புதிய பதிவுகள்

Monday, August 8, 2011

அழகே உன் முகவரி என்ன?



கட்டுரை ஆசிரியர்: Dr.S.வெங்கடாசலம்,


குழந்தை அம்மாவிடம் கேட்கிறாள்வானத்தில் ஏனம்மா இத்தனை நட்சத்திரங்கள்?அம்மா சற்று யோசித்து விட்டு இருட்டாய் இருந்தால் அழகாய் இருக்காது. அதனால் தான் இவ்வளவு நட்சத்திரங்கள் வெளிச்சமாய் மின்னுகின்றன என்றாள். இல்லையம்மா? இரவையும் இருட்டையும் அழகாய் இல்லை என்று ஏன் சொல்கிறாய்? இருட்டில் நடக்கும், கொலை, கொள்ளை, தவறுகள் தானே அசிங்கமானவை? அதைக் கவனிப்பதற்காகத் தான்...... இரவு நேரங்களில் யார் யாரெல்லாம் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்று இறைவன் இத்தனை கண்களால் வானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்னாள் குழந்தை. எதிர்பாராத அருமையான இந்தப் பதிலைக் கேட்டு அன்னையின் மனதில் ஆயிரமாயிரமாய் மகிழ்ச்சிப் பூக்கள் பூத்தன.

குழந்தைகள் விளக்கம் யாரோ சொல்லி நெஞ்சில் பதிந்த கருத்தாக இருக்கலாம். அதைப் பிஞ்சு உதடுகள் மென்மையான சங்கீதக் குரலில் உச்சரிக்கும் போது வசீகரம் அதிகரிக்கிறது. எல்லாக் குழந்தைகளுமே அழகானவர்கள்தான். குழந்தைகள் உதிர்க்கும் மழலைச் சொற்கள் எல்லாமே மொழி இலக்கணம் மீறிய அழகுகள் தான். ஒவ்வொரு தாய்க்கும் தான் சுமந்து பெற்ற பிள்ளையே அழகான பிள்ளை. ஒவ்வொரு பிள்ளைக்கும்.
 
தெருவுக்குத் தெரு காளான்கள் போல் அழகுநிலையங்கள் தோன்றி வருகின்றன. அங்கே எதை அழகுபடுத்துகிறீர்கள்? அழகு விலைக்குக் கிடைக்குமா? எது அழகு? சிவந்த மேனியா? வட்ட முகமா? பவுடர், கிரீம், லிப்ஸ்டிக் பூச்சுக்களா? சுருள் முடியா? வாட்டசாட்டமான உருவமா?
சுட்டெரிக்கும் சூரிய வெயிலை முதுகில் சுமந்தபடி உழைக்கும் பலகோடி ஆண், பெண் உழைப்பாளிகளின் நிறம் கருப்பு. அவர்களின் அன்றாட ஆடைகளில் படிந்துள்ள வியர்வைக் கறையும், அழுக்கும், தூசியும்..... உழைப்பின் அடையாளங்கள். கருப்பு நிறமும் கறைபடிந்த ஆடைகளும் அவலட்சணங்களா?
மகாத்மா காந்தியின் பொக்கைவாய்ச் சிரிப்புப் படம் இந்தியர்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இல்லத்திலும் வீற்றிருப்பதற்கு என்ன காரணம்? அவர் அழகானவர் என்பதாலா? மிகச் சிறந்த மனிதர்கள் நெல்சன் மண்டேலா முதல் காமராஜர் வரை நிறம் கடந்து நேசிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? அழகு என்பது நிறத்தோடும் புறத்தோற்றத்தோடும் மட்டும் சம்பந்தபட்டது என்று எண்ணி மருகுவது பேதைமையல்லவா? 
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சிறிதும் பெரிதுமாய் எண்ணற்ற அழகுகள் நிறைந்திருக்கிள்றன. அன்பு, அறிவு, உழைப்பு, நேர்மை, மனிதநேயம் இவைதானே மிகச்சிறந்த அழகுகள். அழகு குறித்த போதைத்தனமான, பேதைத்தனமான பிரமைகளால் தடுமாறுவோர் அழகு நிலையங்களும், அழகு சாதனங்களுக்கும் பணம் செலவிடுவது போல, மனதை அழகுபடுத்தும், ஆரோக்கியப்படுத்தும் நூல்களுக்கு செலவிடுவதில்லை.

