புதிய பதிவுகள்

Showing posts with label ஹோமியோபதி. Show all posts
Showing posts with label ஹோமியோபதி. Show all posts

Monday, August 8, 2011

குழந்தைகள் விரல் சூப்புவது ஏன் ? சிகிச்சை மூலம் மாற்றமுடியுமா ?



ஆசிரியர்:Dr.V.ஆவுடேஸ்வரி.சாத்தூர்.


                குழந்தைகளுக்குத் தாய்ப்பால் முக்கியமான உணவாகும்.  ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது அது இருவருக் குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது.  இந்த நெருக்கமில்லாத குழந்தைகளே அதிகமாக விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன.  புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு இப்படியான பழக்கம் அதிகம் உள்ளது.


                 பொதுவாக விரல் சூப்பும் பழக்கம் இப்போது எல்லாக் குழந்தைகளிடமும் இருக் கிறது. மூன்று வயது வரை இந்தப் பழக்கத்தைத் தவறாக நினைக்க வேண்டியதில்லை.  அந்த வயதிற்குப் பின்பும் இப்பழக்கம் நீடித்தால், ஒரு ஹோமியோபதி மற்றும் பாச் மலர் மருத்துவ நிபுணரிடம் காண்பித்து சிறப்பு சிகிச்சை அளிப்பது நல்லது.


                 குழந்தை விரல் சூப்புவதற்கு மிக முக்கியமான காரணமே தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதுதான் என்கிறார்கள் சில உளவியல் நிபுணர்கள். சிந்தனை அதிகமுடைய குழந்தைகளிடம்தான் விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறது என்று சிலர்  சொல்கிறார்கள்.

                 பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு,பாதுகாப்பு ஆகியவை கிடைக்காத சூழலில்தான் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் நீடிக்கிறது.  பெற்றோர்களிடம் நிரந்தர சண்டை இருந்தால் அவர்களின் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் உறுதியாக இருக்கும் என்கிறார்கள்.

  குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு வழியில் மன அழுத்தம் ஏற்படும் போது அவை விரல் சூப்புவதைத் தான் விரும்புகிறது. சில குழந்தைகள் ஓய்வுக்காகவும், தூக்கம் நன்றாக வருவதற்காகவும், சில சமயம் பசிக்காகவும் கூட விரல்களைச் சூப்பு கின்றன.  நான்கு வயது முதல் 16 வரை விரல் சூப்பும் குழந்தைகளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது.  4 முதல் 6 வயதிற்குள் குழந்தையின் பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் முளைக்கத் துவங்கும். இக்காலத்தில் குழந்தைகள் விரல் சூப்பினால் பற்கள் சற்று வெளியே நீளத் துவங்கும்.  பற்களுக்கு இடையில் இடைவெளி ஏற்படும். இதனால் மற்ற குழந்தை களைப் போல் பற்கள் இல்லாமல் தனக்கு மட்டும் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறதே என்கிற தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது.  மேலும் இக்குழந்தைகளுக்கு பற்கள் சீராக இல்லாதிருப்பதால் பேச்சிலும் தெளிவு இல்லாமல் இருக்கும்.

                 இதுபோல் விரல் சூப்பும் குழந்தைகளுக்கு தொடர்ந்து எச்சிலால் விரல்கள் நனைந்து, சோர்ந்து சூம்பிக் காணப்படும். இதனால் விரல்களில் இரத்த ஓட்டம் குறைந்து பழுப்பு நிறமாகி விடும்.  அதே போல் குழந்தைகளின் விரல்களிலுள்ள அழுக்குகள் உள்ளே சென்று சில நோய்களை ஏற்படுத்தும்.

 விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி?

                 விரல்களைச் சூப்பும் குழந்தைகளுக்கு அந்த விரல்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்படி ஓவியம் வரைதல்,புத்தகங்களைப் படிக்க வைத்தல் போன்ற மாற்று வழிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.  இப்படி செய்வதால் குழந்தைகள் சிறிது சிறிதாக இப்பழக்கத்தை விட்டுவிடுவார்கள்.


