புதிய பதிவுகள்

Wednesday, August 24, 2011

செக்ஸ் கல்வி A TO Z




செக்ஸ் குறித்த முழுமையான மருத்துவ தகவல்கள் அடங்கிய
 மூன்று புத்தகம்+மூன்று டிவிடி

Friday, August 19, 2011

Animation about diabetes and the body.


நீரிழிவு (சர்க்கரை நோய்) நோயாளர்களுக்கான விளக்கப் படம் TYPE 2




சிறுநீரக பாதிப்பு (வீடியோ)


யோகாசனம் எளிதாக செய்ய ஒரு யோசனை…..


நம்மில் பலருக்கு யோகாசனம் செய்ய ஆசையிருக்கும் ஆனால் செய்ய இயலாது.காரணம் போதிய நேரமின்மை,வேலைப்பளு என இன்னும் பல…..
ஆனால் மிகவும் சிரமப்படாமல் யோகாசனம் செய்ய ஒரு வழி இருக்கிறது.சொன்னால் செய்வீர்களா? சரி நான் சொல்வதற்க்கு முன்னால் உங்களுக்கு சில புகைப்படங்களை காண்பிக்கிறேன்,பார்த்துவிட்டு பின்பு  நான் சொல்வதை செய்யலாமா வேண்டாமா என முடிவு செய்து கொள்ளுங்கள்!

Tuesday, August 16, 2011

ஆழ்மனதின் அற்புத சக்திகள்


ழக்கங்கள் உருவாகி பலப்படும் இடம் ஆழ்மனம் தான் என்பதையும் ஆழ்மனதில் பதியும் எண்ணங்கள் எப்படி அதிக சக்தி பெறுகின்றன என்பதையும் பார்த்தோம். அது மட்டுமல்ல ஒரு மனிதனின் வெற்றி - தோல்வியையும், அவன் பலங்கள், பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.

ஹிப்னாடிசம்


  கல்லூரியில் படிக்கும்போது பாட சம்பந்தமான புத்தகங்களை படிக்க மட்டுமே அதிக தயக்கம்.......மற்றபடி வேறுசில புத்தகங்களை படிப்பதில் எந்த ஒரு தயக்கமும் இருந்தது இல்லை......எதையாவது புதியதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே..காரணம்..     புத்தகம் வாசிப்பு சம்பந்தமாக இருந்ததாலோ தெரியவில்லை......காதலை விட்டு வெகு தூரத்தில் இருந்தேன்...அதற்காக தனியாக நான் முயற்சி செய்யவில்லை அதனால் காதலும் என்னை தேடி வரவில்லை...

Sunday, August 14, 2011

Monday, August 8, 2011

நீரிழிவு (சர்க்கரை நோய்) நோயாளர்களுக்கான விளக்கப் படம்














முதல் உதவி வீடியோ








குழந்தைகள் விரல் சூப்புவது ஏன் ? சிகிச்சை மூலம் மாற்றமுடியுமா ?



ஆசிரியர்:Dr.V.ஆவுடேஸ்வரி.சாத்தூர்.


                குழந்தைகளுக்குத் தாய்ப்பால் முக்கியமான உணவாகும்.  ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது அது இருவருக் குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது.  இந்த நெருக்கமில்லாத குழந்தைகளே அதிகமாக விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன.  புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு இப்படியான பழக்கம் அதிகம் உள்ளது.


                 பொதுவாக விரல் சூப்பும் பழக்கம் இப்போது எல்லாக் குழந்தைகளிடமும் இருக் கிறது. மூன்று வயது வரை இந்தப் பழக்கத்தைத் தவறாக நினைக்க வேண்டியதில்லை.  அந்த வயதிற்குப் பின்பும் இப்பழக்கம் நீடித்தால்ஒரு ஹோமியோபதி மற்றும் பாச் மலர் மருத்துவ நிபுணரிடம் காண்பித்து சிறப்பு சிகிச்சை அளிப்பது நல்லது.


                 குழந்தை விரல் சூப்புவதற்கு மிக முக்கியமான காரணமே தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதுதான் என்கிறார்கள் சில உளவியல் நிபுணர்கள். சிந்தனை அதிகமுடைய குழந்தைகளிடம்தான் விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறது என்று சிலர்  சொல்கிறார்கள்.

                 பெற்றோரிடம் தேவையான அன்புபராமரிப்பு,பாதுகாப்பு ஆகியவை கிடைக்காத சூழலில்தான் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் நீடிக்கிறது.  பெற்றோர்களிடம் நிரந்தர சண்டை இருந்தால் அவர்களின் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் உறுதியாக இருக்கும் என்கிறார்கள்.

  குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு வழியில் மன அழுத்தம் ஏற்படும் போது அவை விரல் சூப்புவதைத் தான் விரும்புகிறது. சில குழந்தைகள் ஓய்வுக்காகவும்தூக்கம் நன்றாக வருவதற்காகவும்சில சமயம் பசிக்காகவும் கூட விரல்களைச் சூப்பு கின்றன.  நான்கு வயது முதல் 16 வரை விரல் சூப்பும் குழந்தைகளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது.  4 முதல் 6 வயதிற்குள் குழந்தையின் பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் முளைக்கத் துவங்கும். இக்காலத்தில் குழந்தைகள் விரல் சூப்பினால் பற்கள் சற்று வெளியே நீளத் துவங்கும்.  பற்களுக்கு இடையில் இடைவெளி ஏற்படும். இதனால் மற்ற குழந்தை களைப் போல் பற்கள் இல்லாமல் தனக்கு மட்டும் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறதே என்கிற தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது.  மேலும் இக்குழந்தைகளுக்கு பற்கள் சீராக இல்லாதிருப்பதால் பேச்சிலும் தெளிவு இல்லாமல் இருக்கும்.

                 இதுபோல் விரல் சூப்பும் குழந்தைகளுக்கு தொடர்ந்து எச்சிலால் விரல்கள் நனைந்துசோர்ந்து சூம்பிக் காணப்படும். இதனால் விரல்களில் இரத்த ஓட்டம் குறைந்து பழுப்பு நிறமாகி விடும்.  அதே போல் குழந்தைகளின் விரல்களிலுள்ள அழுக்குகள் உள்ளே சென்று சில நோய்களை ஏற்படுத்தும்.

 விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி?

                 விரல்களைச் சூப்பும் குழந்தைகளுக்கு அந்த விரல்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்படி ஓவியம் வரைதல்,புத்தகங்களைப் படிக்க வைத்தல் போன்ற மாற்று வழிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.  இப்படி செய்வதால் குழந்தைகள் சிறிது சிறிதாக இப்பழக்கத்தை விட்டுவிடுவார்கள்.


                 சில குழந்தைகள் இரவில் தூக்கத்தின் போது கை சூப்பும்.  இந்நிலையில் பெற்றோர் விரல்களைஎடுத்து விடவேண்டும். இதுபோல் தூங்கும் போது குழந்தைகளின் கையில் ஏதாவது ஒரு விளை யாட்டுப் பொம்மையைக் கொடுத்தால்அந்தப் பொம்மையைப் பிடித்துக் கொண்டிருக் கிறோம் என்கிற கவனத்தில் விரல் சூப்பாமல் இருக்கும்.

                 விரல் சூப்பும் குழந்தைகளின் விரல்களில் வேப்பெண்ணெய் தடவுதல்பேண்டேஜ் போடு தல் போன்ற வன்முறையான செயல்களைத் தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். இது உங்களுக் கும் உங்கள் குழந்தைக்கும் இடை வெளியை துவக்கத்திலேயே அதிகரித்துவிடும்.

                 மேலும் விரல் சூப்பும் குழந்தைகளிடம் அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காகஅந்த விரல்களில் சூடு போடுவது,குழந்தைகளை அடிப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதை விட ஹோமியோபதி மருத்துவரிடம் காண்பித்து ஹோமியோ மற்றும் மலர் மருத்துவ சிகிச்சை செய்வதே சிறந்தது.  ஹோமியோபதியில் கல்கேரியா கார்ப்கல்கேரியா பாஸ்சிலிகாநேட்ரம் மூர்பல்சடில்லாஇபிகாக்சக்காரம் போன்ற மருந்துகளும்பாச் மலர் மருத்துவத்திலும் வால்நட்ஒயிட் செஸ்ட் நட்செர்ரிபிளம்செஸ்ட்நட்பட்அக்ரிமோனிகிளமேடிஸ் போன்ற மருந்துகளும் விரல் சூப்பும் பழக்கத்தை மாற்ற உதவுகின்றன.  குழந்தைகளின் உடல்மன அமைப்பிற்கேற்ப ஹோமியோபதியிலும்மன நிலைக்கேற்ப மலர் மருத்துவத்திலும் மருந்துகள் தேர்வு செய்யப்படுகின்றன.

இயற்கை வழங்கும் அதி உன்னத உணவு


கட்டுரை ஆசிரியர்: Dr.S.வெங்கடாசலம்


            மனித உயிரையும் உடல் ஆரோக்கியத் தையும் காப்பதே உணவின் பிரதான நோக்கம். ருசியும் மணமும் இரண்டாம் தேவைகளே. ஆனால் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் வாழ்க்கையின் அர்த்தங்களும்உணவுகளின் நோக்கமும் மாறிவிட்டன. வறுமைப் பசியாலும்கடன் தொல்லையாலும் ஏற்படும் மரணங்களை விட அளவுமீறிய ஒழுங்கற்ற ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படும் மரணங்களே அதிகம்.

          நமது உணவுகளில் பெரும்பகுதி கார்போ ஹைட்ரேட்இனிப்புஅடர்கொழுப்பு (Saturated Fats) போன்ற சத்துக்களே அடங்கியிருப்பதால் எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகிறோம். கொலஸ்டிரால் இருதய-ரத்தநாள நோய்கள்உடல்பருமன்நீரிழிவுமலட்டுத்தன்மை,புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் முற்றுகையிடுகின்றன. இதற்குத் தீர்வு... மருத்து வமாஇல்லை... வாழ்க்கைமுறை மாற்றங்களும் சிறந்த உணவுகளும் தான் உண்மையான தீர்வு களை வழங்க முடியும்.           


 ஸ்பைரூலினா ...எனும் அரியஎளிய உணவு

       ஸ்பைரூலினா  பற்றி பலரும் கேள்விப்பட்டி ருக்கக்கூடும். ஆனால் அதன் முழுமையான ஆற்றலையும்பயன்களையும் அறிந்திருந்தால் அனைவருமே மிகப்பெரும் நன்மை அடைந்திருக்க முடியும்.

