூலிகையின் ஆற்றலால் உயிர்பித்து மீண்டும் பார்வையை திரும்பப் பெறலாம்.

மூக்கு கண்ணாடி, காண்டெக்ட் லென்ஸ் - எத்தனை பவர் ஆக இருந்தாலும், எத்தனை வயது, வருடமாக அணிந்திருந்தாலும் கழற்றி விடலாமா?

ஐசோட்டின் மருந்து உபயோகித்து கொஞ்சம் கொஞ்சமாக மூக்கு கண்ணாடி, காண்டெக்ட் லென்ஸ் அணிவதை தவிர்த்து பயிற்சி செய்வதால், இனி ஆயுள் முழுவதும் தேவையற்றதாகி விடும்.

நீரிழிவு நோயாளிக்கு கண்கள் பாதிப்படையுமா?

நீரிழிவு நோயால் முதலில் பாதிக்கப்படுவது கண்தான். ஏனென்றால் மனித உடலில் மிக மெல்லிய நரம்புகள் கண் நரம்புகள்தான். எனவே தான் உடனடியாக பாதிக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு கட்டாயமாக கண்புரை, க்ளாக் கோமா, நீரிழிவு கண்நோய் (Diabetic Retinopathy) வர வாய்ப்புள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் Advance ஆக ஐசோட்டின் உபயோகித்தால் கண் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். நோயிலிருந்தால் கூட முற்றிலும் குணமாகும்.

40 வயதை அடைந்தவர்கள் கண்ணாடி அணிகிறார்களே ஏன்? தேவைதானா?

நாற்பது வயது என்பது இளமையின் முடிவு - முதுமையின் ஆரம்பம் இயற்கையிலேயே மென்மை யான கண் நரம்புகள் எளிதில் உடம்பில் ஏற்படும் தளர்ச்சியினால் பாதிக்கப்படுகின்றது. ஐசோட்டின் உபயோகித்து 15 நாட்களிலேயே கண்ணாடியின்றி படிக்கமுடியும் இனி கண்ணாடி தேவையில்லை.

சிறு வயதிலேயே குச்சி, இடித்து, அம்மை, விபத்தால், சதை வளர்ச்சியால் பார்வையற்றவர்க்கு மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்புள்ளதா?

மேற்கூறியவர்கட்கு வெள்ளை சதை போல் கண்களை மூடியிருக்கும் இப்பகுதி ஐசோட்டின் உபயோகிப்பதால் கொஞ்சம், கொஞ்சமாக கரைந்து மீண்டும் ஒளி பெறும்.

ஐசோட்டின் அரசால் விருது காப்புரிமை பெற்றுள்ளதா? பக்க விளைவு உண்டா? சாதாரணமானவர் கூட உபயோகிக்கலாமா?

ஐசோட்டின் உலகிலே முதன் முறையாக W.T.O உலக வர்த்தக மையத்தால் அங்கீகரிக்கப் பட்ட காப்புரிமை பெற்றது. இந்திய அரசாலும் காப்புரிமை பெற்றது. தற்போது சென்னையில் CSO 2005 Award கிடைத்துள்ளது. மூலிகைகளால் ஆனதால் பக்க விளைவு கிடையாது. பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை உபயோகிக்கலாம். சாதாரண மானவர் உபயோகித்தால் வரும் முன் காப்போம் கண்களை என்பதாகும்.

ஐசோட்டின் உபயோகிக்கும்போது பார்வையின் முன்னேற்றத்தை எப்படி அறிவது?

ஐசோட்டின் உபயோகித்துக் கொண்டு இருக்கும் போது மூக்கு கண்ணாடி காண்டாக்ட் லென்ஸ் கழற்றி விட்டு பயிற்சி செய்வது அதாவது நேரிடையாக பேப்பர் டி.வி. பார்ப்பது இவற்றால் படிப்படியாக முன்னேற்றம் அடைவதை பார்க்கலாம். மேலும் ஐசோட்டின் பயன்படுத்தும் போது ஏற்படும் கண் சிவப்பு, உறுத்தல், ஊறல் கண்ணை சுற்றி சிறிய வலி, பூளை சாடுதல் இவை பார்வை முன்னேற்றத்திற்குரிய அறிகுறிகளாகும். Catracct உள்ளவர்களுக்கு புரை கரையும்போது பார்வை மங்கி பின் தெளிவு பெரும்.