                 சில குழந்தைகள் இரவில் தூக்கத்தின் போது கை சூப்பும்.  இந்நிலையில் பெற்றோர் விரல்களைஎடுத்து விடவேண்டும். இதுபோல் தூங்கும் போது குழந்தைகளின் கையில் ஏதாவது ஒரு விளை யாட்டுப் பொம்மையைக் கொடுத்தால், அந்தப் பொம்மையைப் பிடித்துக் கொண்டிருக் கிறோம் என்கிற கவனத்தில் விரல் சூப்பாமல் இருக்கும்.

                 விரல் சூப்பும் குழந்தைகளின் விரல்களில் வேப்பெண்ணெய் தடவுதல், பேண்டேஜ் போடு தல் போன்ற வன்முறையான செயல்களைத் தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். இது உங்களுக் கும் உங்கள் குழந்தைக்கும் இடை வெளியை துவக்கத்திலேயே அதிகரித்துவிடும்.

                 மேலும் விரல் சூப்பும் குழந்தைகளிடம் அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக, அந்த விரல்களில் சூடு போடுவது,குழந்தைகளை அடிப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதை விட ஹோமியோபதி மருத்துவரிடம் காண்பித்து ஹோமியோ மற்றும் மலர் மருத்துவ சிகிச்சை செய்வதே சிறந்தது.  ஹோமியோபதியில் கல்கேரியா கார்ப், கல்கேரியா பாஸ், சிலிகா, நேட்ரம் மூர், பல்சடில்லா, இபிகாக், சக்காரம் போன்ற மருந்துகளும், பாச் மலர் மருத்துவத்திலும் வால்நட், ஒயிட் செஸ்ட் நட், செர்ரிபிளம், செஸ்ட்நட்பட், அக்ரிமோனி, கிளமேடிஸ் போன்ற மருந்துகளும் விரல் சூப்பும் பழக்கத்தை மாற்ற உதவுகின்றன.  குழந்தைகளின் உடல், மன அமைப்பிற்கேற்ப ஹோமியோபதியிலும், மன நிலைக்கேற்ப மலர் மருத்துவத்திலும் மருந்துகள் தேர்வு செய்யப்படுகின்றன.

மலரினும் மெல்லியது காமம்



கட்டுரை ஆசிரியர்: Dr.S.வெங்கடாசலம்,





"செக்ஸ் என்பது தனி நபரின் பிரச்சினை மட்டுமல்ல, சமூகப் பிரச்சினையும் கூட" என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது நூலொன்றில் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை. வகுப்பறைக்குள் மாணவிகளை பலாத்காரம் செய்யும் ஆசிரியர்களைப் பற்றியும், காவல் நிலையத்திலே கணவர் முன்பே பெண்ணை சிதைத்த போலீஸ் மிருகங்களைப் பற்றியும், தெய்வீகம், தியானம் என்ற போர்வையில் காமக்களியாட்டங்களும், கொலைகளும் நடத்திய ஹைடெக் சாமியார்கள் பற்றியும், தேவாலய வளாகத்திலேயே பெண்களை சூறையாடும் பாதிரியார்களைப் பற்றியும், சாலையில் சென்ற இளம் பெண்ணை வம்பு செய்து ஆடையைப் பிடித்து இழுத்து அலைக்கழித்து உயிரையே பறித்த, இளைஞர்களைப் பற்றியும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பாலியல் குற்றங்கள் எல்லா இடங்களிலும் எல்லா மட்டங்களிலும் பரவி வருகின்றன.


பாலியல் பிழைகளின் பின்புலமாய் தகவல் தொடர்பு சாதனங்கள்: 