   ஸ்பைரூலினா.. ஒரு செல் புரத பாசி வகையைச் சேர்ந்தது. (Single Celled Algae) அடர் பச்சை நிறமுள்ள இந்தச் சுருள்பாசியில் மிக அதிகளவில் பச்சையம் அமைந்திருப்பதாலேயே அந்நிறத்தில் உள்ளது. உலகின் வெப்பமான நீர்நிலைப் பகுதிகளில் விளையக்கூடியது. மத்திய ஆப்ரிக்காவட ஆப்ரிக்காமெக்ஸிகோஇலங்கைஇந்தியா போன்ற இடங்களில் கடல்களில்ஏரி களில் காணப்படுகிறது.

 உலகிலுள்ள வேறு எந்த தாவர உணவுப் பொருட்களையும்இறைச்சி உணவுப் பொருட் களையும் விட அதிகளவு புரதம் (Protein) இச்சுருள்பாசியில் செறிந்துள்ளது. இது போன்ற சத்து ஆதாரமிக்க நீர்ப்பாசிகளை உணவாக உண்பதால்தான் மீன்களில் அதிகப் புரதம் அமைகிறது. விண்வெளி வீரர்களின் முக்கிய உணவாக  ஸ்பைரூலினா  பயன்படுகிறது. ஏனென் றால் நாம் இதை உண்ணும் அளவோ மிகக் குறைவு.. கிடைக்கும் ஆற்றலோ அளப்பரியது!  Yes...Micro Food ! Macro Blessing ! 

 

இயற்கை அன்னையின் ஆற்றல்மிக்க  உன்னத உணவு

     இயற்கையை நோக்கி நீ இரண்டடி போனால்இயற்கை உன்னை நோக்கி நான்கடி நெருங்கி வரும் என்பது உண்மையே. சோவியத் ருஷ்யாவில் செர்னோபிள் அணுஉலை விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றிலுமுள்ள விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன. விளைச்சல் நஞ்சாய் அமைந்தன. எண்ணற்ற குழந்தைகளுக்கு நச்சு உணவுகளால் ஏராளமான தோல் அலர்ஜி நோய்களும்உடல்நலச் சிக்கல்களும் ஏற்பட்டன. புழக்கத்திலிருந்த மருந்துகள் மூலம் குழந்தை களைக் காப்பாற்ற இயலாத நிலையில் இறுதியில்  ஸ்பைரூலினா பரிந்துரைக்கப்பட்டது. தினமும் குழந்தைகளுக்கு இந்தக் கடற்பாசி உணவு மிகச் சிறிதளவு தொடர்ந்து வழங்கப்பட்டது. இயற்கையின் ஆச்சரியமாய் ஆறுமுதல் எட்டு வாரங்களில் குழந்தைகளின் தோல் அலர்ஜி நோய்கள் தீர்ந்தன. பெரும்பாலான நோய்களி லிருந்து அவர்கள் மீள முடிந்தது. எனவே ரஷ்யர்கள் ஸ்பைரூலினாவை மருந்துணவு (Medicine Food) என்கின்றனர்.

 ஸ்பைரூலினாவில் அடங்கியுள்ள சத்துக்கள் 

   மிகமுக்கியமாக இறைச்சியை விட 5 மடங்கு அதிகம் புரோட்டின் (உயர்தரமான தாவரவகைப் புரதம்) அடங்கியுள்ளது. காரட்டை விட 10 மடங்கு அதிகம் பீடாகரோடின் சத்து அடங்கியுள்ளது. தாய்ப்பாலில் மட்டுமே காணப்படும் காமாலி னோனிக் அமிலம் (Gamma Linoleic Acid)  இதில் அடங்கியுள்ளது. அமினோ அமிலங்கள் 22ல் 18 வகை இதில் உள்ளன. 10 வகை வைட்டமின்கள் குறிப்பாக VitA,E,B12 போன்றவை உள்ளன. 8 வகை தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

 ஸ்பைரூலினா  அள்ளி வழங்கும் ஆரோக்கியம்

    நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கிய மும் வழங்குவதில் முதலிடம் வகிக்கும் உன்னத உணவாக ஸ்பைரூலினாவை இயற்கை படைத்துள் ளது. நமது உணவுகளில் கார்போஹைட்ரேட்எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. உணவுக்கு 1மணி நேரம் முன்பு ஸ்பைரூலினா உண்பதால் பசி சீரடையும்எடை குறையும்.

   மேலும் புரதம்வைட்டமின்கள் அபரிமித மாக உள்ளதால் நோய் எதிர்பாற்றல் பெருகும். நோய் தொற்றுக்கள் நெருங்காது. இதிலுள்ள காமா லினோலிக் அமிலச் சத்து கொலஸ்டிரால் உற்பத்தியைத் தடுக்கும். கெட்ட கொலஸ்டிரால் (HDL) அளவைக் குறைக்கும் நல்ல கொலஸ்டிரால் (LDL) அளவை அதிகரிக்கும். உடல் பருமனைக் குறைக்க சிறந்தது. இருதய நோய்களைத் தடுக்கும்ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தும். மேலும் காமா லினோலிக் அமிலச் சத்து சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்புப் (Powerful Anti Inflammatory) பணியும்  ஆற்றுவதால் மூட்டு அழற்சி வலியால் துயரப்படு வோருக்கு பெரும் நிவாரணியாக அமைந்துள்ளது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

 சர்க்கரை நோயாளிகளுக்கு இனிய தீர்வுகள்

  ஸ்பைரூலினா... மனித உடலில் நிகழ்த்தும் அதிசயங்கள் ஒன்று இரண்டல்ல! ஏராளம்! ஏராளம்! சர்க்கரை நோயாளிகளுக்கு இது வரப்பிரசாதம். வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவை (Blood Sugar level in Fasting6 முதல் 8 வாரங்களில் மிகச் சரியான அளவுக்குக் கொண்டு வருவதோடுஅடிக்கடி பசி ஏற்படுதல்அடிக்கடி உண்ண வேண்டிய நிர்பந்தம்நீரழிவு மிகுதியால் தோல் பாதிப்புகள்பாத எரிச்சல் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் சுகமான,சுலபமானநம்பகமான தீர்வு ஏற்படுகிறது.

 Best Stomach Tonic !

            ஸ்பைரூலினா... இரைப்பை மற்றும் குடல் களின் செயல்திறனை அதிகரிக்கிறது.E.coil,Candida போன்ற தீய பாக்டீரியாக்களை முறியடிக்க உதவுகிறது. ஹார்மோன் இயக்கத்தைச் சமநிலைப் படுத்துகிறது.

                    

முதுமையும் தளர்ச்சியும் தூரப் போகும்

  மனிதனை முடக்கி மரணத்தை நோக்கி விரைவாய் நகர்த்தும் சிதைவு நோய்களை (Degenerative Diseases) தடுக்கும் ஆற்றல் ஸ்பைரூலினாவில் அமைந்துள்ளது. இது உடலின் நச்சுக்களை அகற்றும் Anti Oxidant/Antiviralagent ஆகப் பணியாற்றுகிறது. Vit.B.12அடங்கியுள்ளதால் உடல்மன அழுத்தங்கள் இறுக்கங்கள் குறைந்து சுதந்திர உணர்வு ஏற்படும். தோல் வறட்சிதோலில் சுருக்கம்இதரதோல் நோய்களையும் முறிய டிக்கும். எப்போதும் சோர்வும் பலவீனமும் உள்ளவர்களுக்கு, (Chornic Fatique Syndrome-CFS)  நீண்டகால களைப்பு நோய்க்கு மிகச் சிறந்த சிகிச்சையாக இது அமைகிறது. இதன் மூலம் புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் பெருகும். தளர்ச்சி மறையும்முதுமையைத் தள்ளிப்போடும் (Antiaging) ஆற்றல் ஸ்பைரூலினாவுக்கு உள்ளது. புற்று நோயைத் தடுக்கும் சக்தியும் (Cancer Fighting Ingredients) இதிலுள்ளன என ஏராளமான ஆய்வுகள் மூலம் அறியமுடிகிறது.

   சேதமடைந்த செல் டிஎன்ஏ வின் விளைவே புற்று. இது கட்டுக்கடங்காமல பல்கிப் பெருகும். இந்நிலையில்   Endonucleus என்ற சிறப்பு என்சைம்கள் சேதமடைந்த செல்  டிஎன்ஏ நிலை பெற்று செல்லைப் பாதுகாத்து வாழ்வளிக்கும். இந்த என்சைம்கள் செயல்படாத நிலையில்  டிஎன்ஏ சரிசெய்யப்படாமலேயே போய்விடும். புற்று வளரும். ஸ்பைரூலினா... செல்லின் நியூக்ளியஸ் என்சைம் செயலைத் தூண்டும்அதிகப்படுத்தும். இதுகுறித்து தொடர் ஆய்வுகளி லிருந்து நம்பிக்கையளிக்கும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

          

 ஸ்பைரூலினா பெயரில் நடைபெறும் MLM-நிறுவனக் கொள்ளையை முறியடிப்போம்

    மனிதகுலம் எத்தனையோ போர்களை இயற்கை சீற்றங்களைச் சந்தித்து மீண்டுள்ளது. மனித சமூகமும் பூண்டோடு அழிந்துவிடப் போகிறது என ஆரூடம் கணித்த எத்தனையோ பேர்கள் மாண்டுவிட்டனர். ஆனால் மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தனக்கு எதிரான சூழல்களிலிருந்தும்நோய்மையிலிருந்தும் மீள மனிதகுலம் இடையறாது போராடிப் போராடி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

   உயிரினங்களில் புரட்சிகரமானது மனித உயிர். உணவுகளில் புரட்சிகரமானது ஸ்பைரூ லினா. மருந்துகளால் அல்ல மிகச்சிறந்த (இயற்கை) உணவுகளால் மட்டுமே மனித நலம் பாதுகாக்கப் படும். இயற்கையை வணங்குவது அல்ல. இயற்கை யோடு இணைந்த வாழ்வதே முக்கியம். ஸ்பைரூ லினா ஒவ்வொரு குடும்பத்திலும் அடிப்படை உணவு போல அமைய வேண்டும். இந்த எளிய உணவுப் பொருளை MLM நிறுவனங்கள் தங்கத்தின் விலைக்கு விற்பனை செய்து கொள்ளையடிக்கும் மோசடியில் வீழ்ந்துவிடாமல்எல்லோருக்கும் ஏற்றவிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் படும்  ஸ்பைரூலினா வையே அனைவரும் பயன் படுத்த வேண்டும்.