புற அழகில் அதிக நாட்டமுள்ளவர்களில் ஒருபகுதியினர் தங்களைத் தாங்களே அருவருத்து, வெறுத்துக் கொள்ளும் மனநிலை ஏற்படுகிறது. முகத்தில் வெடித்துள்ள இரண்டு பருக்களும், காதோரத்து மருவும், முன்கையில் உள்ள சிறுமச்சமும், நகத்திலுள்ள வெண்புள்ளியும் வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்சனைகளாக மாறிவிடுகின்றன. மற்றொரு பகுதியினருக்கு நோயாளிகளைக் கண்டால் மருத்துவமனைகளைக் கண்டால் மனதிற்கு அலர்ஜி. அருகில் நெருங்கமாட்டார்கள். சுத்தத்திற்கு பிறகுதான் அன்பு, நட்பு, உறவு எல்லாம்! சுத்தப்படுத்துகிறோம் என்று பலமுறை கைகளை,கால்களைக் கழுவும் இவர்களின் மனம் எவ்வளவு அழுக்காக இருந்தாலம் கவலைப்படமாட்டார்கள்.கிருமிகளுக்கும், நோய்களுக்கும் மிகவம் பயப்படுவார்கள். இத்தகையவர்களின் மட்டுமீறிய அருவருப்பு மற்றும் வெறுப்பு உணர்ச்சிகளை மாற்றி மனங்களைச் சுத்தப்படுத்த உதவும் மலர் மருந்து கிராப் ஆப்பிள் (CRAB APPLE) . 

 கிராப் ஆப்பிள் மருந்திற்குரியவர்கள் உடம்பில் எங்கேனும் ஓரிடத்தில் அசுத்தமோ, அழுக்கோ, நிறமாற்றமோ, புண்ணோ, வலியோ.... எது காணப்பட்டாலும் அந்த பாகத்தையே வெட்டி எறிந்து விட வேண்டும் என்கிற மனநிலை கொண்டவர்களாக உள்ளனர். சுவரில் தொங்கும் போட்டோ அல்லது காலண்டர் சற்று சாய்ந்திருந்தாலும் அவர்களின் மன அமைதி குலைந்து விடும். அந்த நிலைமையில் அவர்கள் வேறெந்தச் செயலிலும் மனதைச் செலுத்த முடியாது.

தீவிரமான சுத்தவாதிகளாய் திகழும் கிராப் ஆப்பிள் நபர்கள் அடித்தட்டு மக்களைப் பார்த்து அருவருப்பு அடைவதுண்டு. ஏழை, எளிய பாட்டாளி மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், வசிப்பிடம் எல்லாமே அருவருப்பு ஏற்படுத்தும். கிராப் ஆப்பிள் பேர்வழிகள் தங்கள் அழகையும், அந்தஸ்தையும் பராமரிக்கும் வழிமுறைகள் எல்லாம் ஆடம்பரமானவையாகவே இருக்கும். இத்தகைய மனநிலை உள்ளவர்கள் ஆடம்பரமான நட்சத்திர விடுதிகள், ஆடம்பரமான உணவகங்கள், ஆடம்பரமான ஜவுளிக்கடைகள், ஆடம்பரமான காலணிக் கடைகள் போன்றவற்றையே விரும்பி நாடுவார்கள். இவர்களின் மனநிலையைச் சுத்திகரிக்க கிராப் ஆப்பிள் தேவை.