மனித உரிமைகளுக்காக, சமூக நியாயங்களுக்காக, மனித மேன்மை-களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பத்திரிகைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் பாலியல் வேட்கையை கிளறி விடுகின்றன. வக்கிர உணர்வுகளுக்கான விதைகளைத் தூவுகின்றன. வன்முறை உணர்வைத் தூண்டுகின்றன. இவைகளால் உந்தித் தள்ளப்படும் குழந்தைகளும், மாணவ, மாணவியரும், இளைஞர்களும் தவறான (பாலியல்) பாதைகளில் பயணம் செய்து வருகின்றனர். ஒரு பக்கம் தகவல் தொடர்புச் சாதனங்கள் பாலியல் தொடர்பான வியங்களை மதவாத கருத்துக்களுக்கு உரமூட்டும் வகையிலும், விஞ்ஞானத்துக்கு புறம்பான வகையிலும் பரப்புகின்றன. மறுபக்கம் மேலைநாட்டு கலாச்சாரமும் தங்குதடையின்றி இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலை- நாடுகளில் சாதாரணமானவர்களிலிருந்து ஜனாதிபதி வரை பாலியல் குற்றங்களில் கற்பு பற்றியும் உரக்க கூச்சலிடும் இங்கே மேலைநாட்டு (அ) நாகரீகங்களின் நச்சு நிழல் படிவதால் பாலியல் தவறுகள் பெருக்கெடுக்கின்றன. மனித உறவுகளில் மாசு படிகிறது. சமூக மாண்புகள் அழிகின்றன.


செக்ஸ் புதிரா? புனிதமா? 

செக்ஸ் என்பது புதிரானதா? செக்ஸ் என்பது புனிதமானதா? செக்ஸ் என்பது விற்பனைச் சரக்கா? செக்ஸ் என்பது பாவச் செயலா? என்ற வினாக்கள் எழுந்துள்ள காலம் இது. செக்ஸ் குறித்து கடந்த காலச் சிந்தனைகளுக்குள்ளே சமுதாயம் மூழ்கி கிடப்பதால் பாலியல் ஞானம் பெறத் திறந்த, விரிவான விவாதம் இன்னும் அமையவில்லை. பெண்ணைப் பற்றிய கருத்துக்களின் அளவுதான் பாலியல் ஞானத்தின் அளவாகவும் உள்ளது. 
பெண் போகப் பொருளாக, பிள்ளை பெறும் எந்திரமாக மட்டுமே கருதப்படுவதால், சமூகத்தின் பாலியல் அறிவு பலவீனமாகவே உள்ளது. பெண் புரியாத புதிர் என்றும், பெண் புனிதமானவள் என்றும் பேசப்படுவதால் செக்ஸ் புதிராகவோ, புனிதமாகவோ கருதப்படுகிற அவலம் உள்ளது.

பசியைப் போல, தாகத்தைப் போல, சுவாசத்தைப் போல இயற்கையான ஒன்றாய் யதார்த்தமான ஒன்றாய், உடலியக்கச் செயல்பாடுகளில் ஒன்றாய் இருக்கக்கூடிய செக்ஸ் 'புதிர்' என்றும் 'புனிதம்' என்றும் பேசப்படுகிறது.

அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் வயாக்ரா: 

மேலை நாடுகளின் பாலியல் பாதை விபரீத விளைவுகளை ஏற்படுத்தம் என்பதற்கு "வயாக்ரா" சரியான சான்றாகும். பாலுணர்வு கலந்த அன்பின் வெளிப்பாடான காமத்தை,மலரினும் மெல்லிய காமத்தை, மிருக வெறியாக மாற்றும் மாத்திரைதான் வயாக்ரா. 

வயாக்ரா என்பது உடலுறவுக்குப் பின்னரும், விரைப்புத் தன்மையை நீடிக்கச் செய்து துன்பத்தை ஏற்படுத்துகின்றது. இரத்த அழுத்தத்தைத் குறைக்கின்றது. புராஸ்டேட் சுரப்பி வீங்குகிறது. புராஸ்டேட் சுரப்பியிலும் முதுகுத்தண்டிலும் புற்றுநோய் ஏற்படுத்துகிறது. சிறுநீரகம் செயலிழக்கின்றது. ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகின்றது. விழிகளின் மிக மெல்லிய இரத்த நாளங்களை விரிவடையச் செய்து பார்வையை பறிக்கிறது. கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் கண்மூடித்தனமான கலாச்சாரத்தை பெருமை பாராட்டுகின்றனர்.