  எதிர்காலத்தில் அதிகமான பேருக்குக் குறைந்த செலவிலான உணவு ஆதாரமாக இது திகழும்  என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை வழங்கும் அதி உன்னத உணவு


கட்டுரை ஆசிரியர்: Dr.S.வெங்கடாசலம்


            மனித உயிரையும் உடல் ஆரோக்கியத் தையும் காப்பதே உணவின் பிரதான நோக்கம். ருசியும் மணமும் இரண்டாம் தேவைகளே. ஆனால் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் வாழ்க்கையின் அர்த்தங்களும்உணவுகளின் நோக்கமும் மாறிவிட்டன. வறுமைப் பசியாலும்கடன் தொல்லையாலும் ஏற்படும் மரணங்களை விட அளவுமீறிய ஒழுங்கற்ற ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படும் மரணங்களே அதிகம்.

சுய இன்பம் நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா?


ஆசிரியர்: Dr.S.வெங்கடாசலம்,


உலகம் முழுவதும் பருவமடைந்த ஆண்கள், பெண்கள் பலரிடம் சுய இன்பப் பழக்கம் நிலவி வருகிறது. சிலரிடம் பருவமடையும் முன்னரே சிறு பிராயத்திலேயே இப்பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் பிஞ்சிலே பழுத்தவர்கள். சிலரிடம் மணமான பின்னரும் கூட நாற்பது, ஐம்பது வயதுக்கு மேலும் கூட இப்பழக்கம் நீடிக்கிறது.

சாதாரணமாகப் பிறப்புறுப்பை தீண்டும் போது

மலரினும் மெல்லியது காமம்



கட்டுரை ஆசிரியர்: Dr.S.வெங்கடாசலம்,





"செக்ஸ் என்பது தனி நபரின் பிரச்சினை மட்டுமல்ல, சமூகப் பிரச்சினையும் கூட" என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது நூலொன்றில் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை. வகுப்பறைக்குள் மாணவிகளை பலாத்காரம் செய்யும் ஆசிரியர்களைப் பற்றியும், காவல் நிலையத்திலே கணவர் முன்பே பெண்ணை சிதைத்த போலீஸ் மிருகங்களைப் பற்றியும், தெய்வீகம், தியானம் என்ற போர்வையில் காமக்களியாட்டங்களும், கொலைகளும் நடத்திய ஹைடெக் சாமியார்கள் பற்றியும், தேவாலய வளாகத்திலேயே பெண்களை சூறையாடும் பாதிரியார்களைப் பற்றியும், சாலையில் சென்ற இளம் பெண்ணை வம்பு செய்து ஆடையைப் பிடித்து இழுத்து அலைக்கழித்து உயிரையே பறித்த, இளைஞர்களைப் பற்றியும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பாலியல் குற்றங்கள் எல்லா இடங்களிலும் எல்லா மட்டங்களிலும் பரவி வருகின்றன.


பாலியல் பிழைகளின் பின்புலமாய் தகவல் தொடர்பு சாதனங்கள்: 

மனித உரிமைகளுக்காக, சமூக நியாயங்களுக்காக, மனித மேன்மை-களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பத்திரிகைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் பாலியல் வேட்கையை கிளறி விடுகின்றன. வக்கிர உணர்வுகளுக்கான விதைகளைத் தூவுகின்றன. வன்முறை உணர்வைத் தூண்டுகின்றன. இவைகளால் உந்தித் தள்ளப்படும் குழந்தைகளும், மாணவ, மாணவியரும், இளைஞர்களும் தவறான (பாலியல்) பாதைகளில் பயணம் செய்து வருகின்றனர். ஒரு பக்கம் தகவல் தொடர்புச் சாதனங்கள் பாலியல் தொடர்பான வியங்களை மதவாத கருத்துக்களுக்கு உரமூட்டும் வகையிலும், விஞ்ஞானத்துக்கு புறம்பான வகையிலும் பரப்புகின்றன. மறுபக்கம் மேலைநாட்டு கலாச்சாரமும் தங்குதடையின்றி இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலை- நாடுகளில் சாதாரணமானவர்களிலிருந்து ஜனாதிபதி வரை பாலியல் குற்றங்களில் கற்பு பற்றியும் உரக்க கூச்சலிடும் இங்கே மேலைநாட்டு (அ) நாகரீகங்களின் நச்சு நிழல் படிவதால் பாலியல் தவறுகள் பெருக்கெடுக்கின்றன. மனித உறவுகளில் மாசு படிகிறது. சமூக மாண்புகள் அழிகின்றன.


செக்ஸ் புதிரா? புனிதமா? 

செக்ஸ் என்பது புதிரானதா? செக்ஸ் என்பது புனிதமானதா? செக்ஸ் என்பது விற்பனைச் சரக்கா? செக்ஸ் என்பது பாவச் செயலா? என்ற வினாக்கள் எழுந்துள்ள காலம் இது. செக்ஸ் குறித்து கடந்த காலச் சிந்தனைகளுக்குள்ளே சமுதாயம் மூழ்கி கிடப்பதால் பாலியல் ஞானம் பெறத் திறந்த, விரிவான விவாதம் இன்னும் அமையவில்லை. பெண்ணைப் பற்றிய கருத்துக்களின் அளவுதான் பாலியல் ஞானத்தின் அளவாகவும் உள்ளது. 
பெண் போகப் பொருளாக, பிள்ளை பெறும் எந்திரமாக மட்டுமே கருதப்படுவதால், சமூகத்தின் பாலியல் அறிவு பலவீனமாகவே உள்ளது. பெண் புரியாத புதிர் என்றும், பெண் புனிதமானவள் என்றும் பேசப்படுவதால் செக்ஸ் புதிராகவோ, புனிதமாகவோ கருதப்படுகிற அவலம் உள்ளது.

பசியைப் போல, தாகத்தைப் போல, சுவாசத்தைப் போல இயற்கையான ஒன்றாய் யதார்த்தமான ஒன்றாய், உடலியக்கச் செயல்பாடுகளில் ஒன்றாய் இருக்கக்கூடிய செக்ஸ் 'புதிர்' என்றும் 'புனிதம்' என்றும் பேசப்படுகிறது.

அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் வயாக்ரா: 

மேலை நாடுகளின் பாலியல் பாதை விபரீத விளைவுகளை ஏற்படுத்தம் என்பதற்கு "வயாக்ரா" சரியான சான்றாகும். பாலுணர்வு கலந்த அன்பின் வெளிப்பாடான காமத்தை,மலரினும் மெல்லிய காமத்தை, மிருக வெறியாக மாற்றும் மாத்திரைதான் வயாக்ரா. 

வயாக்ரா என்பது உடலுறவுக்குப் பின்னரும், விரைப்புத் தன்மையை நீடிக்கச் செய்து துன்பத்தை ஏற்படுத்துகின்றது. இரத்த அழுத்தத்தைத் குறைக்கின்றது. புராஸ்டேட் சுரப்பி வீங்குகிறது. புராஸ்டேட் சுரப்பியிலும் முதுகுத்தண்டிலும் புற்றுநோய் ஏற்படுத்துகிறது. சிறுநீரகம் செயலிழக்கின்றது. ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகின்றது. விழிகளின் மிக மெல்லிய இரத்த நாளங்களை விரிவடையச் செய்து பார்வையை பறிக்கிறது. கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் கண்மூடித்தனமான கலாச்சாரத்தை பெருமை பாராட்டுகின்றனர்.

ஹோமியோபதி மனிதனை மனிதனாக நோக்குகிறது. அவனது உடல், மன இயக்கச் சீர்குலைவைச் சரிசெய்து நலத்தை மீட்கிறது. ஆற்றல் ஊட்டுகிறது. பல்வேறு அக, புற நோய்களுக்கும் ஆட்பட்ட மனிதனுக்கு ஹோமியோபதியால் பேருதவி புரிய முடிகிறது. வயிற்றுப்பசி மற்றும் ஜீரணத்தை மையப்படுத்தி (பசியின்மை, அகோரப்பசி, பசித்தும் சாப்பிட இயலாமை, சாப்பிட்டால் வாந்தி, சாப்பிட்டவுடன் வயிற்று வலி என்ற) விதவிதமான நோய்குறிகள் கிளைப்பதைப் போலவே பாலுணர்வை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு குறிகள் வெளிப்படுகின்றன.


அவற்றுக்கான முக்கியமான சில ஹோமியோபதி மருந்துகள் பின்வருமாறு 

1. அக்னஸ் காஸ்டஸ்:

அதிக உடலுறவு அல்லது சுய இன்ப பெண்கள் சக்தியிழப்பு (குறிப்பாக ஆண்கள்).


2. ஓனோஸ் மோடியம்: 

உடலுறவில் வெறுப்பு, இச்சையின்மை (குறிப்பாக பெண்கள்)

3. செலினியம்:

விருப்பம் அதிகம், செயல்திறன் குறைவு, விந்து நீர்த்திருத்தல், விரைவில் விந்து வெளிப்பாடு.

4. கோனியம்: 

பெண் எதிரே நின்றாலே காமவேட்கை, குறி எழுச்சி, விந்து வெளிப்படுதல் மற்றும் காம இச்சையை அடக்கியதால் ஏற்பட்ட பின்விளைவுகள்.

5. புபோ / யுஸ்டிலகோ: 

சுய இன்ப தாகம் அடக்க முடியாமல் தனியே சென்று விட விரும்புதல், தனியறையில் (கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில்) சுய இன்பத்தில்

6. லைகோபோடியம்: 

ஆண்மைக்குறைவு, சிறு வயதிலேயே சுய இன்பப் பழக்கத்தால் ஆண்குறி சிறுத்தல், தளர்தல், வயதானவர்களின் ஆண்மைக்குறைவு.

7. ஸ்டாபிசாக்ரியா: 

அளவு மீறிய சுய இன்பத்தால், பாலுறவால் ஆண்மையின்மை.

8. பாஸ் ஆசிட்: 

மிதமிஞ்சிய உடலுறவால், சுய இன்பப் பழக்கத்தால் பலவீனம், கடுமையான நரம்புத்தளர்ச்சி.

9. காந்தாரிஸ்/ பிக்ரிட் ஆசிட்: 

அதிகமான காம உணர்ச்சியுடன், வலியுடன் உறுப்பு பயங்கரமாக விறைப்படைதல்.

10. டயாஸ்கோரியா: 

பெண்களுடன் உடலுறவு கொள்வது போல் கனவில் விந்து வெளியேறுதல், காலையில் உடல் முழுவதும் வலி.

11. ஆசிட் புளோர்: 

ஒரே பெண்ணிடம் திருப்தியடையாமல் பல பெண்களை விரும்பும் அதிக காமம்.