கலெக்டர் அலுவலகத்தில பணியாற்றும் ஒரு பெண்மணி அடிக்கடி வாந்தி, குமட்டல் ஏற்பட்டு அவஸ்தைப்பட்டார். பலவித சிகிச்சைகளும் நிவாரணமளிக்கவில்லை. அவரை முழுமையாக விசாரித்தோம். அவர் பணியாற்றும் அலுவலக அறையில் மராமத்து வேலைகள் நடப்பதால் வேறொரு அறைக்கு அலுவலகத்தை மாற்றியுள்ளார்கள். அங்குள்ள கழிவறை மற்றம் ஜன்னல் கதவுகளின் அசுத்தங்களால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டது. மதிய உணவு உண்டால் வாந்தி வருகிறது. தண்ணீர் அருந்தினால் குமட்டுகிறது. எப்போதெல்லாம் அருவருப்பு மேலோங்கி குமட்டலும் வாந்தியும் ஏற்பட்டுவிடுகிறது. அப்பெண்மணிக்கு தினசரி மூன்று வேளை கிராப் ஆப்பிள் சாப்பிடுமாறு கொடுத்தனுப்பினோம். இரண்டு நாட்களிலேயே வாந்தி நின்றுவிட்டது. தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்ட பின் கடுமையான அருவருப்பு உணர்ச்சி குறைந்து, மறைந்தது.

பள்ளி மாணவி ஒருவர் சிறு பூச்சிகளைக் கண்டால், கரப்பான், பல்லி போன்றவற்றைக் கண்டால் அருவருத்து, உடல் புல்லரித்துப் போவார். அவரது சகோதரர் தற்செயலாக இது பற்றிக் கூறியதை கேட்ட நாங்கள் ஒரு மாத காலத்திற்கு கிராப் ஆப்பிள் மலர் மாத்திரை சாப்பிடுவதற்கு கொடுத்தனுப்பினோம். மாணவியின் சகோதரர் மறுமுறை சந்தித்த போது ஆச்சரியத்துடன் பாராட்ழனார். 'நீங்க கொடுத்த மருந்து அருமையான மருந்து சார்! ஒருமுறை மழைநாளில் விட்டுக்குள் ஒவ்வாமை போல் தடித்து தடிப்பாய் வந்து மிகவும் சிரமப்பட்டாள். ஆனால் நேற்று மழை பெய்ததைத் தொடர்ந்து தெரு விளக்கைச் சுற்றி மொய்த்த அம்மா எல்லோருமே சந்தோசப்பட்டார்கள்! ரொம்ப நன்றி டாக்டர்!' இது போன்ற எண்ணற்ற சிகிச்சை அனுபவங்களில் பாட்ச் மலர் மருந்துகள் வியக்கத்தக்க வகையில் குணமளிக்கின்றன.

சின்னஞ்சிறிய - அற்பமான பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தம் நபர்கள், அகத்தூய்மை பற்றிய அக்கறை இல்லாமல் புறத்தூய்மை குறித்து வருந்துவோர், சாதாரண மக்களின் தோற்றம் கண்டு மனக்கஷ்டத்திற்கு ஆளாகி, அதனால் அவர்களின் அழைப்பையும் அவர்களையும் மதிக்காத மனிதர்கள், அளவுக்கு அதிகமாக சுத்தம் கடைபிடிப்பவர்கள்....... இவர்கள் அனைவருக்குமே கிராப் ஆப்பிள் பயன்படும். கிராப் ஆப்பிள் மூலம் மற்றவர்களை மதிக்கக் கூடிய மனப்பான்மை, மனிதநேய அணுகுமுறை, தன் குறிகளைத் திருத்திக் கொள்ளும் மனநிலை போன்றவைகளைப் பெறமுடியும். தேவையற்ற அருவருப்பும், இரக்கமற்ற தன்மை, அனாவசிய ஆடம்பரங்களும் விலகி ஓடும். ஏனென்றால் மலர் மருந்துகள் முழு மனிதனையும் சுத்திகரிப்பவை. 

No comments:

Post a Comment