ஹோமியோபதி மனிதனை மனிதனாக நோக்குகிறது. அவனது உடல், மன இயக்கச் சீர்குலைவைச் சரிசெய்து நலத்தை மீட்கிறது. ஆற்றல் ஊட்டுகிறது. பல்வேறு அக, புற நோய்களுக்கும் ஆட்பட்ட மனிதனுக்கு ஹோமியோபதியால் பேருதவி புரிய முடிகிறது. வயிற்றுப்பசி மற்றும் ஜீரணத்தை மையப்படுத்தி (பசியின்மை, அகோரப்பசி, பசித்தும் சாப்பிட இயலாமை, சாப்பிட்டால் வாந்தி, சாப்பிட்டவுடன் வயிற்று வலி என்ற) விதவிதமான நோய்குறிகள் கிளைப்பதைப் போலவே பாலுணர்வை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு குறிகள் வெளிப்படுகின்றன.


அவற்றுக்கான முக்கியமான சில ஹோமியோபதி மருந்துகள் பின்வருமாறு 

1. அக்னஸ் காஸ்டஸ்:

அதிக உடலுறவு அல்லது சுய இன்ப பெண்கள் சக்தியிழப்பு (குறிப்பாக ஆண்கள்).


2. ஓனோஸ் மோடியம்: 

உடலுறவில் வெறுப்பு, இச்சையின்மை (குறிப்பாக பெண்கள்)

3. செலினியம்:

விருப்பம் அதிகம், செயல்திறன் குறைவு, விந்து நீர்த்திருத்தல், விரைவில் விந்து வெளிப்பாடு.

4. கோனியம்: 

பெண் எதிரே நின்றாலே காமவேட்கை, குறி எழுச்சி, விந்து வெளிப்படுதல் மற்றும் காம இச்சையை அடக்கியதால் ஏற்பட்ட பின்விளைவுகள்.

5. புபோ / யுஸ்டிலகோ: 

சுய இன்ப தாகம் அடக்க முடியாமல் தனியே சென்று விட விரும்புதல், தனியறையில் (கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில்) சுய இன்பத்தில்

6. லைகோபோடியம்: 

ஆண்மைக்குறைவு, சிறு வயதிலேயே சுய இன்பப் பழக்கத்தால் ஆண்குறி சிறுத்தல், தளர்தல், வயதானவர்களின் ஆண்மைக்குறைவு.

7. ஸ்டாபிசாக்ரியா: 

அளவு மீறிய சுய இன்பத்தால், பாலுறவால் ஆண்மையின்மை.

8. பாஸ் ஆசிட்: 

மிதமிஞ்சிய உடலுறவால், சுய இன்பப் பழக்கத்தால் பலவீனம், கடுமையான நரம்புத்தளர்ச்சி.

9. காந்தாரிஸ்/ பிக்ரிட் ஆசிட்: 

அதிகமான காம உணர்ச்சியுடன், வலியுடன் உறுப்பு பயங்கரமாக விறைப்படைதல்.

10. டயாஸ்கோரியா: 

பெண்களுடன் உடலுறவு கொள்வது போல் கனவில் விந்து வெளியேறுதல், காலையில் உடல் முழுவதும் வலி.

11. ஆசிட் புளோர்: 

ஒரே பெண்ணிடம் திருப்தியடையாமல் பல பெண்களை விரும்பும் அதிக காமம்.

12. கலாடியம்: 

உடலுறவில் ஆர்வம் அதிகம், குறி விரைப்பின்மை, விந்து வெளிவராமை.

13. நேட்ரம் மூர்: 

தனக்கு மணமாகியிருந்தும் வேறு ஆண் அல்லது பெண்ணை விரும்புதல்.

14. ஓரிகானம் / கிரரியோலா / மூரக்ஸ்: 

பெண்களின் பிறப்புறுப்பில் வேதனையான, உணர்ச்சியுடன் கூடிய சுய இன்பம் செய்ய தீராத ஆவல்.

15. இக்னியா: 

காதல் தோல்வி, உணர்ச்சிகளை மனத்தினுள் புதைத்துக் கொள்ளுதல்.

இன்னும் இவை போல ஏராளமான ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. இவை மனிதனைச் சமநிலைக்கு ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வருகின்றன. செக்ஸ் என்ற ஆற்றல் மிக்க உடலியல் மற்றும் உளவியல் திறனைச் செம்மைப்படுத்துகின்றன.