ஐசோட்டின் உபயோகிக்க பத்தியம் ஏதும் உண்டா?

கண் ஆபரேசன் செய்வதால் 40 நாட்களுக்கு குளிக்க, எடை தூக்க, வெளிச்சத்தை பார்க்க முடியாது. ஆனால் ஐசோட்டின் உபயோகிக்கும் போது எண்ணெய் தேய்த்து தினமும் குளிக்கலாம். அனைத்து வேலைகளையும் செய்யலாம். பத்தியம் என்றால் மது, புகை மூக்குபொடி தவிர்ப்பது நலம்.

அனைத்து கண்நோய்களையும் (96 வகை) ஒரே மருந்து ஐசோட்டின் மூலம் குணப்படுத்த முடியுமா? எங்ஙனம் சாத்தியம்?

ஐசோட்டின் அரிய மூலிகைகளை கொண்டு ஆராய்ந்து தயாரிக்கப்பட்டது. இது கண்ணின் உருளை (Eyeball) முழுவதும் உட்சென்று பார்வை நரம்புகள், விழித்திரை, லென்ஸ், உள்படலம், வெளிப்படலம், கருவிழி என அனைத்து பகுதிகளுக்கும் சென்று சக்தியிழந்த, செயலிழந்த வற்றிற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து தெளிவுபட செய்கிறது எனவேதான் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் நிரந்தர தீர்வு கண்களை நோயின்றி ஆயுள் முழுவதும் பாதுகாக்கின்றது.

ஐசோட்டின் கண் மருந்து எத்தனை மாதம் / எப்படி உபயோகிக்க வேண்டும் ?

ஐசோட்டின் கண் மருந்து 4 மாதம் உபயோகிக்கும் (1 Course) ஆகும். தனித்து பிரித்து வாங்கவோ, தனித்து பிரித்து மற்றவர்களுக்கு தரவோ கூடாது. 4 மாத மருந்து ஒருவர் கண்களுக்கு மட்டுமே போய் சேர வேண்டும். இதில் 6 பாட்டில் மருந்து உள்ளது. முதலில் ஏதாவது ஒரு பாட்டில் எடுத்து வலது, இடது கண்களில் ஒரு சொட்டுவீதம் விட்டு இரண்டு நிமிடம் கண்களை மூடிவிட்டு மீண்டும் இதே போல் 1 சொட்டு விட வேண்டும். இதே போல் காலை, மாலை இரவு விட வேண்டும். மொத்தத்தில் ஐசோட்டின் கண்மருந்து உபயோகிப்பதன் மூலம் எந்த வகையில் பார்வை இழந்தாலும் பார்வையை திரும்பப் பெற முடியும். கண்களின் டானிக் - ஐசோட்டின், இத்துடன் மாத்திரையும் சேர்த்து உபயோகிப்பது நலம்.
ஐசோட்டின் கிடைக்குமிடம்:

டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT,
சோலார் மாற்று மாருத்துவம்,
ராய் காம்ப்ளக்ஸ்,
கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப்,
நகர்கோவில் 629001.
செல்-9443607174,9489620090,9367511133.