12. கலாடியம்: 

உடலுறவில் ஆர்வம் அதிகம், குறி விரைப்பின்மை, விந்து வெளிவராமை.

13. நேட்ரம் மூர்: 

தனக்கு மணமாகியிருந்தும் வேறு ஆண் அல்லது பெண்ணை விரும்புதல்.

14. ஓரிகானம் / கிரரியோலா / மூரக்ஸ்: 

பெண்களின் பிறப்புறுப்பில் வேதனையான, உணர்ச்சியுடன் கூடிய சுய இன்பம் செய்ய தீராத ஆவல்.

15. இக்னியா: 

காதல் தோல்வி, உணர்ச்சிகளை மனத்தினுள் புதைத்துக் கொள்ளுதல்.

இன்னும் இவை போல ஏராளமான ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. இவை மனிதனைச் சமநிலைக்கு ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வருகின்றன. செக்ஸ் என்ற ஆற்றல் மிக்க உடலியல் மற்றும் உளவியல் திறனைச் செம்மைப்படுத்துகின்றன.

மனிதன் இயற்கையின் சீமந்த புத்திரன். இயற்கையன்னைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்த செல்லப்பிள்ளை. மனிதனுக்குள் ஆரோக்கியத்தை, ஆற்றல்களை இயற்கை புதைத்து வைத்திருக்கிறது. அவற்றை மிக நேர்த்தியாகப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், ஹோமியோபதி பெருந்துணை புரிகிறது.

(குறிப்பு: கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை அனுபவமும், தகுதியும் உள்ள ஹோமியோ மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரையின் அடிப்படையில்தான் உட்கொள்ள வேண்டாம்.

சிறுநீர் கற்களா? ஆப்ரேஷன் வேண்டாம்? அழைக்கிறது ஹோமியோபதி!



கட்டுரை ஆசிரியர்:Dr.V.வெங்கடாசலம்


சிறுநீர்கற்களை உருவாக்கும் முக்கிய மூலப்பொருட்கள் கால்சியம், ஆக்சலேட், யூரிக்அமிலம், பொதுவாக இவை சிறுநீரில் கரைந்து கழிவுகளாக வெளியேறும். ஆனால் சிலரின் சிறுநீரில் இவை அதிகமிருப்பதால் முழுவதுமாக சிறுநீரில் கரையாமல் படிகங்களாகத் தங்கி, ஒன்றாகிக் கற்களாகின்றன.
மக்களில் 12% பேர்கள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். கற்களைக் கரைக்கவோ, மீண்டும் வராமல் தடுக்கவோ வழியற்ற ஆங்கில மருத்துவத்தில் ஆபரேஷன் மூலம் கற்களை உடைக்க ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை செலவாகிறது.
முன்பு 40, 45 வயதுக்கும் மேல் தோன்றிய இந்நோய் இப்போது 20, 30 வயதினருக்கும் வந்துவிட்டது. உடல் பருமனும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்களும், அதிகளவு உப்பு, கார உணவுகளும், கால்சியம் மாத்திரைகளும் முக்கியக் காரணங்கள்.
எனினும் ஹோமியோபதி பார்வையில் சில கேள்விகள் எழுகின்றன.

12% பேர்களுக்கு மட்டும் ஏன் சிறுநீர்கல் ஏற்படுகிறது?
ஒரே குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது?
ஒரே வகை உணவுப்பழக்கம், குடிநீர், சுற்றுச்சூழலில் வாழ்பவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் ஏன் கற்கள் உருவாகின்றன?

இந்த வினாக்கள் ஹோமியோபதியில் மிக அடிப்படையானவை. சிக்குன்குனியாவானாலும், சிறுநீர்கல்லானாலும் எந்த நோய்களும் எல்லோரையும் தாக்குவதில்லை. உயிராற்றல் பலமிழந்த மனிதர்களையே நோய்கள் முற்றுகையிடுகின்றன. நோயுற்ற மனிதரின் உயிராற்றலை சீர் செய்தால் மட்டுமே நோய்களுக்கு முழு குணம் கிடைக்கும.
ஹோமியோ & மூலிகை மருந்துகள் சிறுநீரகப் செயல்திறனையும், இயற்கையான எதிர்ப்புத்திறனையும் மேம்படுத்துகிறது. இதனால் சிறுநீர்கற்கள் துகள்களாக உடைந்து, வெளியேறுவதோடு, மீண்டும் கற்கள் உருவாகும் நிலை பெருமளவு குறைகிறது. மேலும் ஆண், பெண் சிறுநீர் தொற்றுநோய்களுக்கும் விடுதலை கிடைக்கிறது.
ஹோமியோபதி மருந்துகள் பிறந்த குழந்தை, கர்ப்பிணி, முதியோர் உட்பட யாவரும் உண்ணலாம். பக்கவிளைவு இல்லை. பாதுகாப்பானது. மனித உடல் போர்க்களம் அல்ல! கத்தியும் ஆபரேசனும் வேண்டாம்!.

பெண்களின் செக்ஸ் பிரச்சனைகள் என்ன? தீர்வுகள் என்ன?



கட்டுரை ஆசிரியர்: Dr.V.ஆவுடேஸ்வரி,


ஆங்கில மருத்துவமானாலும் மாற்றுமருத்துவ முறைகள் என்றாலும் ஆண்களின் செக்ஸ் நலப் பிரச்சனைகளைக் கவனிக்கும் அளவுக்கு பெண்களின் செக்ஸ் நலப் பிரச்சினைகளைக் கவனிக்கவில்லை.

இனிய இல்லற வாழ்விற்கு பாலியல் அறிவு அடிப்படையானது. மனித வாழ்வை இயங்கச் செய்வதும் இயக்கி வைப்பதும் 'லிபிடோ' எனும் பாலின்ப வேட்கையே என்று உளவியல் நிபுணர் சிக்மண்ட் ஃபிராய்டு சுட்டிக் காட்டுகிறார். இந்த (லிபிடோ) அடிப்படை உணர்வு பெண்ணுக்கு ஏற்படாமல் போனால், பாலியல் விருப்பமே ஏற்படாமல் அல்லது மிகமிகக் குறைவான விருப்பம் மட்டுமே இருக்குமானால் அதனை HYPOACTIVE SEXUAL DISORDER என்றழைக்கின்றனர். 'செக்ஸ்' மீது வெறுப்புணர்ச்சி மனதில் ஏற்பட்டிருக்குமானால் அதனை SEXUAL AVERSION DISORDER என்றழைக்கின்றனர்.

லிபிடோ குறைபாடும், செக்ஸ் குறித்த வெறுப்பும் அமைந்துள்ள பெண்ணின் மணவாழ்க்கை மயான வாழ்க்கையே. தாம்பத்தியம் எனும் இனிய சங்கீதம் இசைக்க முடியாது.

சில பெண்களுக்கு மனதில் பாலுணர்வுச் சிந்தனைகளும் விருப்பமும் நிறைந்திருக்கும். ஆனால் உடலில் உரிய ரசாயன மாற்றங்கள் நிகழாது. ஆண்களிடம் காணப்படும் ERECTYLE DISORDER  எனப்படும் விறைப்பு பிரச்சினை போல பெண்களிடம் இனப்பெருக்க உறுப்பில் உறவுக்கு முந்திய கிளர்ச்சிநிலை, சுரப்புநீர் (LUBRICATIONG FLUID) தோன்றாமல் பிரச்சினைகள் ஏற்படும்.

சில பெண்களுக்கு பிறப்புறுப்பு தசைகள் இறுக்கமடைந்து விட்டுவிட்டு வலி ஏற்படும். இதனை VAGINISMUS என்பார்கள். இதனால் உடலுறவு என்ற இனிய அனுபவத்திற்கு மாறாக கடுமையான வேதனையை அனுபவிக்க நேரிடும்.

கல்வியும், விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளரும் போது உலகம் உள்ளங்கைக்குள் அடங்கி விடுகிறது. இதில் நன்மைகளும், தீமைகளும் கலந்தே இருக்கின்றன. அதீதமான கட்டுப்பாடுகளை மட்டுமே அனுபவித்த இந்தியப் பெண்ணினம் மேற்கத்திய சுதந்திரமான பெண் வாழ்க்கையை நெருக்கமாய் பார்க்கும் வாய்ப்பு இன்று ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகவும், இதர கலாச்சார சீர்க்கேடுகளாலும் சில பெண்களின் செக்ஸ் வாழ்க்கை தவறான பாதைகளிலும் செல்கிறது. ஓரினச் சேர்க்கை (LESBIANISM), சுய இன்ப அடிமைத்தனம் (MASTURBATION ADDICTION) போன்றவை அதிகரித்து வருகிறது. இவை பெண்களின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கக் கூடியவை. இத்தகைய பெண்களுக்கு உரிய ஆலோசனை, வழிகாட்டுதல், சிகிச்சை வழங்கினால் நிச்சயம் மீள முடியும்.

பெண்களின் அனைத்துப் பாலியல் நலப் பிரச்சினைகளையும், ஹோமியோபதி, பாச் மலர் மருத்துவம், அக்குபஞ்சர் போன்ற இயற்கை முறைச்சிகிச்சைகளில் பக்கவிளைவுகளின்றித் தீர்த்துக் கொள்ள முடியும். பாதிக்கப்பட்ட பெண்களின் உளவியல் ரீதியான, உடல் ரீதியான தனித்தன்மைகளையும், மொத்த அறிகுறிகளையும் ஆய்வு செய்து சிகிச்சை பெறுவதால் எத்தகைய பாலியல் சிக்கல்களுக்கும் எளிய முறையில் தீர்வுகள் கிடைக்கின்றன.

ஹோமியோபதி எனும் பிரமாண்டமான மருத்துவ சமுத்திரத்தில் ஆண், பெண் பாலியல் நலப் பிரச்சினைகளைத் தீர்த்து நலமளிக்கக் கூடிய மருந்துகள் மட்டும் 200-க்கும் மேல் உள்ளன. 38 விதமான மலர் மருந்துகள் உள்ளன. ஆயிரக்கணக்கான பெண்களின் கண்ணீரைத் துடைத்து இன்பமயமான வாழ்க்கைக்கு உதவக்கூடிய மருந்துகள் இவை.


சிகிச்சை பெற தொடர்பு கொள்க:
Dr.S.வெங்கடாசலம் & Dr.V.ஆவுடேஸ்வரி,
தீபம் மாற்றுமுறை மருத்துவமனை,
29/9A பழைய டிரங்க் ரோடு,
சாத்தூர் - 626203.
தொடர்பு: 9443145700.
Althopp@gmail.com

அழகே உன் முகவரி என்ன?