மனிதன் இயற்கையின் சீமந்த புத்திரன். இயற்கையன்னைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்த செல்லப்பிள்ளை. மனிதனுக்குள் ஆரோக்கியத்தை, ஆற்றல்களை இயற்கை புதைத்து வைத்திருக்கிறது. அவற்றை மிக நேர்த்தியாகப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், ஹோமியோபதி பெருந்துணை புரிகிறது.

(குறிப்பு: கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை அனுபவமும், தகுதியும் உள்ள ஹோமியோ மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரையின் அடிப்படையில்தான் உட்கொள்ள வேண்டாம்.

பெண்களின் செக்ஸ் பிரச்சனைகள் என்ன? தீர்வுகள் என்ன?



கட்டுரை ஆசிரியர்: Dr.V.ஆவுடேஸ்வரி,


ஆங்கில மருத்துவமானாலும் மாற்றுமருத்துவ முறைகள் என்றாலும் ஆண்களின் செக்ஸ் நலப் பிரச்சனைகளைக் கவனிக்கும் அளவுக்கு பெண்களின் செக்ஸ் நலப் பிரச்சினைகளைக் கவனிக்கவில்லை.

இனிய இல்லற வாழ்விற்கு பாலியல் அறிவு அடிப்படையானது. மனித வாழ்வை இயங்கச் செய்வதும் இயக்கி வைப்பதும் 'லிபிடோ' எனும் பாலின்ப வேட்கையே என்று உளவியல் நிபுணர் சிக்மண்ட் ஃபிராய்டு சுட்டிக் காட்டுகிறார். இந்த (லிபிடோ) அடிப்படை உணர்வு பெண்ணுக்கு ஏற்படாமல் போனால், பாலியல் விருப்பமே ஏற்படாமல் அல்லது மிகமிகக் குறைவான விருப்பம் மட்டுமே இருக்குமானால் அதனை HYPOACTIVE SEXUAL DISORDER என்றழைக்கின்றனர். 'செக்ஸ்' மீது வெறுப்புணர்ச்சி மனதில் ஏற்பட்டிருக்குமானால் அதனை SEXUAL AVERSION DISORDER என்றழைக்கின்றனர்.

லிபிடோ குறைபாடும், செக்ஸ் குறித்த வெறுப்பும் அமைந்துள்ள பெண்ணின் மணவாழ்க்கை மயான வாழ்க்கையே. தாம்பத்தியம் எனும் இனிய சங்கீதம் இசைக்க முடியாது.

சில பெண்களுக்கு மனதில் பாலுணர்வுச் சிந்தனைகளும் விருப்பமும் நிறைந்திருக்கும். ஆனால் உடலில் உரிய ரசாயன மாற்றங்கள் நிகழாது. ஆண்களிடம் காணப்படும் ERECTYLE DISORDER  எனப்படும் விறைப்பு பிரச்சினை போல பெண்களிடம் இனப்பெருக்க உறுப்பில் உறவுக்கு முந்திய கிளர்ச்சிநிலை, சுரப்புநீர் (LUBRICATIONG FLUID) தோன்றாமல் பிரச்சினைகள் ஏற்படும்.

சில பெண்களுக்கு பிறப்புறுப்பு தசைகள் இறுக்கமடைந்து விட்டுவிட்டு வலி ஏற்படும். இதனை VAGINISMUS என்பார்கள். இதனால் உடலுறவு என்ற இனிய அனுபவத்திற்கு மாறாக கடுமையான வேதனையை அனுபவிக்க நேரிடும்.

கல்வியும், விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளரும் போது உலகம் உள்ளங்கைக்குள் அடங்கி விடுகிறது. இதில் நன்மைகளும், தீமைகளும் கலந்தே இருக்கின்றன. அதீதமான கட்டுப்பாடுகளை மட்டுமே அனுபவித்த இந்தியப் பெண்ணினம் மேற்கத்திய சுதந்திரமான பெண் வாழ்க்கையை நெருக்கமாய் பார்க்கும் வாய்ப்பு இன்று ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகவும், இதர கலாச்சார சீர்க்கேடுகளாலும் சில பெண்களின் செக்ஸ் வாழ்க்கை தவறான பாதைகளிலும் செல்கிறது. ஓரினச் சேர்க்கை (LESBIANISM), சுய இன்ப அடிமைத்தனம் (MASTURBATION ADDICTION) போன்றவை அதிகரித்து வருகிறது. இவை பெண்களின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கக் கூடியவை. இத்தகைய பெண்களுக்கு உரிய ஆலோசனை, வழிகாட்டுதல், சிகிச்சை வழங்கினால் நிச்சயம் மீள முடியும்.