Friday, October 14, 2011

கண்கள் ஒளி பெற…


இயற்கைக்கு எதிராய் இன்றைய வாழ்கை. தூங்கும் நேரத்தில் வேலை, வேலை(பகல்) நேரத்தில் தூக்கம், அமர்ந்த இடத்திலேயே பணி, போக்குவரவிற்கு சொகுசு வாகனங்கள், பொழுது போக்கிற்கு தொலைகாட்சி, கணனி என்று உடற்பயிற்சி இன்மை,உண்ணும் உணவில் இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளின் தாக்கம், அதிக மாசுபாடுள்ள நகர வாழ்கை இவையணைத்தும் இன்றய தலைமுறையின் உடல்நிலயை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக கண்கள். பொதுவாக கம்யூட்டரில் பணி புரிவோர்களுக்கு கண் வலியுடன் தலைவலியும் நாளடைவில் வருகின்றது. குறிப்பாக மாலை நேரங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.இது நோய் அன்று மாறிவரும் தொழில் நுட்பத்தாலும் ஊன்றி மானிட்டரை பார்ப்பதாலும் ஏற்படும் கோளாறு. அதே போன்று இரு சக்கர வாகனங்களில் கண்ணாடியின்றி பயணம் செய்தால் கண்களில் தூசுகள் படிந்து கண் வலி ஏற்படும். இதனை ஒரு எளிய குவளை(கோவை பகுதியில் பிரபலம்) கொண்டு சரி செய்து கொள்ளலாம்.

சுத்தமான குளிர்ந்த நீரை அருகே உள்ள குவளையில் ஊற்றி அதில் படம் 2 காட்டிய படி நீரினுள் கண்களை நன்கு சுழற்றி ஒரு நிமிடம் வரை வைத்து பின் மறு கண்ணிற்கும் அதை போல் செய்ய ரத்தவோட்டம் நன்கு ஏற்பட்டு இந்த வலிகளிலிருந்து தப்பிக்கலாம். சிலர் குளிர்ந்த நீருடன் எலுமிச்சம் பழ சாறு 2 – 5 சொட்டு விட்டு கண்களை கழுவுவதும் உண்டு. புதிதாக செய்பவர்கள் (எலுமிச்சம் சாறு)கவனத்துடன் செய்யவேண்டும். காரணம் கண் எரிச்சல் முதலில் ஏற்பட்டு பின்பு குளிர்ச்சி ஏற்படும்.ஒவ்வாமை ஏற்படுகிறதா? என பார்த்து செய்யவும். மற்றபடி குளிர்ந்த நீரில் அணைவரும் செய்யலாம். கண்கள் ஒளி பெறும். நிறைய நண்பர்கள் பயனடைந்துள்ளனர்.

Wednesday, October 5, 2011

வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு


  • வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.
  • முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.
  • உடல்சூடு சாதரணமான நிலைக்கு வநதவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்நதிருக்கச் செய்யவும்
  • உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
  • எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.
  • மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

முதல் உதவி பயிற்சி பெற தொடர்பு கொள்ள;

சோலார் மாற்று மருத்துவம்
நாகர்கோவில்
+91 94436 07174

இரத்தக்கசிவு



இரத்த சுழற்சி அமைப்பிலிருந்து ஏற்படும் இரத்த இழப்பே இரத்தக்கசிவு ஆகும். உடலின் உள்ளே இருக்கும் இரத்தக் குழாயிலிருந்தும் இரத்தக் கசிவு ஏற்படலாம். மூக்கு, வாய் அல்லது தோலில் ஏற்பட்ட வெட்டுக்காயம் ஆகியவை மூலம் உடலின் வெளிப்புறத்திலும் இரத்தக் கசிவு ஏற்படலாம்.. காயத்தில் வேற்றுப்பொருட்கள் இருந்தால் என்ன செய்யவேண்டும்
வேற்றுப்பொருட்களாக கண்ணாடி, மரத்துண்டு அல்லது உலோகம் முதலியவை இருக்கலாம்.
வேற்றுப்பொருட்கள் காயத்தின் உள்ளே போகாமல் இருக்க விரல்களைக் கொண்டு காயத்தின் ஓரத்தில் அழுத்தம் கொடுங்கள். வேற்றுப்பொருளை வெளியே எடுக்காதீர்
காயத்தினை இறுக்கமான பாண்டேஜ் வைத்து கட்டுப்போடுங்கள்.
1.JPG
காயம் கையிலோ அல்லது காலிலோ ஏற்பட்டால் அதிகமான இரத்தக்கசிவு இருக்கும். எனவே காயம்பட்டவரை படுக்கவைத்து கை அல்லது காலை இதயத்தின் மட்டத்திலிருந்து மேலே இருக்குமாறு வையுங்கள்.