கட்டுரை ஆசிரியர்: Dr.S.வெங்கடாசலம்,


குழந்தை அம்மாவிடம் கேட்கிறாள்வானத்தில் ஏனம்மா இத்தனை நட்சத்திரங்கள்?அம்மா சற்று யோசித்து விட்டு இருட்டாய் இருந்தால் அழகாய் இருக்காது. அதனால் தான் இவ்வளவு நட்சத்திரங்கள் வெளிச்சமாய் மின்னுகின்றன என்றாள். இல்லையம்மா? இரவையும் இருட்டையும் அழகாய் இல்லை என்று ஏன் சொல்கிறாய்? இருட்டில் நடக்கும், கொலை, கொள்ளை, தவறுகள் தானே அசிங்கமானவை? அதைக் கவனிப்பதற்காகத் தான்...... இரவு நேரங்களில் யார் யாரெல்லாம் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்று இறைவன் இத்தனை கண்களால் வானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்னாள் குழந்தை. எதிர்பாராத அருமையான இந்தப் பதிலைக் கேட்டு அன்னையின் மனதில் ஆயிரமாயிரமாய் மகிழ்ச்சிப் பூக்கள் பூத்தன.

குழந்தைகள் விளக்கம் யாரோ சொல்லி நெஞ்சில் பதிந்த கருத்தாக இருக்கலாம். அதைப் பிஞ்சு உதடுகள் மென்மையான சங்கீதக் குரலில் உச்சரிக்கும் போது வசீகரம் அதிகரிக்கிறது. எல்லாக் குழந்தைகளுமே அழகானவர்கள்தான். குழந்தைகள் உதிர்க்கும் மழலைச் சொற்கள் எல்லாமே மொழி இலக்கணம் மீறிய அழகுகள் தான். ஒவ்வொரு தாய்க்கும் தான் சுமந்து பெற்ற பிள்ளையே அழகான பிள்ளை. ஒவ்வொரு பிள்ளைக்கும்.
 
தெருவுக்குத் தெரு காளான்கள் போல் அழகுநிலையங்கள் தோன்றி வருகின்றன. அங்கே எதை அழகுபடுத்துகிறீர்கள்? அழகு விலைக்குக் கிடைக்குமா? எது அழகு? சிவந்த மேனியா? வட்ட முகமா? பவுடர், கிரீம், லிப்ஸ்டிக் பூச்சுக்களா? சுருள் முடியா? வாட்டசாட்டமான உருவமா?
சுட்டெரிக்கும் சூரிய வெயிலை முதுகில் சுமந்தபடி உழைக்கும் பலகோடி ஆண், பெண் உழைப்பாளிகளின் நிறம் கருப்பு. அவர்களின் அன்றாட ஆடைகளில் படிந்துள்ள வியர்வைக் கறையும், அழுக்கும், தூசியும்..... உழைப்பின் அடையாளங்கள். கருப்பு நிறமும் கறைபடிந்த ஆடைகளும் அவலட்சணங்களா?
மகாத்மா காந்தியின் பொக்கைவாய்ச் சிரிப்புப் படம் இந்தியர்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இல்லத்திலும் வீற்றிருப்பதற்கு என்ன காரணம்? அவர் அழகானவர் என்பதாலா? மிகச் சிறந்த மனிதர்கள் நெல்சன் மண்டேலா முதல் காமராஜர் வரை நிறம் கடந்து நேசிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? அழகு என்பது நிறத்தோடும் புறத்தோற்றத்தோடும் மட்டும் சம்பந்தபட்டது என்று எண்ணி மருகுவது பேதைமையல்லவா? 
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சிறிதும் பெரிதுமாய் எண்ணற்ற அழகுகள் நிறைந்திருக்கிள்றன. அன்பு, அறிவு, உழைப்பு, நேர்மை, மனிதநேயம் இவைதானே மிகச்சிறந்த அழகுகள். அழகு குறித்த போதைத்தனமான, பேதைத்தனமான பிரமைகளால் தடுமாறுவோர் அழகு நிலையங்களும், அழகு சாதனங்களுக்கும் பணம் செலவிடுவது போல, மனதை அழகுபடுத்தும், ஆரோக்கியப்படுத்தும் நூல்களுக்கு செலவிடுவதில்லை.

புற அழகில் அதிக நாட்டமுள்ளவர்களில் ஒருபகுதியினர் தங்களைத் தாங்களே அருவருத்து, வெறுத்துக் கொள்ளும் மனநிலை ஏற்படுகிறது. முகத்தில் வெடித்துள்ள இரண்டு பருக்களும், காதோரத்து மருவும், முன்கையில் உள்ள சிறுமச்சமும், நகத்திலுள்ள வெண்புள்ளியும் வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்சனைகளாக மாறிவிடுகின்றன. மற்றொரு பகுதியினருக்கு நோயாளிகளைக் கண்டால் மருத்துவமனைகளைக் கண்டால் மனதிற்கு அலர்ஜி. அருகில் நெருங்கமாட்டார்கள். சுத்தத்திற்கு பிறகுதான் அன்பு, நட்பு, உறவு எல்லாம்! சுத்தப்படுத்துகிறோம் என்று பலமுறை கைகளை,கால்களைக் கழுவும் இவர்களின் மனம் எவ்வளவு அழுக்காக இருந்தாலம் கவலைப்படமாட்டார்கள்.கிருமிகளுக்கும், நோய்களுக்கும் மிகவம் பயப்படுவார்கள். இத்தகையவர்களின் மட்டுமீறிய அருவருப்பு மற்றும் வெறுப்பு உணர்ச்சிகளை மாற்றி மனங்களைச் சுத்தப்படுத்த உதவும் மலர் மருந்து கிராப் ஆப்பிள் (CRAB APPLE) . 

 கிராப் ஆப்பிள் மருந்திற்குரியவர்கள் உடம்பில் எங்கேனும் ஓரிடத்தில் அசுத்தமோ, அழுக்கோ, நிறமாற்றமோ, புண்ணோ, வலியோ.... எது காணப்பட்டாலும் அந்த பாகத்தையே வெட்டி எறிந்து விட வேண்டும் என்கிற மனநிலை கொண்டவர்களாக உள்ளனர். சுவரில் தொங்கும் போட்டோ அல்லது காலண்டர் சற்று சாய்ந்திருந்தாலும் அவர்களின் மன அமைதி குலைந்து விடும். அந்த நிலைமையில் அவர்கள் வேறெந்தச் செயலிலும் மனதைச் செலுத்த முடியாது.

தீவிரமான சுத்தவாதிகளாய் திகழும் கிராப் ஆப்பிள் நபர்கள் அடித்தட்டு மக்களைப் பார்த்து அருவருப்பு அடைவதுண்டு. ஏழை, எளிய பாட்டாளி மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், வசிப்பிடம் எல்லாமே அருவருப்பு ஏற்படுத்தும். கிராப் ஆப்பிள் பேர்வழிகள் தங்கள் அழகையும், அந்தஸ்தையும் பராமரிக்கும் வழிமுறைகள் எல்லாம் ஆடம்பரமானவையாகவே இருக்கும். இத்தகைய மனநிலை உள்ளவர்கள் ஆடம்பரமான நட்சத்திர விடுதிகள், ஆடம்பரமான உணவகங்கள், ஆடம்பரமான ஜவுளிக்கடைகள், ஆடம்பரமான காலணிக் கடைகள் போன்றவற்றையே விரும்பி நாடுவார்கள். இவர்களின் மனநிலையைச் சுத்திகரிக்க கிராப் ஆப்பிள் தேவை.

கலெக்டர் அலுவலகத்தில பணியாற்றும் ஒரு பெண்மணி அடிக்கடி வாந்தி, குமட்டல் ஏற்பட்டு அவஸ்தைப்பட்டார். பலவித சிகிச்சைகளும் நிவாரணமளிக்கவில்லை. அவரை முழுமையாக விசாரித்தோம். அவர் பணியாற்றும் அலுவலக அறையில் மராமத்து வேலைகள் நடப்பதால் வேறொரு அறைக்கு அலுவலகத்தை மாற்றியுள்ளார்கள். அங்குள்ள கழிவறை மற்றம் ஜன்னல் கதவுகளின் அசுத்தங்களால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டது. மதிய உணவு உண்டால் வாந்தி வருகிறது. தண்ணீர் அருந்தினால் குமட்டுகிறது. எப்போதெல்லாம் அருவருப்பு மேலோங்கி குமட்டலும் வாந்தியும் ஏற்பட்டுவிடுகிறது. அப்பெண்மணிக்கு தினசரி மூன்று வேளை கிராப் ஆப்பிள் சாப்பிடுமாறு கொடுத்தனுப்பினோம். இரண்டு நாட்களிலேயே வாந்தி நின்றுவிட்டது. தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்ட பின் கடுமையான அருவருப்பு உணர்ச்சி குறைந்து, மறைந்தது.

பள்ளி மாணவி ஒருவர் சிறு பூச்சிகளைக் கண்டால், கரப்பான், பல்லி போன்றவற்றைக் கண்டால் அருவருத்து, உடல் புல்லரித்துப் போவார். அவரது சகோதரர் தற்செயலாக இது பற்றிக் கூறியதை கேட்ட நாங்கள் ஒரு மாத காலத்திற்கு கிராப் ஆப்பிள் மலர் மாத்திரை சாப்பிடுவதற்கு கொடுத்தனுப்பினோம். மாணவியின் சகோதரர் மறுமுறை சந்தித்த போது ஆச்சரியத்துடன் பாராட்ழனார். 'நீங்க கொடுத்த மருந்து அருமையான மருந்து சார்! ஒருமுறை மழைநாளில் விட்டுக்குள் ஒவ்வாமை போல் தடித்து தடிப்பாய் வந்து மிகவும் சிரமப்பட்டாள். ஆனால் நேற்று மழை பெய்ததைத் தொடர்ந்து தெரு விளக்கைச் சுற்றி மொய்த்த அம்மா எல்லோருமே சந்தோசப்பட்டார்கள்! ரொம்ப நன்றி டாக்டர்!' இது போன்ற எண்ணற்ற சிகிச்சை அனுபவங்களில் பாட்ச் மலர் மருந்துகள் வியக்கத்தக்க வகையில் குணமளிக்கின்றன.