பெண்களின் அனைத்துப் பாலியல் நலப் பிரச்சினைகளையும், ஹோமியோபதி, பாச் மலர் மருத்துவம், அக்குபஞ்சர் போன்ற இயற்கை முறைச்சிகிச்சைகளில் பக்கவிளைவுகளின்றித் தீர்த்துக் கொள்ள முடியும். பாதிக்கப்பட்ட பெண்களின் உளவியல் ரீதியான, உடல் ரீதியான தனித்தன்மைகளையும், மொத்த அறிகுறிகளையும் ஆய்வு செய்து சிகிச்சை பெறுவதால் எத்தகைய பாலியல் சிக்கல்களுக்கும் எளிய முறையில் தீர்வுகள் கிடைக்கின்றன.

ஹோமியோபதி எனும் பிரமாண்டமான மருத்துவ சமுத்திரத்தில் ஆண், பெண் பாலியல் நலப் பிரச்சினைகளைத் தீர்த்து நலமளிக்கக் கூடிய மருந்துகள் மட்டும் 200-க்கும் மேல் உள்ளன. 38 விதமான மலர் மருந்துகள் உள்ளன. ஆயிரக்கணக்கான பெண்களின் கண்ணீரைத் துடைத்து இன்பமயமான வாழ்க்கைக்கு உதவக்கூடிய மருந்துகள் இவை.


சிகிச்சை பெற தொடர்பு கொள்க:
Dr.S.வெங்கடாசலம் & Dr.V.ஆவுடேஸ்வரி,
தீபம் மாற்றுமுறை மருத்துவமனை,
29/9A பழைய டிரங்க் ரோடு,
சாத்தூர் - 626203.
தொடர்பு: 9443145700.
Althopp@gmail.com

ஹோமியோபதி




நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானமா! அல்லது வெறும் சர்க்கரை மாத்திரைகளா!!
ஹோமியோபதி பற்றிய தவறான கூற்றுக்களும் விளக்கங்களும்

கூற்று 1 : ஹோமியோபதி நிரூபிக்கப்படாத விஞ்ஞானம். உண்மை : பரிசோதனை அடிப்படையிலான மருந்தியல் மற்றும் கிளினிக்கல் புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமைந்தது ஹோமியோபதி. கடந்த 200 ஆண்டுகளில் பல்வேறு நோய் அறிகுறிகளுக்கு ஹோமியோபதி மருந்துகளின் குணப்படுத்தும் திறன் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் கிளினிக்கல் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. உண்மையில் ஹோமியோபதியைத் தோற்றுவித்தவர்தான் அலோபதி என்ற பெயரை உருவாக்கினார். அவரை பரிசோதனை மருந்தியலின் தந்தை என்று அலோபதி மருத்துவர்கள் கருதுகின்றனர். ஹோமியோபதி நன்கு நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானமாகும்.

கூற்று 2 : ஹோமியோபதி மருந்துகள் வெறும் சர்க்கரை மாத்திரைகள் தான். அவற்றுக்கு மருந்துக்குரிய மதிப்பு எதுவும் கிடையாது. மருந்து போன்ற வெற்று மாத்திரைகளாகவே அவை செயல்படுகின்றன.
 
உண்மை : ஆம். வெள்ளை நிற சர்க்கரை மாத்திரைகளுக்கு மருந்துக்குரிய மதிப்பு எதுவும் இல்லை தான். ஆனால் இவை ஆல்கஹால் அடிப்படையிலான மருந்துகளைக் ' கொண்டு சேர்க்கும் வாகனங்களாகச்'  செயல்படுகின்றன. இன்னொரு வகையில் சொன்னால், ஹோமியோபதி மருந்துகளை நேரடியாகவோ, தண்ணீரில் கலந்தோ எடுத்துக் கொள்ளலாம். ஹோமியோபதி மருந்துகள் உலகமெங்கும் விஞ்ஞான முறைப்படி ஆராயப்பட்டு, பலவகையான நோய்களுக்கு பயன்மிக்க மருந்து என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவை மருந்து போன்ற வெற்று மாத்திரைகள் அல்ல.