2.JPG
ஆம்புலன்ஸை அழையுங்கள் அல்லது காயம்பட்டவரை காரின் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள்.
இருமலுடன் வரக்கூடிய இரத்தம்
இருமும் பொழுது எப்போதாவது ஒருமுறையாவது கையளவு அல்லது அதற்குமேல் இரத்தமும் சேர்ந்து வந்தாலும் கூட அது நோயாளிக்கும் அவரது உற்றாருக்கும் அதிர்ச்சி தரக்கூடியது. இது நுரையீரலில் ஏற்படும் நோய்களான நுரையீரல் புற்றுநோய், தீவிர நிலையிலுள்ள காசநோய் அல்லது நுரையீரலில் துளைகளை உருவாக்கும் இதர நோய்களினால் ஏற்படுகிறது.
நோயாளியை கவனித்துக் கொள்ளும்முறை
  • தலை மற்றும் தோள்ப்பட்டையை சற்று உயர்வாக பாதிக்கப்பட்ட பக்கம் சாய்த்து நோயாளியைப் படுக்க வையுங்கள்.4.PNG
  • வாய் வழியாக எந்த உணவையோ நீரையோ கொடுக்கவேண்டாம்
மார்பில் ஏற்பட்ட காயத்தினால் நுரையீரலில் இரத்தக்கசிவு இருக்குமானால் சிறிதளவு பாலித்தீன் கொண்டுள்ள நாடா மூலம் காயத்தை இறுக்கமாகக் கட்டுங்கள். இது நெஞ்சுக் கூட்டுக்குள்ளும் காயத்திலும் காற்று புகாமல் தடுக்கும் இன்ன பிற பாதிப்புகளை ஏற்படுத்தாது.
5.PNG6.PNG7.PNG
உடனே டாக்டரை வரச்செய்யுங்கள் அல்லது மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸை அழையுங்கள்.
வயிற்றிலிருந்து ஏற்படும் இரத்தவாந்தி
வயிற்றில் உருவான அல்சர் நோயால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக இது ஏற்படுகிறது. வயிற்றில் இரத்தக்கசிவு அதிகமாக இருக்கும்போது திடீரென வயிற்றில் சுருக்கம் ஏற்பட்டால் நோயாளி இரத்தவாந்தி எடுப்பார். இவ்வகையிலான இரத்தப்போக்கு ஒரு லிட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம்.
நோயாளியை கவனித்துக் கொள்ளும்முறை
  • நோயாளியைப் படுக்கவைத்து அவரின் கால்கள் மற்றும் பாதங்கள் உடல் மட்டத்தைவிட சற்று உயர்வாக இருக்குமாறு செய்யுங்கள்.
  • அவரை மிதமான வெப்பநிலையில் வையுங்கள். போர்வையைப் போர்த்தியோ அல்லது ஓற்றடம் கொடுத்தோ அதிக சூடு ஏற்படுத்தாதீர். கதகதப்பான நிலையில் வையுங்கள். அதே நேரம் குளிரில் நடுங்கவும் வைத்துவிடாதீர்கள்.
  • வாய் வழியாக எந்த உணவையோ நீரையோ கொடுக்கவேண்டாம்.
  • தண்ணீர் கொண்டு வாயினைக் கழுவலாம். ஆனால் அந்நீரினை சிறிதளவேனும் விழுங்கிவிடக் கூடாது.
  • உடனே டாக்டரை வரச்செய்யுங்கள் அல்லது மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸை அழையுங்கள்.
நோயாளி மயக்கமடைந்துவிட்டால், உடனே அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக, ஒருபக்கமாக சாய்த்து படுக்க வையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள்.
8.PNG