சின்னஞ்சிறிய - அற்பமான பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தம் நபர்கள், அகத்தூய்மை பற்றிய அக்கறை இல்லாமல் புறத்தூய்மை குறித்து வருந்துவோர், சாதாரண மக்களின் தோற்றம் கண்டு மனக்கஷ்டத்திற்கு ஆளாகி, அதனால் அவர்களின் அழைப்பையும் அவர்களையும் மதிக்காத மனிதர்கள், அளவுக்கு அதிகமாக சுத்தம் கடைபிடிப்பவர்கள்....... இவர்கள் அனைவருக்குமே கிராப் ஆப்பிள் பயன்படும். கிராப் ஆப்பிள் மூலம் மற்றவர்களை மதிக்கக் கூடிய மனப்பான்மை, மனிதநேய அணுகுமுறை, தன் குறிகளைத் திருத்திக் கொள்ளும் மனநிலை போன்றவைகளைப் பெறமுடியும். தேவையற்ற அருவருப்பும், இரக்கமற்ற தன்மை, அனாவசிய ஆடம்பரங்களும் விலகி ஓடும். ஏனென்றால் மலர் மருந்துகள் முழு மனிதனையும் சுத்திகரிப்பவை. 

பாட்ச் மலர் மருந்துகள் - மருத்துவத்துறையில் மாபெரும் புரட்சி



கட்டுரை ஆசிரியர்: Dr.V.ஆவுடேஸ்வரி,


பல்வேறு சமுதாய, பொருளாதார, அரசியல் காரணங்களாலும், பாரம்பரியம் மற்றும் வாழ்நிலை, சூழ்நிலைக் காரணங்களாலும் தனிமனித உளவியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. செல்வவளம் நிறைந்த அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட மனச் சோர்வு, குழப்பம், பதட்டம், மனநோய்கள் பெருகி வருகின்றன. காதல் சுதந்திரம் என்ற பெயரில் முதற்காதல், இரண்டாம் காதல், மூன்றாம் காதல்....... என்று தறிகெட்ட நிலை நிலவுகிறது. இருமனங்களின் சங்கம்மாய் காதல் அமையாததால், காதல் திருமணங்கள் அளவிற்கு விவாகரத்துகளும் சாதாரண நிகழ்வுகளாய் அங்கே காணப்படுகின்றன. மனஇயல் நிபுணர்கள் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே செல்கிறது.

சமுதாய அமைப்பும், கலாச்சாரமும் ஆரோக்கியமாக இருந்தால், சுற்றுச் சூழலும், உணவுகளும் ஆரோக்கியமாக இருந்தால் மக்கள் நலமும் சிறப்புற அமையும் மக்களின் நோய் எதிர்ப்பாற்றல் மேம்படும் என்பது உண்மை.ஆரோக்கியம் என்பது பிறப்புரிமை (Birth Right)மனித குலத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்பதற்கும், ஆரோக்கியம் அளிப்பதற்கும் எண்ணற்ற மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் செய்து பலவழிமுறைகளை உருவாக்கியுள்ளனர். அவர்களில் ஹோமியோபதியைக் கண்டுபிடித்த டாக்டர்.ஹானிமன் அவர்களும் மலர்மருத்துவத்தைக் கண்டுபிடித்த டாக்டர்.எட்வர்டு பாட்ச் அவர்களும் முற்றிலும் வித்தியாசமானவர்கள். மனிதனைப் பல உறுப்புகளின் சேர்க்கையாகப் பார்க்கும் ஆங்கில மருத்துவத்தின் எந்திரவியல் அணுகுமுறையிலிருந்து அவர்கள் மாறுபட்டனர். உடலும் மனமும் இணைந்த முழுமையாய் மனிதனை அணுகும் பார்வையை மருத்துவ உலகுக்கு வழங்கினர். 'மனமும் உடலும் ஒன்றையொன்று சார்ந்து சமநிலையில் இருந்தால் ஆரோக்கியம் ஏற்படும். சமநிலையில் பாதிப்பு ஏற்பட்டால் ஆரோக்கியம் கெடும் நோய் ஏற்படும்' என்ற புதிய பார்வையும், பரிணாம வளர்ச்சியும் ஹோமியோபதி & மலர் மருத்துவம் மூலம் மருத்துவ உலகத்திற்குக் கிடைத்தது

லண்டனைச் சேர்ந்த டாக்டர்.எட்வர்டு பாட்ச் M.B.B.S., M.R.C.S., F.R.C.P., D.P.H.,  அவர்களின் நீண்டகால ஆராய்ச்சிகளின் பயனாக உலகத்திற்கு அறிமுகமான அதிநவீனமான, புரட்சிகரமான இயற்கை முறை மனநல மருத்துவமே 'மலர் மருத்துவம்' டாக்டர். பாட்ச் அவர்கள் சீர் குலைந்த மனங்களைச் சீர்படுத்த 38 வித மலர் மருந்துகளை மானிட சமுதாயத்திற்கு வரப்பிரசாதமாக வழங்கியுள்ளார்.

பயங்களைப் போக்கும் மலர் மருந்துகள்



கட்டுரை ஆசிரியர்:டாக்டர்.எஸ்.வெங்கடாசலம்.சாத்தூர்.



உலகில் மனப்பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் யார்? பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் பிரச்சனைகள் என்ற வலைப்பின்னலுக்குள்தான் வாழ்ந்து வருகின்றான். பிரச்சனைகளின் அழுத்தத்தால் மனம் பாதிக்கப்படுகின்றது. மனம் பாதிக்கப்படும்போது மனிதனின் உயிராற்றல் (VITAL FORCE) பாதிக்கப்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, தற்காப்புத்திறன் குறைகிறது. நோய்கள் சூழ்கின்றன.

எனவே நோய்க்கு மட்டும் மருந்தளித்து சிகிச்சை செய்து பயனில்லை. நோயாளி என்ற மனிதருக்கு அவரது மனத்திற்கு சிகிச்சை தேவை. சீர்குலைந்த மனம் செம்மைப்படும்போது ஜீவசக்தியும் செம்மைப்படுகிறது. உடலும் புதுப்பிக்கப்படுகிறது. நோய்கள் நீங்குகின்றன. மனிதன் நலம் பெறுகிறான்.

மனக்குழப்பங்களையும் அதன்பின் விளைவுகளாக ஏற்பட்ட வியாதிகளையும் நீக்கும் உன்னத மருத்துவ குணம் கொண்டவை பாட்ச்மலர் மருந்துகள். மனித இயற்கைக்கு மாறான, எதிர்மறையான மனநிலைகளை, எண்ணங்களை மாற்றியமைத்து உள்ளத்தில் ஆக்கப்பூர்வமான ஆற்றலைப் பெருக்கச் செய்யும் வல்லமை மலர் மருந்துகளுக்கு உண்டு.

வயதுக்கேற்ப, வளர்ப்பிற்கேற்ப, வாழ்க்கை சூழலுக்கேற்ப மனிதர்களிடம் பயம்படிந்து விடுகிறது. எந்த சூழ்நிலையிலும், எது பற்றியும் பயமே கொள்ளாத, பயம் என்றால் என்னவென்றே அறியாத ஒருவரும் உலகில் இருக்க முடியாது ஒவ்வொருவரிடமும் பயம் உள்ளது. அளவும் தன்மையும் மாறுபடலாம். சில பயங்கள் அவசியமானவையாக நியாயமானவையாக அறிவுப்பூர்வமானவையாக இருக்கக்கூடும். பல பயங்கள் அவசியமற்றவை. நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்பவை. நமது பல்வேறு தோல்விகளுக்கு இந்த அநாவசியமான பயங்களே மூலக்காரணங்கள். இத்தகைய பயங்களால் மனச்சமநிலை பாதிக்கப்பட்டு உடலாலும் உள்ளத்தாலும் மனிதன் பலவீனப்படுகிறான். பயம் காரணமாக பதட்டமும், அமைதியற்ற தன்மையும், மகிழ்ச்சியற்ற நிலையும் ஏற்படுகிறது. பயங்களைப் போக்குவதற்கு மலர் மருத்துவமே சிறந்தது.

பொதுவாக பயங்களை அகற்ற "மிமுலஸ்" என்ற மலர் மருந்து அற்புதமாக உதவுகிறது. நமது சமூக அமைப்பில் பெண்களுக்கு வெட்கமும் பயமும் தாய்ப்பாலோடு கலந்து ஊட்டப்படுகிறது. "நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்" என்றான் பாரதி. இங்கே இவை பெண்களின் அடிப்படைக் குணநலன்கள் என்று தவறாகக் கற்பிக்கப்படுவதால் பயம் என்ற நோய்க்கு பெண்கள் அதிகளவில் பலியாகின்றனர். சாதாரண பல்லி, கரப்பான்பூச்சியிலிருந்து துவங்கி பெண்களின் பயங்கள் வாழ்க்கையின் சகல அம்சங்கள் மீதும் பரவிக்கிடக்கின்றன. "மிமுலஸ்" மருந்து மூலம் பயங்களிலிருந்து பெண்கள் விடுபட்டு இயல்பான மனநிலையைப் பெறலாம்.

மேலும் பயந்த சுபாவம் உள்ள ஆண், பெண், இருபாலருக்கும் உதவக்கூடிய மிமுலஸ் இருட்டில் செல்ல பயம் பூட்டிய அறையைத் திறக்க பயம், தனிமையிலிருக்க பயம், தனிமையில் பயணம் செல்லப்பயம், புதியவர்களைக் கண்டால் பயம், கூட்டத்தைக் கண்டால் பயம், இறந்தவர்களைக் கண்டால் பயம், பேய் பிசாசு பயம், பலர் மத்தியில் பேசப்பயம், பயம் காரணமாகத் திக்கித்திக்கிப் பேசுதல், நோய்வந்துவிடும் என்ற பயம், வந்த நோய் முற்றி இறந்து விடுவோம் என்ற பயம், மனிதர்களைக் கண்டு பயம், மிருகங்களைக் பயம் (பாதுகாப்பான நிலையிலும்) திருடர்கள் பயம், எல்லாவற்றிலும் பயம் எதற்கெடுத்தாலும் பயம் என்று பயங்களின் இரும்புப்பிடிக்குள் சிக்கிக் கொள்பவர்களை வெளியேற்றி சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்யும் அரிய மருந்து "மிமுலஸ்".

இரண்டுமுறை கர்ப்பமாகி, முதல் முறை 7வது மாதமும், இரண்டாம் முறை 6வது மாதமும் கருச்சிதைவுக்கு ஆளான பெண் சிகிச்சைக்கு வந்தாள். ஹோமியோ மருந்துகள் அளிக்கப்பட்டன. மூன்றாவது முறையாக கருத்தரித்து (HABITUAL ABORTION)  வழக்கமான கருச்சிதைவுக்கு ஆளாகாமல் 7 மாதமும் கடந்து விட்டது. 8வது மாதத்தில் கருச்சிதைவு நேர்ந்துவிடும் என்று அவள் பயந்தாள். அவளது பயத்தைப்போக்கி சுகப்பிரசவத்திற்குத் துணை புரிந்த மருந்து "மிமுலஸ்".