கூற்று 3 : ஹோமியோபதி மெதுவாகச் செயல்படக் கூடியது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இருமல், ஜலதோம் போன்ற திடீர் அல்லது உடனடி நோய்களில் இவற்றை பயன்படுத்த முடியாது.
 
உண்மை : இதுபோன்ற நோய்களிலும் ஹோமியோபதி விரைந்து செயல்படுகிறது. தொற்றுநோய், காய்ச்சல், ஜலதோம் போன்றவற்றைத் திறம்படக் குணப்படுத்தக் கூடியது. துரதிடவசமாக குறுகிய கால பிரச்சனை நீண்ட கால நோயாக மாறும்போதுதான் மக்கள் ஹோமியோபதியை நாடுகின்றனர். இத்தகைய நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சைக்கு நீண்டகாலம் ஆகிறது. மேலும், ஹோமியோபதியை நாடி வருவது பெரும்பாலும் முடக்குவாதம், அலர்ஜி, ஆஸ்துமா நோயாளிகளே. இத்தகைய நோய்களைக் குணப்படுத்தும் போது எந்த மருத்துவ முறையானாலும் நீண்ட காலமே ஆகும்.

கூற்று 4 : ஹோமியோபதி சிகிச்சை எடுக்கும் போது கண்டிப்பான பத்திய உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். 
உண்மை : சில நோயாளிகளிடம் வெங்காயம், வெள்ளைப்பூண்டு, காபி, தேனீர், புகையிலை, மது போன்றவற்றைத் தவிர்க்கும்படி கூறப்படுகிறது. ஏனெனில், இவை ஹோமியோபதி மருந்துகளின் செயல்பாட்டில் குறுக்கிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் மது மற்றும் புகையிலைக் கட்டுப்பாடு உடலுக்கு ஆரோக்கியமானதும் ஆகும்.

கூற்று 5 : சர்க்கரை நோய் இருந்தால் ஹோமியோபதி பயன்படுத்த முடியாது.
 
உண்மை : அப்படி அல்ல. சின்னஞ்சிறு சர்க்கரை உருண்டைகளை உட்கொள்வதால் பெரிய விளைவு ஏற்பட்டு விடாது. சில உருண்டைகளில் இருப்பதைவிட அதிக அளவு சர்க்கரையை அன்றாட உணவில் நாம் எடுத்துக் கொள்கிறோம். மிகவும் முற்றிய நிலையில் உள்ள சர்க்கரை நோயாளிகள் தண்ணீரில் ஹோமியோபதி திரவ மருந்தைக் கலந்து சொட்டுகளாக எடுக்கலாம்.

கூற்று 6 : எல்லா வகையான நோய்களுக்கும் அதே வெள்ளை மாத்திரைகள்தான் ஹோமியோபதி டாக்டர் தருகின்றனர். அவை எப்படி பயன்மிக்கதாக இருக்கும்? உண்மை : நோயின் தன்மையைப் பொறுத்து சர்க்கரை உருண்டைகளில் வெவ்வேறு திரவ மருந்துகளை ஹோமியோபதி டாக்டர்கள் கலந்து தருகின்றனர். மருந்தை எடுத்துச் சென்று சேர்க்கும் வாகனங்களாகத்தான் சர்க்கரை உருண்டைகள் பயன்படுகின்றன. 1100க்கும் அதிகமான வெவ்வேறு மருந்துக் கரைசல் ரகங்களில் இருந்து நோயாளியின் நோய் நிலைமைக்கு ஏற்ற மருந்தை டாக்டர் தேர்வு செய்கிறார். மக்களுடைய மனங்களில் ஹோமியோபதி பற்றிய பற்பல சந்தேகங்களும் புதிர்களும் உள்ளன. சில பொதுவான சந்தேகங்களைப் போக்க முயன்றிருக்கிறோம்.