அண்ணன் வெளிநாடு செல்லும்போது தம்பியிடம் கடை வியாபாரத்தை ஒப்படைத்துச் செல்கிறார். அன்றுமுதல் தம்பியின் மனநிலை பாதிக்கப்படுகிறது. தன்னால் கடை வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இல்லாததால் பயமும் பதட்டமும் அவரை அலைக்கழித்தது. அவருக்கு "மிமுலஸ்" என்ற மருந்தும், "லார்ச்" என்ற மருந்தும் அளிக்கப்பட்டது. விரைவில் நலமடைந்து, வியாபாரத்தில் ஆர்வமும் அக்கரையும் காட்டி நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறார்.

சில பயங்கள் காரணங்களின்றி வரக்கூடும். இதற்குரிய மருந்து "ஆஸ்பென்" இத்தகைய காரணகாரியமற்ற பயம் இரவிலோ, பகலிலோ எப்போது வேண்டுமானாலும் எந்த இடத்திலும் ஏற்படலாம். திடீரென உள்ளத்தைப் பயம் ஆக்கிரமிக்கும். பதட்டம் ஏற்படுத்தும் சகஜத்தன்மைகள் கெடும். வியர்த்துப் பரபரத்து பயத்தின் ரேகைகள் படித்த தோற்றத்துடன் காணப்படும். இவர்களிடம் என்னவென்று விசாரித்தால் "என்னவென்று தெரியவில்லை. ஏதோ ஒரு மாதிரி (பயம்) ஏற்படுகிறது" என்பார்கள்.

இவர்களது பயங்களுக்கான அடிப்படைகளை நாமும் அறிய இயலாது. இவர்களாலும் எடுத்துச் சொல்ல இயலாது. இவர்களது பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பயன்படும் மலர்மருந்து "ஆஸ்பென்".

நள்ளிரவில் விழிப்பு ஏற்பட்டு மிகவும் பதட்டமடைந்து பின்னர் விடியும் வரை தூக்கமின்றி தவித்த இளைஞர் ஒருவர் வந்தார். தனக்கு ரத்த அழுத்தமோ, உடல்நோய்களோ, மனம் சார்ந்த வேறு பிரச்சனைகளோ இல்லை என்றும், ஆனாலும் கடந்த சில நாட்களாக நடு இரவில் பயஉணர்ச்சி ஆட்கொண்டு உடல் பலமே இல்லாததுபோல் காணப்படுகிறது. பாதுகாப்பற்ற உணர்வு உண்டாகிறது என்று கூறினார். அவரது அறையில் பல கடவுள் படங்கள் மாட்டப்பட்டன. இரவு உறங்கச் செல்லும்முன் மிகுந்த பக்தியுடன் கும்பிட்டு விபூதியிட்டுக்கொண்டு உறங்கச் செல்லத் துவங்கினார். கடவுள் நம்பிக்கை கொண்ட அவருக்கு சற்றே மன ஆறுதல் தென்பட்டாலும் நள்ளிரவில் காரணமின்றி வரும் பயம் நீங்கவில்லை. அவருக்கு சுமார் 3 வாரங்கள் "ஆஸ்பென்" மருந்தளித்தபின் முழு நலமடைந்தார். நிம்மதியான தூக்கம் அவரைத் தழுவிக்கொண்டது.

பொதுவாக பயங்களைப் போக்கப் பயன்படும் மருந்து "மிமுலஸ்" என்றாலும் அதீதமான பயங்களுக்கும், மிரட்சிக்கும், பீதியடைதலுக்கும் (EXTREME FEAR & PANIC) "ராக்ரோஸ்" என்ற மலர் மருந்தே ஏற்றது. மனவலிமையும் தைரியமும் நிறைந்த நபர்கள் கூட சில அதிர்ச்சியூட்டும் சூழ்நிலைகளில் பீதியடையத்தான் செய்வார்கள். ஆனால் இம்மனநிலை தற்காலிகமானதாக இல்லாமல் நீடித்தால் "ராக்ரோஸ்" சிறப்பாகப் பயன்படும்.

தீ விபத்தோ, வாகன விபத்தோ, திடீர் வெள்ளம், புயல் போன்ற வேறு விபத்துக்களோ நடந்த இடங்களில் உள்ளவர்களிடம் பீதியும் உச்சகட்ட அச்சங்களும் காணப்படும். இம்மனநிலை நம்மைச் செயலிழக்கச் செய்யும். சில தந்திச் செய்திகள் நமது சந்தோசங்களைப் பறித்து விடும். பெரும் அச்சம் கலந்த வேதனையை ஊற்றெடுக்கச் செய்து விடும்.

காது இரைச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்தார் ஒரு மூதாட்டி. தொடர்ந்து சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்செயலாக ஒருமுறை சில ஆண்டு முன் அவரது வீட்டில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தினைப் பற்றியும் அவர் அதில் பட்டபாடு பற்றியும் அதன் பின்னரே காது இரைச்சல் வந்தது என்றும் தெரியப்படுத்தினார். அவருக்கு சில மாதகாலம் "ராக்ரோஸ்" மலர் மருந்தும் சேர்த்து அளிக்கப்பட்டதால் முழுநிவாரணம் பெற்றார்.

பயங்களைப் பற்றிப் பயம் வேண்டாம். மலர் மருந்துகள் நமது பயங்களைப் போக்கும். மனதில் உறுதியும் தெளிவும் பிறக்கச் செய்யும். 

மங்கையர் பிரச்சனைகள் தீர்க்கும் மலர் மருந்துகள்


கட்டுரை ஆசிரியர்:டாக்டர் வி.ஆவுடேஸ்வரி



"மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!" என்று பாடினார் கவிமணி தேசிக விநாயகம்.
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்" என்று பாடினான் பாரதி.
"கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கே
வேரில் பழுத்த பலா" என்று புதிய குரல் எழுப்பினார் பாரதிதாசன்.

பெண்ணை உயிருடன் நெருப்பில் வீழ்த்தும் சதி பழக்கத்திற்கு எதிராக ஆவேசமாகப் போராடினார் ராஜாராம்மோகன்ராய்.

பெண் சமத்துவத்துக்காகவும், பெண் சொத்துரிமைக்காகவும், விதவை மறுமணத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் தந்தை பெரியார். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பெண்ணுரிமைக்குப் போராடிய ஆண்களே அதிகம்.

 பெண்களுக்குப் பெருமை சேர்த்த இந்த ஆண்களின் வரிசையில் டாக்டர்.ஹானிமன் அவர்களையும் டாக்டர்.எட்வர்டு பாட்ச் அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

 பெண்ணாக ஏன் பிறந்தோம் எனத் துயரப்படும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் அமைந்துவிடுகின்றன. பூப்படைவதும் மாதாந்திரப் போக்கும், கர்ப்பமும், பிரசவித்தலும், மாதவிடாய் நிற்றலும் பெண்ணின் வாழ்வில் இயற்கையான நிகழ்வுப் போக்குகள் என்றாலும் அவை ஒவ்வொன்றையும் அவஸ்தையூட்டும் அனுபவங்களாக துயரமான மைல் கற்களாக கடந்து செல்ல வேண்டியுள்ளது.

 பெண்ணின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடைக்கற்களாக இருக்கும் அனைத்தையும் தகர்ப்பதில் சமூக சீர்திருத்தவாதிகள் மிகப்பெரும் போராட்டங்கள் நடத்தியிருக்கின்றனர். நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பெண்களின் உடலியல், மனவியல் ஆரோக்கியத்தில் ஏற்படும் தடைகளை அகற்ற டாக்டர்.ஹானிமன் உலகுக்களித்த ஹோமியோபதி மருத்துவமும், டாக்டர்.எட்வர்டு பாட்ச் கண்டுபிடித்த மலர் மருத்துவமும் மட்டுமே பிரமிக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.

பெண்கள் பருவமடைந்த காலம் முதல் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு ஏற்பட்டுள்ள நாட்களிலும் பல சிரமங்களைக் கடக்க வேண்டியுள்ளது. இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் 11, 12, 13 வயதுகளில் பருவ மலர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. அப்போதிருந்து ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு துவங்குவதற்கு ஒரு சில நாள் முன்னரே உடலிலும் மனதிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதை PREMENSTRUAL SYNDROME என்றழைக்கின்றனர். இந்த நேரங்களில் மனச்சமநிலை சீர்குலைகிறது. அன்றாட வாழ்வின் சின்னச் சின்ன சந்தோசங்களும் காணாமல் போகும். கருமேகம் போல் ஒருவித மனச்சோர்வு வட்டமிடும். பலவிதக் கவலைகள் கிளர்ந்தெழும். தற்காலிகமான இந்தச் சோர்வுத் தாக்குதலை விரட்டி மனநிலையில் சமநிலை கொண்டுவர "மஸ்டார்டு" என்ற மலர் மருந்து உதவுகிறது.

பிறர் மீது எறிந்து விழுதலும், திடீரென புயல் போல் சீற்றத்தோடு வந்து போகும் கோபமும், நிதானமின்மையும் இருக்கும் பெண்களின் உளப்போராட்டங்களைத் தணித்து அமைதிப்படுத்த "இம்ப்பேஷன்ஸ்" என்ற மலர் மருந்து துணை புரியும். சில பெண்களுக்கு கோபம், எரிச்சல் அல்லது வலி போன்றவை சிறிதும் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு விசுவரூபம் எடுத்துவிடும். இத்தகைய நிலைமைக்கு ஆட்படும் பெண்கள் குழந்தைகளை அடித்தல், பொருட்களை உடைத்தல், மோசமாக நடந்து கொள்ளுதல், கூப்பாடு போடுதல் போன்ற செயல்களில் இறங்கி விடுவார்கள். இவர்களை "செர்ரிப்பழம்" என்ற மலர் மருந்து அமைதிப்படுத்தும், உணர்ச்சி வேகங்களைக் கட்டுப்படுத்தும் திறனை மனதுக்கு வழங்கும்.

பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் பெண்களில் பலர் நிகழ்காலத்தைப் பற்றி எண்ணாமல், திட்டமிடாமல், செயல்படாமல் வருங்காலக் கனவுகளிலேயே மூழ்கிக்கிடப்பதுண்டு. இவர்களுக்குக் கனவுகளும், சினிமாக்களும், கற்பனைச் சித்திரங்களும், பாடல்களும் இனிக்கும். கல்வியும், முயற்சியும், உழைப்பும் கசக்கும். சினிமா நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும், பகட்டான வாலிபர்களையும் நினைவில் வைத்துக்கொண்டே - பகல் கனவில் லயித்துக் கொண்டே வாழ்க்கையின் வளர்ச்சிக்குரிய நேரங்களைப் பாழத்து வரும் பெண்களை எதார்த்த உலகிற்கு அழைத்து வரும் திறன் படைத்த மலர் மருந்து "கிளெமேட்டிஸ்".

எப்போதும் தன் தோற்றம், நிறம், அழகு, முகப்பொலிவு பற்றியே சில பெண்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். முகத்தில் பருக்களோ, சின்னஞ்சிறு நிறமாற்றமோ, புள்ளிகளோ, தேமலோ தென்பட்டால் இவர்கள் படும் வேதனைக்கு அளவில்லை. இவர்களின் மனநிலையில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படுத்தப் பயன்படும் மருந்து "கிராப் ஆப்பிள்" தன் அழகைக் கெடுக்கிறதே என்று அங்கலாய்க்கிற அருவருக்கிற விஷயங்கள் பருக்கள் என்றாலும் மருக்கள் என்றாலும் "கிராப் ஆப்பிள்" அவற்றையும் மறையச் செய்கிறது. மனமும் உடலும் ஒரே நேரத்தில் சுத்திகரிக்கப்படுகின்றது.

பொதுவாகப் பெண்களுக்கு அதிகம் பயன்படக்கூடிய மருந்து "வால்நட்" முதல் மாதவிலக்கு முதல் மாதவிலக்கு சுழற்சி முற்றுப்பெறும் காலம் வரை பல்வேறு கட்டங்களில் எல்லா பெண்களுக்கும் "வால்நட்" பயன்படும். பருவமடையும் போது உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஒருவித பதட்டம், அச்சம், குழப்பம் பீடிக்கிறது. ஒவ்வொரு மாதவிடாயின் போதும் மாதவிடாய்க்கு முன்பும், கர்ப்ப காலத்திலும், பிரசவ காலத்திலும் உடலில் ஏற்படும் மாற்றங்களால் மனதிலும் அலை அலையாய் உணர்ச்சி மாற்றங்கள் நிகழ்கின்றன. மாதவிடாய் நிற்கும் (MENOPAUSE) காலத்தில் ஏற்படும் உடலியல் திருப்பங்களால் மனநிலைகளில் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. அமைதி குலைகிறது. மணமானபின் பெற்றோரை பிரிந்து வளர்ந்த இல்லத்தைப் பிரிந்து செல்லும்போது ஏற்படும் கடுமையான துக்கம், கணவர் வீட்டின் புதிய சூழலுக்குத் தன்னைப் பொருத்திக் கொள்ள இயலாத சிரமம் அனைத்துக்கும் நிவாரணம் "வால்நட்". புதிய சூழ்நிலைகளையும் புதிய மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை "வால்நட்" வழங்குகிறது. ஒவ்வொரு பெண்ணின் கைப்பையிலும் இருக்க வேண்டிய மலர் மருந்து "வால்நட்".

இவைதவிர இன்னும் பல மலர் மருந்துகள் பெண்களின் மனப்பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகின்றன. கவலைகளையும், துயரங்களையும் அடக்கி வைத்ததன் பின்விளைவுகளாக வந்த உடல்நல, மனநல பாதிப்புகளுக்கும், காதல் தோல்வியால் ஏற்படும் மனப்பாதிப்புகளுக்கும், உடலுறவு ஆர்வமே இல்லாததால் அல்லது உடலுறவு சம்பந்தமாக அருவருப்பு ஏற்படுவதால் அல்லது கணவர் மீது விவரிக்க இயலாத வெறுப்புணர்ச்சி ஏற்படுவதால் அன்றாடம் நிகழும் தாம்பத்திய வாழ்க்கைப் பாதிப்புகளுக்கும், தாய்மையடைந்த நிலையில் மற்றும் பிரசவ காலத்தில் ஏற்படும் பயம், பதட்டங்கள், கற்பனைக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு மலர் மருந்துகள் உதவி புரியும். மேலும் கணவரிடமோ, குழந்தைகளிடமோ, அன்பாக நடக்க இயலாமை அல்லது அவர்கள் குறித்து சந்தேகம், அதீதக் கவலை கொள்ளுதல், மணமான பின்னரும் முன்பு பழகிய ஆணுடன் தொடர்பு கொள்ளுதல், அவரை மறக்க இயலாமையில் தவித்தல், குடும்பத்தை நிர்வகிக்க இயலுமா, குழந்தை வளர்க்க இயலுமா என்று தன்னம்பிக்கையற்று இருத்தல், சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் அதிகமான பாலுணர்வுக் கிளர்ச்சிகளுக்கு ஆளாகி சுயஇன்பப் பழக்கத்திற்கு அடிமையாதல், ஓரினக்காதலில் ஏற்படுதல், பல ஆண்களுடன் உறவு கொள்ளுதல் போன்ற பல்வேறு மனரீதியான சிக்கல்களைத் தீர்க்க மலர் மருந்துகள் பேருதவி புரியும். செர்ரிப்பளம், ரெட்செஸ்ட்நட், ஹால்லி, வில்லோ, வால்நட், ஹனிசக்கிள், லார்ச் போன்ற மலர் மருந்துகள் மேற்கண்ட பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்.

"நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை" என்பது நூற்றுக்கு நூறு உண்மை. பண்டிகை நாட்கள் உட்பட எந்த நாளும் பெண்களுக்கு ஓய்வு இல்லை. விசேஷ நாட்களில் விருந்தினர்களுக்கும் சேர்த்து வீட்டு வேலைகளைப் பார்க்க வேண்டிய பெண்கள் எளிதில் பலவீனம் அடைந்து விடுகின்றனர். மேலும் கணவருக்கோ, குடும்பத்தில் வேறு ஒருவருக்கோ உடல்நிலை சரியில்லாமல் மருத்துவம் பார்க்கும்போது, இரவு பகல் விழித்து அவர்களைப் பராமரிப்பதால் பெண்கள் கடும்சோர்வையும், தூக்கமின்மை, பசியின்மை, ஜீரணக் கோளாறுகளையும் சந்திக்கின்றனர். இவர்களுக்கு வால்நட், ஆலிவ், ஹார்ன்பீம், சென்டாரி போன்ற மலர் மருந்துகள் நிச்சயமாக நிவாரணமளிக்கும்.

பிரச்சனைகளின் கால அளவு, தன்மையைப் பொறுத்து மலர் மருத்துவச் சிகிச்சை சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் வரை தேவைப்படலாம். மங்கையரின் மனப்பிரச்சனைகள் தீர்க்க, மனநிலைகளில் மலர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்படுத்த சிறந்த மருத்துவம் மலர் மருத்துவம். 

மாற்று மருத்துவம் - தெரிந்து கொள்ளுங்கள்




மனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் உள்ள நோய்களை முறியடிப்பதிலும், நோயற்ற உலகம் அமைப்பதிலும் உலகம் முழுவதும் சுமார் 150 மாற்று மருத்துவங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. இவற்றில் ஜெர்மன் ஹோமியோபதி, சீன அக்குப்பஞ்சர், லண்டன் மலர் மருத்துவம், இந்திய ஆயுர்வேதம், சித்தமருத்துவம், அரபு யுனானி மற்றும் இயற்கை, யோகா, மூலிகை மருத்துவங்கள் போன்றவை மிக முக்கியமானவை. மாற்று மருத்துவங்களின் அடிப்படைத் தத்துவங்களும், சிகிச்சை முறைகளும் ஆங்கில மருத்துவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. திட்டவட்டமான அனுபவச் சோதனைகளால் நிறுவப்பட்டவை. உலக நல நிறுவனத்தால் (W.H.O.)  அங்கீகரிக்கப்பட்டவை. மனித உடலிலுள்ள இயற்கையான உயிர்ச்சக்தி (VITAL FORCE) ஓட்டத்தில் உள்ள குறைபாடுகள், தடைகள் காரணமாக நோய்கள் உருவாகின்றன என்பது மாற்று மருத்துவ நோயியல் தத்துவம். நோயுற்ற மனிதனின் உடலை மட்டுமின்றி பசி, தாகம், கோபம், சந்தேகம், விருப்பு வெறுப்புகள், கனவுகள் போன்றவற்றையும், ஒவ்வொரு மனிதரிடமிருந்து பிரித்துக்காட்டும் தனித்தன்மைகளையும், உணர்வு நிலைகள், மனநிலைகள், குடும்பச் சூழ்நிலைகள் போன்றவற்றையும் தீர விசாரித்து முழுமையாக ஆய்வு செய்து (HOLISTIC APPROACH) மாற்று மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுவாக நோய் குணமாகும்போது மூன்றுவித நிகழ்வுகள் ஏற்படுகின்றன. 1.நோய்கள் உள்ளமுக்கப்படுதல் (SUPPRESSION) 2.தற்காலிக நிவாரணம் பெறுதல் (PALLIATION)  3.முழு நலம் அடைதல் (CURE). மாற்று மருத்துவங்களின் நோக்கம் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து நிவாரணம் மட்டுமின்றி முழுநலத்தையும் அடைதல் என்பதை மையமாகக் கொண்டது.

 ஹோமியோபதி, அக்குப்பஞ்சர், மலர் மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் போன்ற மாற்று மருத்துவங்களில் சிறப்புத்தன்மைகளும் நன்மைகளும் ஏராளம். பக்கவிளைவுகள், பின்விளைவுகள் இல்லை. மாற்று மருத்தவ சிகிச்சையில் உள்ளவர்களை எளிதில் தொற்று நோய்கள் நெருங்காது. சயரோகம் (T.B.) புற்றுநோய் (CANCER) போன்ற பெருநோய்கள் ஏற்படாது. டெங்குசுரம், சிக்குன்குனியா போன்ற சவாலான நோய்களை ஹோமியோ, சித்தா, அக்குப்பஞ்சர் சிகிச்சைகள் மூலம் முழுமையாக நலப்படுத்தியதை நாடு அறியும். ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்தவே இயலாது என்று கூறும் பலவித தோல்நோய்கள், மனநோய்கள், ஆட்கொல்லி நோய்களை மாற்று மருத்துவங்கள் மூலம் பெருமளவு முன்னேற்றம் காணமுடியும். பெரும்பாலான அறுவைச் சிகிச்சைகளை தவிர்க்க முடியும். அனைத்திற்கும் மேலாக ஒப்பீட்டு ரீதியில் ஹோமியோ, அக்குப்பஞ்சர் போன்ற சிகிச்சைகளில் பணச்செலவு மிகக்குறைவு.